8th Pay Commission: 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புதிய புதுப்பிப்பு வெளியாகியுள்ளது. 8வது ஊதியக் குழுவில் ஆலோசகர்கள் மற்றும் தலைவர் பதவிகள் உட்பட 42 காலியிடங்களை நிரப்பும் பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளது. பரிந்துரை விதிமுறைகள் (ToR) இறுதி செய்யப்பட்ட பிறகு, அடுத்த மாத இறுதியில் இருந்து ஆணையம் செயல்படத் தொடங்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 21 அன்று, நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை, 8வது ஊதியக் குழுவில் 40 பணியாளர்களை நியமிப்பதற்காக இரண்டு தனித்தனி சுற்றறிக்கைகளை வெளியிட்டது. இந்தப் பதவிகளில் பெரும்பாலானவை பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளால் பணி நியமன அடிப்படையில் நிரப்பப்படும்.
இந்த 40 பதவிகளைத் தவிர, தலைவர் மற்றும் இரண்டு முக்கிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளை நிரப்ப பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரி தெரிவித்தாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் இரண்டு இயக்குநர்கள்/துணைச் செயலாளர்கள், மூன்று துணைச் செயலாளர்கள் மற்றும் 37 பேர் அடங்குவர். ToR வழங்கப்பட்ட பிறகு அவர்களுக்கான ஆரம்பப் பணிகள் ஒதுக்கப்படும் என்று அதிகாரி கூறினார்.
7th Pay Commission: 7வது ஊதியக்குழு
இதற்கு முந்தைய ஆணையமான 7வது ஊதியக் குழுவில் மொத்தம் 45 உறுப்பினர்கள் இருந்தனர். இதில் தலைவர், செயலகத்தில் 18 பேர், 16 ஆலோசகர்கள் மற்றும் 7 பிற ஊழியர்கள் அடங்குவர். இந்த ஆணையம் நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைமையில் செயல்பட்டது.
6th Pay Commission / 5th Pay Commission: 6வது ஊதியக்குழு / 5வது ஊதியக்குழு
6வது ஊதியக் குழுவில், தலைவர் உட்பட நான்கு உறுப்பினர்களும் இருந்தனர். ஆனால் செயலகத்தில் 17 பேர் மட்டுமே பணிபுரிந்தனர். 6வது சம்பளக் குழுவுக்கு நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமை தாங்கினார். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 5வது சம்பளக் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாக இருந்தது. அதில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.
ஆரம்ப கட்டங்களை பார்த்தால், முதல் சம்பளக் குழுவில் ஒன்பது உறுப்பினர்களும், இரண்டாவது சம்பளக் குழுவில் ஆறு பேரும், மூன்றாவது மற்றும் நான்காவது ஊதியக் குழுக்களில் தலா ஐந்து உறுப்பினர்களும் இருந்தனர்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களிடையே கலந்துரையாடல்
இதற்கிடையில், ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற அதன் நிலைக்குழுவின் நீட்டிக்கப்பட்ட கூட்டத்திற்குப் பிறகு, தேசிய கவுன்சிலின் (NC-JCM) ஊழியர் தரப்பு 8வது ஊதியக் குழுவிடம் சமர்ப்பிக்க ஒரு விரிவான குறிப்பாணையைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தொடர்பான பல முக்கிய பிரச்சினைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன. அவற்றில் சில இதோ:
- குறைந்தபட்ச சம்பளம் (Minimum Salary)
- ஊதிய உயர்வு (Salary Hike)
- ஊதிய விகிதங்கள் (Pay Scales)
- ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor)
- கொடுப்பனவுகள் (Allowances)
- பதவி உயர்வு கொள்கை (Promotion Policy)
- ஓய்வூதியப் பலன்கள் (Pension)
குறிப்பாணையைத் தயாரிப்பதற்காக ஒரு வரைவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் முக்கிய ஊழியர் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் இருப்பார்கள். இந்தக் கூட்டமைப்புகள் தங்கள் பிரதிநிதிகளின் பெயர்களை அனுப்பும். “8வது ஊதியக் குழு உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து ஆணையம் மூடப்படும் வரை இந்தப் பதவிகளில் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். காலியாக உள்ள பதவிகளுக்கான விண்ணப்பங்கள் அனைத்துப் பதவிகளும் நிரப்பப்படும் வரை தொடரும் என்றும் அது கூறுகிறது.” என செலவினத் துறை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்: புதிய CGHS போர்டல், அதிக வசதிகள், விவரம் இதோ
மேலும் படிக்க | EPF உறுப்பினர்களுக்கு டபுள் குட் நியூஸ்: அதிகரிக்கும் ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









