)
8th Pay Commission Timeline: மத்திய அரசு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8வது ஊதியக் குழுவுக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக இன்னும் ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள். புதிய ஊதியக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் தலைவருக்கான நியமனத்தை அரசாங்கம் இன்னும் செய்து முடிக்கவில்லை.
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஜனவரி முதல் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் பற்றிய அப்டேட்களுக்காக காத்திருக்கிறார்கள். இது ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வுதியம் ஆகியவற்றை பெரிய அளவில் உயர்த்தும் என்பதால் இதற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
- 8வது மத்திய ஊதியக் குழு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மாநிலங்களவையில் தெரிவித்தார்.
- "எட்டாவது ஊதியக் குழுவின் விதிமுறைகளுக்கான உள்ளீடுகள் பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் அனைத்து மாநிலங்களிடமிருந்தும் 17.01.2025 மற்றும் 17.02.202 தேதியிட்ட தகவல்தொடர்புகள் மூலம் கோரப்பட்டன," என்று அமைச்சர் கூறினார்.
- புதிய ஊதியக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் நியமனம் குறித்து தெரிவித்த அவர், 8வது ஊதியக் குழு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டவுடன் அவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
- "அதிகாரப்பூர்வ அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும். 8வது ஊதியக்குழு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டவுடன் 8வது ஊதியக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்," என்று அவர் கூறினார்.
- 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த முறை ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.8 முதல் 2.86 -க்குள் நிர்ணயிக்கப்படலாம் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
- ஃபிட்மென்ட் ஃபாக்டர் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம்/ஓய்வூதிய உயர்வை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- 7வது ஊதியக்குழுவின் கீழ் இப்போது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ.9,000 ஆகும்.
- இதனுடன் சேர்த்து, 7வது ஊதியக்குழுவின் கீழ், தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் முறையே 55% அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் கிடைத்து வருகின்றது.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.8 ஆக நிர்ணயிக்கப்பட்டால்
- ஊழியர்களுக்கான புதிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் - ரூ.32,400
- ஓய்வூதியதாரர்களுக்கான புதிய குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் - ரூ.16,200
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால்
- ஊழியர்களுக்கான புதிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் - ரூ.51,480
- ஓய்வூதியதாரர்களுக்கான புதிய குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் - ரூ.25,740
இருப்பினும், 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்டவுடன் டிஏ/டிஆர் பூஜ்ஜியமாக ரீசெட் செய்யப்படும். அதன் பிறகு 7வது குழு முடிவில் இருக்கும் அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும்.
8வது ஊதியக்குழு அப்டேட்ஸ் சுருகமாக....
- 8வது மத்திய ஊதியக் குழு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும்: நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி
- ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.8 முதல் 2.86 -க்குள் நிர்ணயிக்கப்படலாம்.
- 8வது ஊதியக் குழுவில் மிகப்பெரிய ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வுக்கான எதிர்பார்ப்பு உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ