)
8th Pay Commission Implementation: நாட்டின் சுமார் 1 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜனவரி 1, 2026 -க்காக காத்திருக்கிறார்கள். 8வது ஊதியக்குழு அமலுக்கு வர வேண்டிய நாள் அது. இதற்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு பற்றிய கணக்கீடுகள் வேகமாக பரவி வருகின்றன. அனைவரும் அதிகரித்த வருமானம் பற்றிய கனவுகளில் மூழ்கியுள்ளனர்.
நிதர்சனம் என்ன? 8வது ஊதியக்குழு எப்போது வரும்?
- ஒரு பக்கம் பல மதிப்பீடுகள் வந்துகொண்டிருக்க, மறுபக்கம், இது குறித்த சமூக ஊடக பதிவுகள் எதிர்பார்ப்புகளை பன்மடங்கு அதிகரித்து வருகின்றன.
- இதற்கிடையில், நாட்டின் இரண்டு பெரிய மற்றும் புகழ்பெற்ற தரகு நிறுவனங்களான ஆம்பிட் கேபிடல் மற்றும் கோடக் செக்யூரிட்டீஸ், இந்த எதிர்பார்ப்புகளை எள்ளி நகையாடும் வகையில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளன.
- ஒன்றல்ல, இரண்டு அறிக்கைகள் ஊழியர்கள் 8வது சம்பள கமிஷனுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளன.
Ambit Capital மற்றும் Kotak Securities கொடுத்த அதிர்ச்சி
- இரண்டு தரகு நிறுவனங்களும் இப்படிபட்ட அறிக்கையை கொடுத்திருப்பதற்குப் பின்னால் இரண்டு பெரிய காரணங்கள் உள்ளன.
- அரசாங்கத்தின் மீது நிதி அழுத்தம் அதிகரிப்பது, மூலதனச் செலவினங்களில் கவனம் அதிகரிப்பது.
- சுமார் 1.8 லட்சம் கோடி முதல் 3.2 லட்சம் கோடி வரையிலான இந்த பெரிய நிதிச் சுமையைத் தாங்குவதற்குப் பதிலாக, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கக்கூடும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Ambit Capital அறிக்கையில் 5 முக்கிய அறிகுறிகள்
துல்லியமான பொருளாதார பகுப்பாய்விற்கு பெயர் பெற்ற ஆம்பிட் கேபிடல், அதன் அறிக்கையில் சில உறுதியான காரணங்களை பட்டியலிட்டுள்ளது.
- சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு
ஊதியக்குழு வந்தால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தில் 30-34% பெரிய அதிகரிப்பு ஏற்படக்கூடும்.
- ஃபிட்மென்ட் ஃபாக்டருக்கான கணிதம்
அறிக்கையின்படி, சம்பளத்தை அதிகரிப்பதற்கான முக்கிய காரணி, அதாவது ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.83 முதல் 2.46 -க்குள் இருக்கக்கூடும். ஏற்கனவே உள்ள அடிப்படை ஊதியம் இதைகொண்டு பெருக்கப்படும்.
- அரசு கருவூலத்தில் சுமை
இந்த அதிகரிப்பு மத்திய அரசுக்கு ₹ 1.8 லட்சம் கோடி நேரடி கூடுதல் சுமையை ஏற்படுத்தும், இது மிகப் பெரிய தொகை.
- குறைந்தபட்ச ஊதியத்தில் தாக்கம்
இந்த கணக்கீட்டின் அடிப்படையில், தற்போதைய குறைந்தபட்ச சம்பளம் ₹ 18,000 இலிருந்து ₹ 32,940 இலிருந்து ₹ 44,280 ஆக அதிகரிக்கலாம்.
- அகவிலைப்படி மீட்டமைப்பு
- கமிஷன் செயல்படுத்தப்படும்போது, அகவிலைப்படி மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும். அதாவது, புதிய சம்பளம் புதிதாக கணக்கிடப்படும்.
(குறிப்பு: 8வது சம்பளக் குழு இன்னும் முறையாக அமைக்கப்படாததால், இவை அனைத்தும் மதிப்பீடுகளே என்பதை அம்பிட் கேபிடல் தெளிவுபடுத்தியுள்ளது.)
Kotak Securities கூறுவது என்ன?
கோடக் செக்யூரிட்டீஸ் சில புதிய மற்றும் முக்கியமான விஷயங்களை பகிர்ந்துள்ளது. இவை அம்பிட்டின் கருத்தை வலுப்படுத்துகின்றன.
- காலக்கெடுவை நேரடியாகத் தாக்குகிறது
2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அல்லது 2027 ஆம் ஆண்டு தொடக்கத்திற்கு முன்பு 8வது சம்பள ஆணையத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று கோடக் தெளிவாகக் கூறியுள்ளது.
- நிதிச் சுமை
கோடக்கின் மதிப்பீடு அம்பிட்டின் மதிப்பீட்டை விட பெரியது. அந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை, சம்பளக் குழுவின் நிதிச் சுமை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6% முதல் 0.8% வரை இருக்கலாம். இது ₹2.4 லட்சம் கோடி முதல் ₹3.2 லட்சம் கோடி வரை வருகிறது.
- பொருளாதாரத்தில் தாக்கம்
சம்பளம் அதிகரித்து, மக்கள் கையில் செலவழிப்பு பணம் அதிகமாகும்போது, ஆட்டோ, FMCG போன்றவற்றுக்கான தேவை அதிகரிக்கும் என்று கோடக் நம்புகிறது. மேலும், ₹1-1.5 லட்சம் கோடி கூடுதல் சேமிப்பு ஏற்படக்கூடும். இது வங்கி மற்றும் பங்குச் சந்தைக்குச் செல்லும்.
(குறிப்பு: இவை அனைத்தும் கணிப்புகள் என்றும் இறுதி முடிவு அரசாங்கத்தின் கையில் இருக்கும் என்றும் கோட்டக் சுட்டிக்காட்டியுள்ளது.)
Salary Hike: சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்படால், வழக்கமான மதிப்பீட்டின் படி, மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் எவ்வளவு அதிகரிக்கக்கூடும் என்பதற்கான மதிப்பீட்டை இங்கே காணலாம்.
| தற்போதைய அடிப்படை ஊதியம் | மதிப்பிடப்பட்டுள்ள புதிய அடிப்படை ஊதியம் (1.92 ஃபிட்மெண்ட் ஃபாக்டரில்) |
| ₹18,000 | ₹34,560 |
| ₹25,000 | ₹48,000 |
| ₹30,000 | ₹57,600 |
| ₹35,000 | ₹67,200 |
| ₹40,000 | ₹76,800 |
Central Government Employees: ஊழியர்களுக்கு நீடிக்கும் காத்திருப்பு
- 8வது ஊதியக்குழுவின் செயல்முறை அத்தனை எளிதானதல்ல.
- அரசாங்கம் முதலில் 8வது சம்பளக் குழுவை அமைக்க வேண்டும்.
- இதற்குப் பிறகு, கமிஷனுக்கான பணி விதிகள் (Terms of Reference) முடிவு செய்யப்படும்.
- அறிக்கையைத் தயாரிக்க குழு 12 முதல் 15 மாதங்களை எடுத்துக்கொள்ளலாம்.
- அதாவது, 2025 இல் கமிஷன் அமைக்கப்பட்டாலும், பரிந்துரைகள் 2026 இறுதி அல்லது 2027 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும்.
8வது ஊதியக்குழு அப்டேட்ஸ் சுருக்கமாக.....
- ஆம்பிட் கேபிடல் மற்றும் கோடக் செக்யூரிட்டீஸ் ஆகியவற்றின் அறிக்கைகள் 8வது ஊதியக்குழு இன்னும் ஒரு தொலைதூரக் கனவுதான் என்பதைக் குறிக்கின்றன.
- மத்திய அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கு இன்னும் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
- ஆனால் மதிப்பிடப்பட்ட அதிகரிப்பு மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கத்தைப் பார்க்கும்போது, இது வரும் ஆண்டுகளில் ஒரு பெரிய நிதி சிக்கலை ஏற்படுத்தும் என்ற கணிப்பும் உள்ளது.
- இந்த செய்தி லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம்.
- எனினும், இது ஒரு மதிப்பீடு மட்டுமே, அரசின் அறிவிப்புக்கு பிறகுதான் இதில் முழுமையான தெளிவு கிடைக்கும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ