8வது ஊதியக்குழு: லெவல் 10 ஊழியர்கள் பெறப்போகும் அதிரடி ஊதிய உயர்வு, முழு கணக்கீடு

8th Pay Commission: 8வது சம்பளக் குழு அமலுக்கு வந்தவுடன் ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இந்த அதிகரிப்பின் முக்கிய அமசங்கள் என்னவாக இருக்கும்? இவற்றை ஒரு உதாரணத்தின் மூலம் இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 20, 2025, 10:14 AM IST
  • ஃபிட்மென்ட் காரணி எவ்வளவு இருக்கும்?
  • அடிப்படை சம்பளம் எவ்வாறு மாறும்?
  • DA, HRA, TA எவ்வாறு சேர்க்கப்படும்?
8வது ஊதியக்குழு: லெவல் 10 ஊழியர்கள் பெறப்போகும் அதிரடி ஊதிய உயர்வு, முழு கணக்கீடு

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட காலமாக 8வது ஊதியக்குழுவிற்கான அமலாக்கத்திறகாக காத்திருக்கிறார்கள். இந்த காத்திருப்பு கூடிய விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. 

Central Government Employees

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை அறிய அதிக ஆர்வத்துடன் உள்ளனர். குறிப்பாக, லெவல்-10 போன்ற முக்கியமான பதவிகளில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊழியர்களின் தற்போதைய அடிப்படை சம்பளம் எவ்வாறு புதிய, அதிகரித்த அடிப்படை சம்பளமாக மாறும் என்பதை தீர்மானிப்பதில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் ஒரு முக்கியமான சூத்திரமாக செயல்படுகிறது. பின்னர், இந்த புதிய அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA) மற்றும் பயணப்படி (TA) போன்ற பல கொடுப்பனவுகள் சேர்க்கப்படுகின்றன. இது ஊழியர்களின் மொத்த மாத சம்பளத்தை (நிகர சம்பளம்) தீர்மானிக்கிறது.

8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தவுடன் ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இந்த அதிகரிப்பின் முக்கிய அம்சங்கள் என்னவாக இருக்கும்? இவற்றை ஒரு உதாரணத்தின் மூலம் இந்த பதிவில் காணலாம். 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தபின் லெவல் 10 ஊழியர்களின் ஊதிய கட்டமைப்பில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை இங்கே புரிந்துகொள்ளலாம்.

8வது சம்பள கமிஷன் எப்போது அமலுக்கு வரும்? 

பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசாங்கம் தனது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் பிற வசதிகளை மேம்படுத்தவும் புதிய ஊதியக்குழுவை அமைக்கிறது. இது சம்பள ஆணையம் என்று அழைக்கப்படுகிறது. முந்தையது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் அமலுக்கு வந்தன. இப்போது 8வது சம்பளக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Level 10 Central Government Empoyees

லெவல் 10 அதிகாரிகள் அரசாங்கத்திற்கு மிக முக்கியமான பணிகளைச் செய்யும் நபர்கள். ஆகையால், அவர்களின் சம்பளத்தில் நல்ல உயர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Fitment Factor: ஃபிட்மென்ட் காரணி எவ்வளவு இருக்கும்?

8வது ஊதியக்குழு தொடர்பான மிகப்பெரிய கேள்வி ஃபிட்மென்ட் ஃபாக்டர் பற்றியதாகும். மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை தீர்மானிக்கும் மந்திர எண்ணாக அது பார்க்கப்படுகின்றது. 7வது ஊதியக்குழுவில் இந்த எண் 2.57 ஆக தீர்மானிக்கப்பட்டது.

இப்போது என்ன ஊகங்கள் உள்ளன?

தற்போது, ​​8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்னவாக இருக்கும் என்பது குறித்து அரசாங்கத்திடமிருந்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. இருப்பினும், ஊழியர் அமைப்புகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் பல ஊகங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 -க்குள் தீர்மானிக்கப்படலாம் அல்லது 3.0 -க்கு மேலும் நிர்ணயிக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Basic Salary: அடிப்படை சம்பளம் எவ்வாறு மாறும்?

புதிய சம்பள கமிஷன் வரும்போதெல்லாம், அது ஒரு புதிய 'பிட்மென்ட் ஃபாக்டர்’ தீர்மானிக்கப்படுகின்றது. இது ஊழியர்களின் தற்போதைய அடிப்படை சம்பளத்தை (7வது சம்பளக் குழு) பெருக்குவதற்கான ஒரு எண்ணாகும், மேலும் இது புதிய சம்பளக் குழுவின் (அதாவது 8வது CPC) புதிய அடிப்படை சம்பளத்தை வழங்குகிறது.

உதாரணமாக, 7வது சம்பளக் கமிஷனில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. இதன் பொருள் ஒருவரின் பழைய அடிப்படை சம்பளம் ரூ.10,000 என்றால், புதிய அடிப்படை சம்பளம் ரூ.10,000 x 2.57 = ரூ.25,700 ஆனது.

8வது சம்பளக் குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பெரும்பாலான நிபுணர்கள், யதார்த்த நிலையை கருத்தில்கொண்டு, இது 1.92 ஆக நிர்ணயிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். 

8th Pay Commission

DA, HRA, TA எவ்வாறு சேர்க்கப்படும்?

ஊழியர்களின் புதிய அடிப்படை சம்பளம் முடிவு செய்யப்பட்டவுடன், அதில் பல கொடுப்பனவுகள் சேர்க்கப்படும். இதன் மூலம் மொத்த வருவாய் அதிகரிக்கும்:

Dearness Allowance: அகவிலைப்படி (DA)
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கத்தை சமாளிக்க இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது வழக்கமாக புதிய சம்பள ஆணையத்தின் தொடக்கத்தில் பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டு, புதிய அடிப்படை சம்பளத்தில் (அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் போது) புதிதாகக் கணக்கிடப்படுகிறது.

House Rent Allowance: வீட்டு வாடகைப் படி (HRA)
இது ஊழியர்களின் நகரத்தைப் பொறுத்து (X, Y, அல்லது Z வகுப்பு நகரம்) புதிய அடிப்படை சம்பளத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக இருக்கும். பெரிய நகரங்களில் HRA அதிகமாக இருக்கும்.

Transport Allowanceள் பயணப்படி (TA)
இது தினமும் வேலைக்குச் செல்லும் பயணச் செலவுகளை ஈடுகட்ட வழங்கப்படுகிறது. மேலும் இது உங்கள் சம்பள நிலை மற்றும் நகரத்தைப் பொறுத்தது. இந்த முக்கிய கொடுப்பனவுகளைத் தவிர, உங்கள் பதவி மற்றும் துறையைப் பொறுத்து வேறு சில சிறிய கொடுப்பனவுகளும் கொடுக்கப்படலாம்.

8th Pay Commission

Deductions: சம்பளத்தில் இருக்கும் பொதுவான கழிப்புகள்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கொடுப்பனவுகளையும் புதிய அடிப்படை சம்பளத்துடன் சேர்த்த பிறகு கிடைக்கும் மொத்தத் தொகை மொத்த சம்பளம் எனப்படும். ஆனால் இந்தத் தொகை முழுவதும் ஊழியர்களின் கைக்கு வராது. இவற்றில் சில திட்டங்களுக்கு தொகை கழிக்கப்படும். எடுத்துக்காட்டாக.

1. National Pension Scheme: தேசிய ஓய்வூதிய முறை (NPS)
உங்கள் புதிய அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில், 10% NPS-இல் டெபாசிட் செய்யப்படுகிறது.

2. Income Tax: வருமான வரி
உங்கள் மொத்த ஆண்டு வருமானத்திற்குப் பொருந்தும் வரி.

3. Professional Tax: தொழில்முறை வரி
சில மாநிலங்களிலும் இதுவும் கழிகப்படுகிறது.

இந்தப் பிடித்தங்களுக்குப் பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் வரும் பணம் நிகர சம்பளம் அல்லது 'கையில் கிடைக்கும் சம்பளம்' என்று அழைக்கப்படுகிறது. 

Salary Calculator: சம்பள கனக்கீடு

8வது சம்பளக் குழு, நிலை-10 அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் அனைத்து பிற ஊழியர்களுக்கும் குறிப்பிடத்தக்க நிதி நிலை மாற்றங்களை நிச்சயமாகக் கொண்டுவரும். கமிஷனின் பரிந்துரைகள் மற்றும் அரசாங்கத்தின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகுதான் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மற்றும் பல்வேறு கொடுப்பனவுகளின் விகிதங்கள் என்ன என்பது தெரியவரும். 

பொறுப்பு துறப்பு

இங்கு கொடுக்கப்பட்டுள்ள கணக்கீடுகள் தோராயமானவை. இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. 8வது ஊதியக் குழு, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மற்றும் கொடுப்பனவுகளின் விகிதங்கள் தொடர்பான அனைத்து புள்ளிவிவரங்களும் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பரிந்துரைகள் வந்தபின்தான் தெரியவரும். இறுதியாக இந்திய அரசாங்கத்தால் இவை அறிவிக்கப்படும். அவை இங்கே கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளிலிருந்து வேறுபடலாம்.

மேலும் படிக்க | EPFO: PF உறுப்பினர்களுக்கு 5 முக்கிய மாற்றங்கள், சுலபமாகும் செயல்முறை

மேலும் படிக்க | ITR 2025: வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு விபரம்... தவறினால் அபராதம் விதிக்கப்படும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News