)
8th Pay Commission Pension: மத்திய ஊதியக் குழுவிற்கான பரிந்துரை விதிமுறைகளை (ToR) மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இந்த முடிவு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் குறித்த விரிவான மறுஆய்வுக்கு வழி வகுக்கிறது. சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை மறுஆய்வு செய்ய மூன்று பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.
நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குவார், அவர்களுடன் ஐஐஎம் பெங்களூருவின் பேராசிரியர் புலக் கோஷ் (பகுதி உறுப்பினர்) மற்றும் பெட்ரோலியச் செயலாளர் பங்கஜ் ஜெயின் (உறுப்பினர் செயலாளர்) ஆகியோர் இருப்பார்கள். இந்த மூவரும் 8வது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை மதிப்பாய்வு செய்து 18 மாதங்களுக்குள் தங்கள் அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். 10 ஆண்டுகளுக்கான விதிப்படி ஜனவரி 1, 2026 முதல் 8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவதற்கு முன்னதாக, சிவில் சேவைகள், பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, ரயில்வே மற்றும் அஞ்சல் துறைகளில் சுமார் 50 லட்சம் ஊழியர்களுடன் விவாதங்கள் நடந்து வருகின்றன. அவர்களின் சம்பளத்தில் சரியான அதிகரிப்பு குறித்து விவாதம் நடந்து வருகிறது. ஏனெனில், நாடு முழுவதும் அரசாங்கக் கொள்கைகளை செயல்படுத்துவதில் இந்த ஊழியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
புதிய ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் பயனளிக்கப் போவதில்லை. இந்த முறை, ஓய்வூதியதாரர்களும் குறிப்பிடத்தக்க ஊக்கத்தைப் பெறலாம். அரசாங்கத்தின் ஓய்வூதியதாரர் போர்ட்டலின்படி, அக்டோபர் 30, 2025 நிலவரப்படி, 68.72 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். புதிய ஊதியக் குழுவிலிருந்து ஓய்வூதியதாரர்கள் என்ன நன்மைகளை எதிர்பார்க்கலாம் என்பதை இங்கே காணலாம்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் முதன்மை ஆதரவாக உள்ளது. இப்போது அரசாங்கம் புதிய ஊதியக் குழுவை செயல்படுத்த உள்ளதால், அவர்களின் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்பது அனைவரின் மனதிலும் உள்ள கேள்வியாக உள்ளது. இதை தீர்பாமிப்பதில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் முக்கிய பங்கு வகிக்கும்.
சம்பளக் குழுவில் சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வுகளுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பெருக்கியாக செயல்படுகிறது. ஏழாவது ஊதியக் குழுவிற்கு, ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது, அதாவது அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ஆறாவது ஊதியக் குழுவின் கீழ் அவர்களின் அசல் ஓய்வூதியத்தை விட 2.57 மடங்கு அதிகரித்துள்ளது. எட்டாவது ஊதியக் குழுவிற்கு, மத்திய அமைச்சரவை ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அங்கீகரித்த பிறகு, ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கக்கூடும் என்பதை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்வோம்.
பெரும்பாலான அரசு ஊழியர்கள் தங்கள் கடைசி அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள் (பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் - OPS).
புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு, அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கபட்டு புதிய அடிப்படை ஊதியம் தீர்மானிக்கப்படும். அதன் பின்னர், ஓய்வூதியம் = அந்த ஊதியத்தில் 50%.
உதாரணமாக, ஏழாவது ஊதியக் குழுவின் (CPC) கீழ், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. அடிப்படை ஊதியம் ₹20,000 என்றால், அது புதிய மேட்ரிக்ஸில் ₹51,400 ஆனது.
ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் = சம்பளத்தில் 50%.
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்:
ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.40,000 என வைத்துக்கொள்வோம்
அடிப்படை ஊதியம்: ரூ.40,000
ஓய்வூதியம் (பழைய அடிப்படை ஊதியத்தில் 50%): ரூ.20,000
ஃபிட்மென்ட் ஃபாக்டர்:2.57 இல்
ரூ.20,000 × 2.57 = ரூ.51,400
எட்டாவது ஊதியக் குழுவின் கீழ் ரூ.25,000 ஓய்வூதியம் எப்படி ரூ.50,000 ஆக மாறும்? இது 8வது ஊதியக்குழுவில் நிர்ணயிக்கபடும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை சார்ந்துள்ளது.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2,0 ஆக நிர்ணயிக்கப்பட்டால், புதிய ஊதியக் குழுவின் கீழ் அடிப்படை ஓய்வூதியம் ரூ.50,000 ஆக அதிகரிக்கக்கூடும்.
ரூ.25,000 x 2.0 = ரூ.50,000. (100% அதிகரிப்பு)
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டால், புதிய ஊதியக் குழுவின் கீழ் அடிப்படை ஓய்வூதியம் ரூ.51,400 ஆக அதிகரிக்கக்கூடும்.
ரூ.25,000 x 2.57 = ரூ.51,400. (157% அதிகரிப்பு)
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.0 ஆக நிர்ணயிக்கப்பட்டால், புதிய ஊதியக் குழுவின் கீழ் அடிப்படை ஓய்வூதியம் ரூ.90,000 ஆக அதிகரிக்கக்கூடும்.
ரூ.25,000 x 3.0 = ரூ.90,000 (200% அதிகரிப்பு)
குறிப்பு: இவை மதிப்பீடுகள்தான். உண்மையான ஃபிட்மென்ட் ஃபாக்டர் ஆணையத்தின் அறிக்கையைப் பொறுத்தது.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.83 மற்றும் 2.86 க்கு இடையில் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இது ஓய்வூதியத்தில் சராசரியாக 30-50% அல்லது அதற்கு மேலான அதிகரிப்பு இருக்கும் என காட்டுகிறது. உதாரணமாக, ₹25,000 இருக்கும் ஓய்வூதியம் ₹50,000 ஆக இரட்டிப்பாகலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ