)
8th Pay Commission Salary Hike: இந்த முறை தீபாவளி பண்டிகை மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கப் போகிறது. 8வது ஊதியக்குழு தான் அதற்கு காரணம். இதற்கான பணிகள் இப்போது முழு வீச்சில் நடந்துவருகின்றன. இந்த கமிஷன் 2025 தீபாவளிக்குள் (அக்டோபர் 20-22) அமைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
தீபாவளிக்குள் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். மேலும் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், 8வது உதியக்குழுவின் பரிந்துரைகளும் வெறும் 8 மாதங்களில் தயாராகிவிடும் என்று நம்பப்படுகிறது. அதாவது, ஊழியர்கள் அதிகம் காத்திருக்க வேண்டியதில்லை.
முந்தைய சம்பள கமிஷன்களில், அவற்றின் உருவாக்கம் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அமைக்க அதிக நேரம் எடுத்தது. ஆனால் இந்த முறை ஏற்கனவே அதிக நேரம் ஆகிவிட்ட நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் அரசாங்கம் வேகத்தைக் காட்டும் மனநிலையில் உள்ளது. 8வது சம்பள கமிஷனின் உருவாக்கம் அக்டோபர் 2025 க்குள் நிறைவடையும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, தீபாவளி பண்டிகை காலத்தில் ஊழியர்களுக்கும் நல்ல செய்தி வரும்.
8வது சம்பள கமிஷனில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்ற செய்தி உள்ளது. இதில் ஒரு தலைவரும், ஐந்து நிபுணர்களும் இடம்பெறுவார்கள். இந்த நபர்கள் ஊழியர்களின் பல்வேறு தேவைகள், பணவீக்கத்தின் தாக்கம் மற்றும் சம்பள அமைப்பை ஆழமாக ஆய்வு செய்வார்கள்.
முந்தைய 6வது மற்றும் 7வது சம்பள கமிஷன்களைப் பற்றிப் பேசுகையில், அவற்றின் அறிக்கைகளைத் தயாரிக்க 15 முதல் 18 மாதங்கள் ஆனது. ஆனால் இந்த முறை அரசாங்கம் இதை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளது. 8வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் வெறும் 8 மாதங்களில் தயாராகிவிடும் என கூறப்படுகின்றது. அதாவது, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஊழியர்கள் புதிய சம்பளத்தின் பலனைப் பெறத் தொடங்க வாய்ப்புள்ளது.
பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமலுக்கு வருகின்றது. 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 2025 -இல் நிறைவடைகின்றது. ஆகையால், 2026 ஜனவரி முதல் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரவேண்டும். இதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், ஊழியர்களுக்கு 2026 ஜனவரி முதல் நிலுவைத் தொகை கிடைக்கும். அதாவது, எந்த சூழ்நிலையிலும் ஊழியர்கள் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டார்கள்.
ஊதியக் குழுக்களில் எப்போதும் ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு முக்கிய பங்கு உள்ளது. 7வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 8வது உதியக்குழுவில் இது 1.92 முதல் 3.0 -க்குள் இருக்கலாம் என கூறப்படுகின்றது. அதாவது, இதன் மூலம் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் நேரடி அதிகரிப்பு இருக்கும். இது அவர்களின் மொத்த சம்பளத்திலும் பிரதிபலிக்கும்.
தற்போது, மத்திய ஊழியர்கள் 55% அகவிலைப்படி (DA) பெறுகின்றனர். இது ஜூலை 2025 முதல் 58% ஆக அதிகரிக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இது விரைவில் அறிவிக்கப்படும். இது ஜனவரி 2026 க்குள் 61% ஐ எட்டக்கூடும். ஆனால் 8வது ஊதியக் குழு செயல்படுத்தப்பட்டவுடன், புதிய ஊதிய அமைப்பு வந்த பிறகு, அகவிலைப்படி மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து (0) தொடங்கும். இதன் காரணமாக அனைவரது கவனமும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் புதிய சம்பள அமைப்பின் மீதுள்ளது.
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். லெவல் 4 ஊழியர்களுக்கு 7வது மற்றும் 8வது ஊதியக்குழுக்களில், அதாவது தற்போதைய மற்றும் சாத்தியமான ஊதிய உயர்வின் ஒப்பீட்டை இங்கே காணலாம்.
| விளக்கம் | 7வது ஊதியக் குழு (தற்போதைய) | 8வது ஊதியக் குழு (மதிப்பிடப்பட்டது) | வேறுபாடு |
| அடிப்படை ஊதியம் (நிலை-4) | ₹25,500 | ₹48,960 (1.92 ஃபிட்மென்ட் காரணி) | +₹23,460 |
| DA (61%) | ₹15,555 | ₹0 (தொடக்கத்தில் ரீசெட் செய்யப்படும்) | -₹15,555 |
| மொத்த சம்பளம் (அடிப்படை + DA) | ₹41,055 | ₹48,960 | +₹7,905 |
| பிற கொடுப்பனவுகள் (HRA, TA போன்றவை) | ₹9,000 (சராசரி) | ₹12,000 (சராசரி, மேம்படுத்தப்பட்ட அடிப்படையில்) | +₹3,000 |
| மொத்த மாதாந்திர சம்பளம் | ₹50,000-52,000 (சராசரி) | ₹60,000-62,000 (சராசரி) | +₹10,000 |
இது சம்பளத்தை அதிகரிப்பது மட்டுமல்ல, ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கான பதிலாக பார்க்கப்படுகின்றது. பணவீக்கம் உயர்ந்து, செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சம்பள ஆணையத்தின் பரிந்துரைகள் ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கின்றன. இந்த முறை அரசாங்கத்தின் நோக்கம், செயல்முறையை விரைவுபடுத்துவது, ஊழியர்களின் நம்பிக்கையைப் பேணுவது என்ற 2 விஷயங்களில் தெளிவாக உள்ளது.
2025 தீபாவளி வெறும் மத்தாப்பு, விளக்குகள் மற்றும் இனிப்புகளின் பண்டிகையாக மட்டுமல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வாழ்க்கையின் புதிய தொடக்கமாகவும் இருக்கும்.
8வது ஊதியக்குழு அப்டேட்ஸ் சுருக்கமாக.......
- பொதுவாக 10 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு புதிய சம்பள ஆணையம் உருவாக்கப்படுகிறது.
- ஃபிட்மென்ட் ஃபாக்டரின் மூலம் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டு, புதிய சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
- புதிய ஊதிய அமைப்பு செயல்படுத்தப்படும்போது அகவிலைப்படி பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குகிறது.
- வழக்கமாக ஆணையத்தின் அறிக்கைக்குப் பிறகு புதிய ஊதியக்குழு அமலுக்கு வர 1-1.5 ஆண்டுகள் ஆகும், ஆனால் இந்த முறை செயல்முறை வேகமாக இருக்கும்.
- அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஊதியக்குழுவின் வரம்பிற்குள் வருவார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ