8வது ஊதியக்குழு: ToR, டிஏ அரியர், குழு உறுப்பினர்கள், காப்பீட்டுத் திட்டம்.... ஊழியர்களுக்கு 4 முக்கிய அப்டேட்ஸ்

8th Pay Commission: 8வது ஊதியக்குழு உறுப்பினர்களின் நியமனம், குழுவின் உருவாக்கம் மற்றும் அதன் குறிப்பு விதிமுறைகள் குறித்து முன்கூட்டியே உத்தரவுகளை பிறப்பிக்க NC-JCM ஊழியர்கள் தரப்பு அழுத்தம் கொடுத்தது

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 5, 2025, 10:14 AM IST
  • மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட்.
  • NC-JCM 63வது கூட்டத்தில் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் மற்றும் குறிப்பு விதிமுறைகள் பற்றிய விவாதம்.
  • முழுமையான தகவல் இதோ.
8வது ஊதியக்குழு: ToR, டிஏ அரியர், குழு உறுப்பினர்கள், காப்பீட்டுத் திட்டம்.... ஊழியர்களுக்கு 4 முக்கிய அப்டேட்ஸ்

8th Pay Commission Latest Update: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் கிடைத்துள்ளது. தேசிய கவுன்சில்-கூட்டு ஆலோசனை அமைப்பின் (JCM) நிலைக்குழுவின் 63வது கூட்டம் ஏப்ரல் 2025 இல் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட்ட சில முக்கியமான முடிவுகளை பற்றிய செய்திகள் தற்போது வெளிவந்துள்ளன. இவை 8வது குழுவிற்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு முக்கிய தகவலாக இருக்கும். JCM நிலைக்குழு கூட்டத்தில் நடைபெற்ற சில முக்கிய விவாதங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

National Council-Joint Consultative Machinery: தேசிய கவுன்சில்-கூட்டு ஆலோசனை அமைப்பு

NC-JCM என்பது மத்திய அரசாங்கத்துடன் ஊழியர் நலன்கள் தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிக்கும் ஒரு அமைப்பாகும். 63வது கூட்டத்தில் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் மற்றும் குறிப்பு விதிமுறைகள் (ToR) உட்பட பல முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

8th Pay Commission Terms of Reference: 8வது ஊதியக் குழு குறிப்பு விதிமுறைகள் (ToR)

ஏப்ரல் 23, 2025 அன்று, 8வது மத்திய சம்பள ஆணையத்தின் (CPC) அத்தியாவசிய அம்சங்களைப் பற்றி விவாதிக்க NC-JCM இன் பிரதிநிதி கூட்டம் நடைபெற்றது. 8வது CPC உருவாக்கம் குறித்து அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அதன் குறிப்பு விதிமுறைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ வழிமுறைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும், உறுப்பினர்கள் மற்றும் ஆணையத்தின் தலைவர் நியமனம் தொடர்பான எந்த முறையான அறிவிப்பும் இன்னும் வெளியிடப்படவில்லை. 8வது ஊதியக்குழு உறுப்பினர்களின் நியமனம், குழுவின் உருவாக்கம் மற்றும் அதன் குறிப்பு விதிமுறைகள் குறித்து முன்கூட்டியே உத்தரவுகளை பிறப்பிக்க NC-JCM ஊழியர்கள் தரப்பு அழுத்தம் கொடுத்தது.

8வது CPC-யின் முக்கிய உறுப்பினர்களை விரைவில் நியமனம் செய்வது மற்றும் ToR தொடர்பான வழிமுறைகளை வெளியிடுமாறு ஊழியர்கள் தரப்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்கள் தொடர்பாக நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இன்னும் பல்வேறு பிரச்சினைகளை பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

18 Month DA Arrears: 18 மாத டிஏ அரியர் தொகை

உலகம் முழுதும் COVID-19 பெருந்தொற்று ஆட்டிப்படைத்து லாக்டவுன் விதிக்கப்பட்டபோது (ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை) மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முடக்கப்பட்ட அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணத்தை (Dearness Relief) வழங்க வேண்டும் என NC-JCM-ன் ஊழியர்கள் தரப்பு மீண்டும் வலியுறுத்தியது. இருப்பினும், இதில் ஒரு பின்னடைவாக, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட தொடர்ச்சியான பொருளாதார தாக்கம் மற்றும் மத்திய அரசின் மக்கள் நல நடவடிக்கைகளில் ஊழியர்களின் முடக்கப்பட்ட தொகை பயன்பட்டதன் காரணமாக, நிலுவைத் தொகையை செலுத்துவது சாத்தியமில்லை என்று செலவினத் துறை பதிலளித்துள்ளது.

Central Government Employees Group Insurance Scheme: குழு காப்பீடு குறித்த திட்டம்

மத்திய அரசு ஊழியர் குழு காப்பீட்டுத் திட்டத்திற்கான (CGSIS) திருத்தப்பட்ட முன்மொழிவை செலவினத் துறை தயாரித்துள்ளது. மேலும் திட்டத்தின் நகல் கருத்துக்காக ஊழியர் தரப்புடன் பகிரப்படும்.

8வது ஊதியக் குழுவை உருவாக்குவதில் தாமதம்

8வது ஊதியக் குழுவுக்கான உறுப்பினர்களை நியமிப்பது குறித்து அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படும் என்று ஊழியர்கள் தற்போது கவலை கொண்டுள்ளனர். ஆனால், தாமதம் ஏற்பட்டால் நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று நம்பிக்கையும் உள்ளது.

7th Pay Commission: 7வது ஊதியக்குழு

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கான பதவிக்காலம் டிசம்பர் 2025 இல் முடிவடையும். அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பிற கொடுப்பனவுகளை மறுஆய்வு செய்வதற்காக 10 வருடங்களுக்கும் ஒரு முறை ஒரு புதிய ஊதியக் குழு அமைக்கப்படுகிறது. 8வது ஊதியக் குழுவை அமல்படுத்த எதிர்பார்க்கப்படும் தேதி ஜனவரி 1, 2026. இதில் தாமதம் ஏற்படலாம் என்று ஊகிக்கப்படும் அதே வேளையில், தாமதமாகாது என்றும் பலர் கூறுகின்றனர். இறுதி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டால், 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் பின்னோக்கிச் செயல்படுத்தப்படும், அந்த தேதி முதல் புதிய ஊதியக்குழுவின் நன்மைகளுக்கான அரியர் தொகை கிடைக்கும். 8வது ஊதியக் குழுவின் அமலாக்கம் 1.1 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நேரடி நன்மைகளை அளிக்கும்.

மேலும் படிக்க | EPS Pension: இதை செய்யாவிட்டால் சரியான நேரத்தில் ஓய்வூதியம் கிடைக்காது, PF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்

மேலும் படிக்க | EPFO : பிஎப் குறைகளை தெரிவிக்க முடியாமல் தவிக்கும் ஊழியர்கள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News