)
8th Pay Commission Pension Hike: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி! 8வது ஊதியக்குழு பற்றிய விவாதம் முழு வீச்சில் நடந்து வருகிறது. ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் எப்போது, எவ்வளவு அதிகரிக்கும் என்பதை அறிய ஆர்வமாக உள்ளனர். ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள் பற்றி அதிகம் பேசப்படுகின்றது. ஆனால், ஓய்வூதியதாரர்களுக்கும் பல அதிரடி மாற்றங்கள் காத்திருகின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த முறை ஓய்வூதியதாரர்களின் அடிப்படை ஓய்வூதியம் ரூ.30,000 -இலிருந்து ரூ.77,1000 ஆக அதிகரிக்கக்கூடும் என்ற கூறப்படுகின்றது. இது ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரனத்தை அளித்துள்ளது. ஓய்வுதியதாரர்களின் துல்லியமான ஓய்வுதிய உயர்வு எவ்வளவு இருகும்? அவர்களுக்கு வேறு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? இந்த அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 - 3.00 -க்குள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. அந்த நிலையில், அடிப்படை ஊதியம் ரூ.30,000 வாங்கும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.57,600,
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.62,400,
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.68,400,
2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.77,100,
2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.85,800,
3.00 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.90,000
தற்போது ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. இதே ஃபிட்மென்ட் ஃபாக்டர் தொடர்ந்தால், ரூ.30,000 வாங்கும் ஓய்வுதியதாரர்களின் ஓய்வுதியம் ரூ.77,100 ஆக ஆதிகரிக்கும்.
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அனைவரின் மனதிலும் ஒரே கேள்விதான் - சம்பளம் மற்றும் ஓய்வூதியம் எப்போது அதிகரிக்கும்? ஆனால் இந்த முறை ஊதியக்குழு அமலுக்கு வர தாமதம் ஆகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2027 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2028 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 8வது சம்பளக் கமிஷன் செயல்படுத்தப்படலாம் என கூறப்படுகின்றது. எனினும், சிலர் இது 2027 ஆம் ஆண்டின் மத்தியில் அமலுக்கு வந்துவிடும் என கூறுகிறார்கள். இறுதி முடிவு அரசாங்கத்தின் கைகளில் இருந்தாலும், இந்த செய்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
8வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். அவர்களின் அடிப்படை ஓய்வூதியம் கணிசமாக அதிகரிக்கக்கூடும். தற்போது ரூ.30,000 அடிப்படை ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்கு பிறகு அடிப்படை ஊதியமாக ரூ.75,000 பெறுவார்கள் என கூறப்படுகின்றது. இது மிகப்பெரிய உயர்வாகும்.
பல ஆண்டுகால கடின உழைப்புக்குப் பிறகு இப்போது வசதியான வாழ்க்கையை வாழ விரும்பும் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு இந்த செய்தி ஒரு லாட்டரி போல் இருக்கும். இதற்கு அரசாங்கத்திடமிருந்து இறுதி ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த செய்தி ஓய்வூதியதாரர்களிடையே மகிழ்ச்சி அலையை உருவாக்கியுள்ளது.
ஓய்வூதியதாரர்கள் மட்டுமல்ல, மத்திய அரசு ஊழியர்களும் 8வது ஊதியக் குழுவிலிருந்து அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். சம்பள உயர்வு, கொடுப்பனவுகள் அதிகரிப்பு மற்றும் பிற வசதிகள் தொடர்பாக அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையில் அவர்களின் கவனம் உள்ளது. இருப்பினும், பரிந்துரைகள் எப்போது, எப்படி செயல்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் விவாதம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஓய்வூதியத்தில் இவ்வளவு பெரிய அதிகரிப்பு இருக்குமானால், சம்பளத்திலும் நல்ல அதிகரிப்பு நிச்சயம் இருக்கும் என்று ஊழியர்கள் நம்புகிறார்கள்.
இந்தச் செய்தி ஊக்கமளிப்பதாக இருந்தாலும், ஊழியர்களும் ஓய்வூதியர்களும் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் குறித்து அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை. மேலும் ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவதற்கு சிறிது காலம் ஆகலாம். ஆனால் அது செயல்படுத்தப்படும்போது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் வாழ்க்கையையே அது மாற்றும் என்பது உறுதி.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ