)
8th Pay Commission Salary Hike: 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஜூனியர் முதல் சீனியர் நிலை ஊழியர்கள் வரை அனைவரும் தங்கள் சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என்பதை அறிய விரும்புகிறார்கள். மத்திய அரசு ஊழியர்களில் பல வித லெவல் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அவற்றில் மிக முக்கியமான லெவலாக கருதப்படும் லெவல்-6 (கிரேடு பே-4200) ஊழியர்களின் ஊதிய உயர்வு கணக்கீட்டை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Level 6 Central Government Employees
லெவல் 6 -இல் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள், அவர்களின் தற்போதைய அடிப்படை ஊதியமான ரூ.35,400 எவ்வளவு அதிகரிக்கும் என்பதை அறிய ஆர்வமாக உள்ளனர். லெவல் 6 ஊழியர்களுக்கு ஃபிட்மென்ட் ஃபாக்டரின் விளைவு என்னவாக இருக்கும்? அனைத்து கொடுப்பனவுகளையும் சேர்த்து, விலக்குகளைக் கழித்த பிறகு, நிகர சம்பளம், அதாவது மாத இறுதியில் கையில் எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? இந்த கேள்விகளுக்கான பதிலையும், சம்பள உயர்வுக்கான முழு கணக்கீட்டையும் இந்த பதிவில் காணலாம்.
ஃபிட்மென்ட் ஃபாக்டர்: சம்பள உயர்வின் முக்கிய காரணி
- ஊதியக்குழுக்களில் 'ஃபிட்மென்ட் ஃபாக்டர்' தான் ஊதிய உயர்வை முடிவு செய்யும் மந்திரக்கோலாக கருதப்படுகின்றது.
- 7வது ஊதியக் குழுவில், இது 2.57 ஆக இருந்தது.
- 8வது ஊதியக் குழுவில், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 -க்குள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- எனினும், 1.92 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரே இறுதி செய்யப்படும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
1.92 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் நிலை 6 ஊழியர்களுக்கான முழு கணக்கீட்டை இங்கே காணலாம்.
லெவல் 6 மத்திய அரசு ஊழியர்களுக்கான முழுமையான கணக்கீடு
நிலை-6 ஊழியரின் புதிய சம்பளத்தின் முழுமையான கணிதத்தை இப்போது பார்ப்போம்.
1. புதிய அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
- தற்போதைய அடிப்படை ஊதியம் (நிலை-6): ₹35,400
- மதிப்பிடப்பட்ட ஃபிட்மென்ட் ஃபாக்டர்: 1.92
- புதிய அடிப்படை ஊதியத்தின் கணக்கீடு: ₹35,400 x 1.92 = ₹67,968
1.92 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரில் அடிப்படை சம்பளம் ₹35,400 இலிருந்து ₹68,000 ஆக அதிகரிக்கும்.
2. அகவன்சுகளில் அதிகரிப்பு
அடிப்படை ஊதியம் அதிகரித்த பிறகு அலவன்சுகள் இந்தப் புதிய அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்படும். இது ஊழியர்களின் சம்பளத்தை மேலும் அதிகரிக்கும்.
- அகவிலைப்படி (DA): புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்படும்போது, பழைய பணவீக்கம் அடிப்படையிலேயே சரிசெய்யப்படுவதால், அகவிலைப்படி பூஜ்ஜியமாக (0) மாற்றப்படுகிறது.
- வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA): X-வகை நகரத்தில் (டெல்லி, மும்பை, சென்னை போன்றவை) வசிக்கும் ஊழியர்கள் புதிய அடிப்படை ஊதியத்தில் 30% HRA பெறுவார்கள். HRA: ₹20,390
(குறிப்பு: இந்த விகிதங்கள் மாறலாம், மேலே கொடுக்கப்பட்ட கணக்கீட்டின் அடிப்படையில் இங்கு விகிதங்கள் உள்ளன)
- பயணப்படி (TA): பெரிய நகரங்களுக்கு, இது ₹3,600 ஆக இருக்கும்.
மொத்த சம்பளம் Vs கையில் கிடைக்கும் சம்பளம்:
இப்போது இவற்றையெல்லாம் சேர்த்து மொத்த மாத வருமானம் அதாவது மொத்த சம்பளம் எவ்வளவு கிடைக்கும் என்று காணலாம்.
மொத்த சம்பளக் கணக்கீடு
- புதிய அடிப்படை சம்பளம்: ₹67,968
- அகவிலைப்படி (DA): ₹0
- வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA): ₹20,390
- பயணப் படி (TA): ₹3,600
- மொத்த சம்பளம்: ₹91,958
உங்கள் சம்பளச் சீட்டில் தோன்றும் தொகை இது. ஆனால் உங்கள் கையில் எவ்வளவு கிடைக்கும் என்பதை அறிய, நாம் விலக்குகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கையில் கிடைக்கும் சம்பளக் கணக்கீடு (In-Hand Salary)
- NPS கழித்தல்: இது உங்கள் அடிப்படை ஊதியம் + அகவிலைப்படியில் 10% ஆகும்.
- ₹67,968 இல் 10% = ₹6,797
- CGHS கழித்தல் (தோராயமானது): இந்த நிலைக்கு இது இது ₹450 ஆக இருக்கும்.
கையில் கிடைக்கும் சம்பளம் எவ்வளவு?
- மொத்த சம்பளம்: ₹91,958
- மொத்த விலக்கு (NPS + CGHS): ₹6,797 + ₹450 = ₹7,247
- மதிப்பிடப்பட்ட நிகர சம்பளம் (கையில் கிடைப்பது): ₹91,958 - ₹7,247 = ₹84,711 மாதத்திற்கு
(குறிப்பு: வருமான வரி விலக்கு உங்கள் மொத்த வருமானம் மற்றும் முதலீடுகளைப் பொறுத்தது. இது இங்கே சேர்க்கப்படவில்லை.)
அகவிலைப்படி ஏன் பூஜ்ஜியமாக்கப்படும்?
இது ஊதியக்குழுக்களின் ஒரு விதியாகும். புதிய சம்பள ஆணையம் செயல்படுத்தப்படும் போதெல்லாம், அப்போது வரை பெறப்பட்ட அகவிலைப்படி (DA) தொகை புதிய அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்படும். இதற்குப் பிறகு, அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு, பின்னர் அதன் கணக்கீடு புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் 1%, 2% என மீண்டும் தொடங்கும்.
8வது ஊதியக்குழு லெவல் 6 ஊதிய உயர்வு அப்டேட்ஸ் சுருக்கமாக....
- 8வது ஊதியக்குழு செயல்படுத்தப்பட்ட பிறகு, நிலை-6 ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும் என்பதை இந்தக் கணக்கீடு தெளிவாகக் காட்டுகிறது.
- இன்று அடிப்படை ஊதியம் ₹ 35,400 ஆக இருக்கும் ஊழியர்களுக்கு, புதிய ஊதியம் (கையில் கிடைக்கும் சம்பளம்) ₹ 84,000 ஐத் தாண்டும்.
- இது ஊழியர்களின் நிதி நிலையை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ