8th Pay Commission Dearness Allowance: புதிய ஊதியக்குழுக்கள் உருவாகும் போது லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய அளவுகள் திருத்தப்படுகின்றன. தற்போது இன்னும் சில மாதங்களில் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரவுள்ள நிலையில், அடுத்த ஊதிய திருத்தத்திற்காக ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் எதிர்பார்க்கப்படும் பெரிய ஏற்றம்
சம்பள திருத்தம் ஊழியர்களின் மாதாந்திர கொடுப்பனவுகளில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடும். அவர்களின் வாழ்க்கை முறையை பராமரிக்கவும், நிதி இலக்குகளை அடையவும், அவர்களின் ஓய்வூதிய சலுகைகளை அதிகரிக்கவும் இது உதவும்.
Dearness Allowance: அகவிலைப்படி
ஊதிய குழுக்கள் பொதுவாக பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படுகின்றன. ஒரு ஊதியக்குழு அமலுக்கு வந்த பிறகு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றாலும், 6 மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் அகவிலைப்படி (DA) திருத்தம் காரணமாக அவர்களின் ஒட்டுமொத்த ஊதியம் தொடர்ந்து அதிகரிக்கும்.
DA Hike: டிஏ உயர்வு
ஊழியர்கள் பணவீக்கத்தை சமாளிக்க உதவும் வகையில், ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி திருத்தப்படுகின்றது. டிஏ அதிகரிப்பு ஊழியரின் அடிப்படை ஊதியத்தின் சதவீதமாக செய்யப்படுகிறது. ஊதியக்குழுவில் அடிப்படை சம்பளம் உயர்ந்தால், அகவிலைப்படி தொகை தானாகவே உயரும்.
8வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிலை 3 முதல் நிலை 10 வரை உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி தொகைகள் எவ்வளவு இருக்கும் என இந்த பதிவில் காணலாம்.
ஊழியர்களுக்கான அகவிலைப்படி செயல்பாடு எப்படி உள்ளது?
அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் DA கணக்கிடப்படுகிறது. உங்கள் அடிப்படை ஊதியம் ரூ.30,000 ஆகவும், அகவிலைப்படி விகிதம் 50 சதவீதமாகவும் இருந்தால், உங்களுக்கு அகவிலைப்படியாக ரூ.15,000 கிடைக்கும். அகவிலைப்படி 55 சதவீதமாக அதிகரித்தால், அகவிலைப்படி தொகை ரூ.15,000 இலிருந்து ரூ.16,500 ஆக உயரும்.
மொத்த சம்பளம் எவ்வளவு இருக்கும்?
அகவிலைப்படி 50 சதவீதமாக இருந்தபோது- ரூ.30,000+ரூ.15,000= ரூ.45,000
அகவிலைப்படி 55 சதவீதமாக அதிகரித்தபோது- ரூ.30,000+ரூ.16,500= ரூ.46,500
Fitment Factor: 8வது ஊதியக் குழுவிற்கான ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்ன?
8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டவுடன், ஃபிட்மென்ட் ஃபாக்டர் பற்றி அறியப்படும். பல கணிப்புகள் மற்றும் நிபுணர்கள் இது 1.92-2.86 வரம்பில் இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
Salary Hike Calculation: சம்பள உயர்வு
பின்வரும் அனுமானங்களின் அடிப்படையில் ஊதிய உயர்வுக்கான கணக்கீட்டை செய்யலாம்:
- அகவிலைப்படி: தற்போதைய 55 சதவீதத்தில் அகவிலைப்படியை எடுத்துக்கொள்ளலாம்.
- ஃபிட்மென்ட் ஃபாக்டர்: 55% டிஏவை 2, 2.25 மற்றும் 2.5 ஃபிட்மென்ட் ஃபாக்டர்களின் அடிப்படையில் கணக்கிடலாம்.
பின்வரும் ஊதிய நிலைகளில் வரும் ஊழியர்களுக்கு மதிப்பிடப்பட்ட புதிய அடிப்படை சம்பளம் மற்றும் அகைவிலைப்படி தொகைகளுக்கான கணக்கீடுகளை காணலாம்:
நிலை 3 (அடிப்படை ஊதியம் ரூ. 25,200), நிலை 4 (அடிப்படை ஊதியம் ரூ. 31,400), நிலை 5 (அடிப்படை ஊதியம் ரூ. 37,000), நிலை 6 (அடிப்படை ஊதியம் ரூ. 41,100), நிலை 7 (அடிப்படை ஊதியம் ரூ. 44,900), நிலை 8 (அடிப்படை ஊதியம் ரூ. 50,500), நிலை 9 (ரூ. 58,000), மற்றும் நிலை 10 (ரூ. 63,100).
Level 3: ஊழியர் நிலை 3 -க்கான (அடிப்படை ஊதியம் ரூ. 25,200) மதிப்பிடப்பட்ட புதிய சம்பளம், அகவிலைப்படி

Level 4: ஊழியர் நிலை 4 -க்கான (அடிப்படை ஊதியம் ரூ. 31,400) மதிப்பிடப்பட்ட புதிய சம்பளம், அகவிலைப்படி

Level 5: ஊழியர் நிலை 5 -க்கான (அடிப்படை ஊதியம் ரூ. 37,000) மதிப்பிடப்பட்ட புதிய சம்பளம், அகவிலைப்படி

Level 6: ஊழியர் நிலை 6 -க்கான (அடிப்படை ஊதியம் ரூ. 41,100) மதிப்பிடப்பட்ட புதிய சம்பளம், அகவிலைப்படி

Level 7: ஊழியர் நிலை 7 -க்கான (அடிப்படை ஊதியம் ரூ. 44,900) மதிப்பிடப்பட்ட புதிய சம்பளம், அகவிலைப்படி

Level 8: ஊழியர் நிலை 8 -க்கான (அடிப்படை ஊதியம் ரூ. 50,500) மதிப்பிடப்பட்ட புதிய சம்பளம், அகவிலைப்படி

Level 9: ஊழியர் நிலை 9 -க்கான (அடிப்படை ஊதியம் ரூ. 58,000) மதிப்பிடப்பட்ட புதிய சம்பளம், அகவிலைப்படி

Level 10: ஊழியர் நிலை 10 -க்கான (அடிப்படை ஊதியம் ரூ. 63,100) மதிப்பிடப்பட்ட புதிய சம்பளம், அகவிலைப்படி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









