)
8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக 8வது ஊதியக்குழு குறித்த குழப்பத்தில் உள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதமே 8வது ஊதியக்குழுவை அமைக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும், அதன் பிறகு அதை பற்றிய எந்த வித அப்டேட்டையும் அரசு அளிக்கவில்லை. இது ஊழியர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே பதற்றத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு சமீபத்திய சில நாட்களாக அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு விஷயம் இன்னும் கவலையை அதிகரித்துள்ளது. 8வது ஊதியக்குழுவில் சில அலவன்சுகள் நீக்கப்படும் என கூறப்பட்டு வருகின்றது. அலவன்சுகள் குறைவதால் ஊதியமும் குறையக்கூடும் என்ற செய்தியும் பரவி வருகின்றது. இது ஊழியர்களின் குழப்பத்தை அதிகமாக்கியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் எந்தெந்த அலவன்சுகள் குறையும்? அலவன்சுகள் குறைந்தால் ஊதியமும் குறையுமா? ஊதிய உயர்வு பற்றி கனவுகண்டுகொண்டிருக்கும் ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறதா? இவற்றுக்கான விடைகளை இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசு 10 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு ஊதியக்குழுவை உருவாக்குகிறது. இது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியதாரர்களின் ஓய்வுதியம் மற்றும் பிற அலவன்சுகளை மாற்றுகிறது. 7வது ஊதியக்குழு 2016 இல் அமலுக்கு வந்தது. இப்போது 8வது சம்பளக் கமிஷனுக்கான நேரம். இது ஜனவரி 2025 இல் அறிவிக்கப்பட்டது, ஆனால் அரசாங்கம் இன்னும் எந்த அடுத்த கட்ட அறிவிப்பையும் வெளியிடவில்லை. புதிய ஊதியக்குழு கமிஷன் சம்பளம் அல்லது ஃபிட்மென்ட் ஃபாக்டரை விட அலவன்சுகளில் அதிக கவனம் செலுத்தும் என்று பொருலாதார நிபுணர்கள் சிலர் கூறுகிறார்கள்.
- 7வது ஊதியக்குழுவின் போது, 196 கொடுப்பனவுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. இவற்றில், 52 நீக்கப்பட்டன, 36 இணைக்கப்பட்டன.
- 8வது ஊதியக்குழுவில், அமைப்பை எளிமையாகவும் வெளிப்படையாகவும் மாற்ற சில கொடுப்பனவுகள் அகற்றப்படலாம் அல்லது மாற்றப்படலாம்.
- 8வது சம்பளக் கமிஷனின் முக்கிய குறிக்கோள் தேவையற்ற கொடுப்பனவுகளை அகற்றுவதாகும், குறிப்பாக டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக தேவையில்லாதவையாகும் அலவன்சுகள் நீக்கப்படும் என கூறப்படுகின்றது.
- இது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியை (DA) அதிகரிக்கக்கூடும்.
Travel Allowance (TA): பயணப் படி (TA) - இதன் அமைப்பு மாற்றப்படலாம்.
Special Duty Allowances: சிறப்பு கடமைப் படிகள் - இவை நீக்கப்படலாம்.
Regional Allowances: அவை மற்ற படிகளைப் போலவே இருப்பதால் நீக்கப்படலாம்.
Old Departmental Allowances: பல பழைய படிகள் ரத்து செய்யப்படலாம்.
இந்த மாற்றங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியை அதிகரிக்கக்கூடும். ஏனெனில் நீக்கப்பட்ட அலவன்சுகளுக்கான தொகை சம்பளத்தின் இந்த முக்கிய அலவன்சுகளில் சேர்க்கப்படும். ஓய்வூதியம் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியைச் சார்ந்து இருப்பதால் அதுவும் அதிகரிக்கும். இந்தப் புதிய முறை காகித வேலைகளைக் குறைத்து, திறனை அதிகரித்து, பிழைகளுக்கான சாத்தியத்தை குறைக்கும்.
எனினும், இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இதற்கான விவாதங்கள் நடந்து வருகின்றன. மேலும் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு புதுப்பிப்பு வரக்கூடும் என எதிர்பர்க்கப்படுகின்றது. கொடுப்பனவுகள் வேலையில் இருக்கும் ஆபத்து, வேலையில் சிரமம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலுடன் இணைக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அலவன்சுகள் குறித்த ஒரு அப்டேட்டை மத்திய அரசு வெளியிடும் என மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ