)
8th Pay Commission Latest Update: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக்குழு தொடர்பான புதுப்பித்தல்களுக்காக காத்திருக்கிறார்கள். ஜனவரியில் மத்திய அரசு 8வது சம்பள கமிஷனை அமல்படுத்துவதாக அறிவித்தது. அதன் பிறகு விரைவில் குழு அமைக்கப்படும் என எதிர்பார்க்க்கப்பட்டது. ஆனால், இதுவரை குழு அமைக்கப்படவில்லை.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகரிக்கும் நன்மைகள்
குழு அமைகப்பட்டவுடன் குழு உறுப்பினர்கள தங்கள் பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பிப்பார்கள். அதற்கு பிறகு அரசாங்கம் அதற்கு தனது ஒப்புதலை அளிக்கும். 8வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வை அளிக்கும் என நம்பப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பது மட்டுமல்லாமல் பல அலவன்சுகளிலும் ஏற்றம் இருக்கும்.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? எந்தெந்த அலவன்சுகள் உயரும்? இது குறித்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Salary Hike: 8வது ஊதியக்குழுவில் எவ்வளவு ஊதிய உயர்வு கிடைக்கும்?
8வது சம்பளக் குழு ஜனவரி 2026 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 - 2.86 வரம்பில் இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிரணயிக்கப்பட்டால்,
- லெவல்-1 ஊழியர்களின் சம்பளம் ரூ.34,560 அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- லெவல்-2 ஊழியர்களின் சம்பளம் ரூ.38,208 அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- லெவல்-3 ஊழியர்களின் சம்பளம் ரூ.41664 அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- லெவல்-4 ஊழியர்களின் சம்பளம் ரூ.48960 அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இதேபோல், லெவல்-10 வரை உள்ள ஊழியர்களுக்கு ரூ.1,07,712 வரை உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.08 ஆக நிர்ணயிக்கப்பட்டால்,
- லெவல்-1 ஊழியர்களின் சம்பளம் ரூ.37,440 அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- லெவல்-2 ஊழியர்களின் சம்பளம் ரூ.41,392 அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- லெவல்-3 ஊழியர்களின் சம்பளம் ரூ.45,136 அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- லெவல்-4 ஊழியர்களின் சம்பளம் ரூ.53,040 அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இதேபோல், லெவல்-10 வரை உள்ள ஊழியர்களுக்கு ரூ.1,16,668 வரை உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டால், அதிகபட்ச சம்பளம் ரூ.1,44,177 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது ஒரு மதிப்பீடுதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்?
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 இலிருந்து ரூ.25,740 ஆக அதிகரிக்கக்கூடும். இது நியமிக்கப்பட்ட ஆணையத்தின் இறுதி ஒப்புதலுக்கு உட்பட்டது.
HRA, Dearness Allowance: வீட்டு வாடகை கொடுப்பனவு, அகவிலைப்படியில் மிகப்பெரிய அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது
8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டவுடன், மத்திய அரசு ஊழியர்களின் HRA -வில் நல்ல ஏற்றம் இருக்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அடுக்கு-1 நகரங்களில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அதிக வாடகை கொடுப்பனவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, 6 மாதங்களுக்கு ஒரு முறை அதிகரிக்கப்படும் அகவிலைப்படி பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்கிறது.
இந்த முறை குறைந்தபட்ச சம்பளம் ரூ.19,000 -இலிருந்து ரூ.45,000 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது ஒரு மதிப்பீடு மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
8வது ஊதியக்குழு குறித்து மத்திய அரசு விரைவில் நல்ல செய்தியை வழங்கும்
8வது ஊதியக் குழு எப்போது அமலுக்கு வரும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ