8th Pay Commission Latest News: லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும் கோடிக்கணக்கான ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மத்திய அரசும் இதன் அமலக்காத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளது. விரைவில் குழு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Fitment Factor: ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்னும் முக்கிய அம்சம்
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? இது முழுமையாக 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' மற்றும் 'டிஏ இணைப்பு' ஆகிய இரண்டையும் சார்ந்துள்ளது. சம்பள உயர்வுக்கான இந்த முழு செயல்முறையும் இரண்டு நிலைகளில் நிறைவடைகிறது.
DA Merger: அகவிலைப்படி இணைப்பு
ஊதிய உயர்வின் முதல் நிலை, டிஏ இணைப்பு, அதாவது, ஊழியர்களின் மொத்த அகவிலைப்படியும் தற்போதைய அடிப்படை சம்பளத்தில் 'இணைக்கப்படும்'. இரண்டாவது ஃபிட்மென்ட் ஃபாக்டர். இது இந்த புதிய அடிப்படை சம்பளத்திற்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும்.
'ஃபிட்மென்ட் ஃபாக்டர்' என்றால் என்ன?
ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது ஒரு 'மேஜிக் எண்' ஆகும. இது ஒரு பெருக்கி. ஒரு புதிய ஊதியக் குழு செயல்படுத்தப்படும் போதெல்லாம், ஊழியர்களின் அப்போதைய அடிப்படை சம்பளம் இந்த 'மேஜிக் எண்ணால்' பெருக்கப்படுகிறது. இதிலிருந்து வரும் தொகை புதிய அடிப்படை சம்பளமாகும்.
இதன் நோக்கம் என்ன?
அனைத்து ஊழியர்களும் தங்கள் சம்பளத்தில் சீரான அதிகரிப்பைப் பெறுவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம். இந்த ஒரு காரணி கடந்த 10 ஆண்டுகளின் பணவீக்கம் மற்றும் உண்மையான சம்பள உயர்வு இரண்டையும் உள்ளடக்கியது.
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்
7வது ஊதியக் குழுவில், இந்த ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதாவது 6வது ஊதியக் குழுவின் கீழ் இருந்த ஊழியர்களின் அடிப்படை சம்பளம் (சம்பள பேண்ட் + கிரேடு பே) நேரடியாக 2.57 ஆல் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை சம்பளம் முடிவு செய்யப்பட்டது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்க, அரசாங்கம் ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியில் தித்தம் செய்கிறது. அகவிலைப்படி சம்பளத்தின் ஒரு பகுதி.
DA இணைப்பின் பொருள் என்ன?
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய ஊதியக் குழு வரும்போதெல்லாம், அது ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு, ஊதியக்குழு செயல்படுத்தப்படும் தேதி வரை ஊழியர்கள் பெற்று வந்த அகவிலைப்படி (Dearness Allowance) பழைய அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுகிறது. இதற்குப் பிறகு, இந்த புதிய தொகை ஃபிட்மென்ட் ஃபாக்டரால் பெருக்கப்படுகின்றது. அல்லது பழைய அடிப்படைத் தொகையில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை பெருக்கியும் புதிய அடிப்படை தொகை தீர்மானிக்கப்படலாம். இந்த செயல்முறைக்குப் பிறகு, அகவிலைப்படி மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குகிறது.
7th Pay Commission: 7வது ஊதியக் குழுவில் என்ன நடந்தது?
7வது ஊதியக் குழு ஜனவரி 1, 2016 அன்று அமல்படுத்தப்பட்டபோது, மத்திய அரசு ஊழியர்கள் அந்த நேரம் வரை 125% DA பெற்று வந்தனர். இந்த முழு 125% DA வும் பழைய அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்பட்டு, பின்னர் 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் புதிய சம்பளத்தை தீர்மானிக்கப் பயன்படுத்தப்பட்டது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக் குழுவில் சம்பளம் எவ்வாறு கணக்கிடப்படும்?
சூத்திரம்:
புதிய அடிப்படை சம்பளம் = தற்போதைய அடிப்படை சம்பளம் x (8வது ஊதியக்குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டர்)
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். 7வது ஊதியக்குழுவில் ஒரு ஊழியரின் தற்போதைய அடிப்படை சம்பளம் ரூ.30,000 என்று வைத்துக்கொள்வோம்.
8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை அரசாங்கம் 3.00 ஆக முடிவு செய்கிறது என்று வைத்துக்கொள்வோம் (இது ஒரு மதிப்பீடு மட்டுமே, உண்மையான எண்ணிக்கை கமிஷனின் பரிந்துரைகளுக்குப் பிறகுதான் வரும்).
இந்த அனுமானங்களில் புதிய அடிப்படை சம்பளம் இப்படி கணக்கிடப்படும்
புதிய அடிப்படை சம்பளம் = ₹30,000 x 3.00
புதிய அடிப்படை சம்பளம் = ₹90,000
இதன் அர்த்தம் என்ன?
அதாவது ஜனவரி 1, 2026 முதல், ரூ.30,000 அடிப்படை ஊதியம் பெற்ற ஊழியர்களின் புதிய அடிப்படை சம்பளம் ₹90,000 ஆக இருக்கும். இதில், புதிய விகிதங்களின்படி ஊழியர்களுக்கு அகவிலைப்படி, HRA மற்றும் பிற கொடுப்பனவுகள் தனித்தனியாக கிடைக்கும். இந்த ₹90,000 இல், ஜனவரி 2026 வரை மதிப்பிடப்பட்ட DA (சுமார் 60%) மற்றும் உண்மையான சம்பள உயர்வு இரண்டும் ஏற்கனவே சேர்க்கப்பட்டதாகக் கருதப்படும்.
8வது ஊதியக் குழுவிலிருந்து என்ன எதிர்பார்ப்புகள் உள்ளன?
1. DA Merger: அகவிலைப்படி இணைப்பு
ஜனவரி 1, 2026 -க்குள் அகவிலைப்படி மொத்தம் எவ்வளவு அதிகரிக்கிறதோ, அந்த தொகை மொத்தமாக அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும்.
2. Fitment Factor: புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர்
7வது ஊதியக் குழுவின் 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டரை ஊழியர் சங்கங்கள் மிகக் குறைவாகக் கருதுகின்றன. அதை 3.68 மடங்காக அதிகரிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. எனினும், இந்த முறை ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92-2.86 என்ற வரம்பிற்குள் இருக்கலாம் என சில அரசாங்க வட்டாரங்கள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வரம்பும் ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும்.
புதிய சம்பள ஆணையத்தின் தேவை ஏன்?
10 வருடங்களுக்கும் ஒரு முறை புதிய சம்பள ஆணையம் அமைக்கப்படுகிறது, இதன் மூலம்:
- அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சரிசெய்யப்படுகின்றது.
- அரசு மற்றும் தனியார் துறை சம்பளங்களுக்கு இடையிலான இடைவெளி குறைகிறது.
- சிறந்த செயல்திறனுக்காக ஊழியர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
Salary Hike: மிகப்பெரிய ஊதிய உய்ரவு
8வது சம்பளக் குழுவிற்கான காத்திருப்பு நீண்டதாக இருக்கலாம், ஆனால் அது எப்போது செயல்படுத்தப்படுகிறதோ, அப்போது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. சம்பள உயர்வின் முழுப் பொறுப்பும் ஃபிட்மென்ட் ஃபாக்டரைச் சார்ந்தது. அது எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, ஊதிய உயர்வும் அவ்வளவு அதிகமாக இருக்கும். DA இணைப்பு என்பது இந்த செயல்முறையின் ஒரு பகுதியாகும். இது புதிய அடிப்படை சம்பளத்தின் அடிப்படையை உருவாக்குகிறது.
மேலும் படிக்க | SIP Mutual Fund: சிறிய அளவிலான முதலீட்டை கோடிகளாக பெருக்க உதவும் முதலீட்டு டிப்ஸ்
மேலும் படிக்க | LPG சிலிண்டர் விலை குறைந்தது: ஜூலை முதல் நாளே வந்த குட் நியூஸ், லேட்டஸ்ட் விலை இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









