)
8th Pay Commission Pension Hike: 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்பட்ட நிலையில், இதன் உருவாக்கத்தில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது. கடந்த மாதம் பல்வேறு 8வது ஊதியக்குழு பதவிகளுக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்ட போதிலும், இன்னும் பெயர்களை வெளியிடவில்லை. இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஊதிய மற்றும் ஓய்வூதிய திருத்தத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Fitment Factor: ஃபிட்மெண்ட் ஃபாக்டர்
ஊதியக்குழுக்களின் திருத்தங்களில் ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. 7வது ஊதியக் குழுவில் 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்பட்டதால், மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் குறிப்பிடத்தக்க உயர்வை அடைந்தார்கள். அதே போன்ற எதிர்பார்ப்பு இந்த முறையும் உள்ளது.
Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதார்ரகளுக்கு குட் நியூஸ்
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 8வது ஊதியக்குழு மூலம் குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்பார்க்கப்படும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு? யாருக்கு எவ்வளவு அதிகரிப்பு கிடைக்கும்? இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
7th Pay Commission: 7வது ஊதியக்குழுவுக்கு நிகரான எதிர்பார்ப்பு
7வது ஊதியக் குழுவில் ஓய்வூதியங்கள் எவ்வாறு திருத்தப்பட்டன? மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்துடன், லட்சக்கணக்கான மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியங்களும் திருத்தப்பட்டன. திருத்தத்திற்குப் பிறகு, குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உயர்ந்தது. மேலும், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆக அதிகரித்தது. ஊதியத்தை தீர்மானிக்கும் பெருக்கியான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்ட பிறகு இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தது.
State Government Employees: மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதிய திருத்தம் ஏற்படுமா?
மத்திய அரசு அதன் ஊதிய, ஓய்வூதியத் திருத்தத்தை அறிவித்தவுடன், மாநில அரசுகளும் அதே பாதையைப் பின்பற்றி தங்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதுயதாரர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்கின்றன.
ஓய்வூதிய திருத்தம் எப்போதெல்லாம் செய்யப்படுகின்றது?
ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலில் இருக்கும் காலம் முழுதும், அதாவது 10 ஆண்டுகளுக்கு அடிப்படை ஓய்வூதியம் அப்படியே இருக்கும். ஆனால் நிதி அமைச்சகம் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி நிவாரணத்தை (DR) திருத்துகிறது. பணவீக்கத்திற்கு ஏற்ப அகவிலை நிவாரணம் அதிகரிக்கப்படுகிறது.
Dearness Relief: அகவிலை நிவாரண அதிகரிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
அகவிலை நிவாரண உயர்வு அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு தொழில்துறை தொழிலாளர்கள் (AICPA-IW) மாதாந்திர தரவை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில் அதிகரித்து வரும் நுகர்வோர் விலை பணவீக்கத்தை இந்த குறியீடு குறிக்கிறது.
8வது ஊதியக் குழுவில் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்?
7வது ஊதியக் குழுவில் நடந்தது போல, இது பெரும்பாலும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் செய்யப்படும். புதிய ஊதியக் குழுவின் ஓய்வூதியத்தை தீர்மானிக்க தற்போதைய ஓய்வூதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கப்படுகிறது.
உதாரணமாக, ஒரு ஓய்வூதியதாரரின் மாதாந்திர அடிப்படை ஓய்வூதியம் ரூ.25,000 என்று வைத்துக்கொள்வோம், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.08 ஆக இருந்தால், அவர்களின் மதிப்பிடப்பட்ட திருத்தப்பட்ட ஓய்வூதியம் ரூ.52,000 ஆக மாறும்.
8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்னவாக இருக்கும்?
8வது ஊதியக்குழுவிற்கான ஃபிட்மெண்ட் ஃபாக்டர், ஊதியக் குழு உருவாக்கப்பட்டு, அதன் பரிந்துரை அறிக்கையைத் தயாரித்து, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டதும் முடிவு செய்யப்படும். ஒப்புதலுக்கு முன், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான சில மாற்றங்களை மத்திய அரசு பரிந்துரைக்கலாம்.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92-2.86 வரம்பில் இருக்கக்கூடும் என பல நிபுணர் கணித்துள்ளனர்.
Pension Hike: லெவல் 1-18 மத்திய அரசு ஊழியர்களுக்கான எதிர்பார்க்கப்படும் ஓய்வூதிய உயர்வு:
ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியத்தை ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எவ்வாறு மாற்றுகிறது என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம். ஒரு ஓய்வூதியதாரர் அடிப்படை ஓய்வூதியமாக ரூ.30,000 பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். 1.92, 2.08, 2.28 அல்லது 2.57 ஆக ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்பட்டால், தித்தப்பட்ட ஓய்வூதியம் என்னவாக இருக்கும் என காணலாம்.
1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.57,600
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.62,400
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.68,400
2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.77,100
திருத்தப்பட்ட 8வது ஊதியக்குழு ஓய்வூதிய அடுக்குகள் எப்போது செயல்படுத்தப்படும்?
ஊதியக்குழு இன்னும் அமைக்கப்படாததால், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு, செயல்படுத்தப்படுவதற்கு ஒரு வருடத்திற்கும் மேல் ஆகலாம். இது எப்போது நடைமுறைக்கு வந்தாலும், ஓய்வூதியதாரர்கள் ஜனவரி 1, 2025 முதல் நிலுவைத் தொகையைப் பெறுவார்கள்.
Level 1-18: லெவ்வல் 1-18 ஊழியர்களுக்கான எதிர்பார்க்கப்படும் ஓய்வூதிய உயர்வு
2.08 மற்றும் 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டருகளில் நிலை 1-18 ஊழியர்களுக்கான திட்டமிடப்பட்ட திருத்தப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதிய கணக்கீட்டை இங்கே காணலாம்.
திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் தற்போதைய அடிப்படை ஓய்வூதியம் ரூ.17,700, ரூ.26,550, ரூ.59,250 மற்றும் ரூ.72,100 உள்ள ஓய்வூதியதாரர்களுக்கான தொகைகளும் அடங்கும்.
ஓய்வூதிய உயர்வு (ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: 2.08)
ஓய்வூதிய உயர்வு (ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: 2.28)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ