மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு ஷாக், ஒரு சர்ப்பரைஸ்: சம்பளம் அதிரடியாய் உயரும், ஆனால்....

8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணமும் அதிருப்தியும் ஒரே நேரத்தில் கிடைத்துள்ளன. இதற்கு என்ன காரணம்? அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 12, 2025, 03:52 PM IST
  • 8வது ஊதியக்குழு எப்போது அமலுக்கு வரும்?
  • காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்.
  • ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு ஷாக், ஒரு சர்ப்பரைஸ்: சம்பளம் அதிரடியாய் உயரும், ஆனால்....

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த செய்தி அவர்களுக்கு சமீபத்தில் கிடைத்தது. ஜனவரி மாதத்தில் 8வது ஊதியக்குழு அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

7th Pay Commission: 7வது ஊதியக்குழு எப்போது அமலுக்கு வந்தது?

பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக் குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.  அதன் படி பார்த்தால் 8வது ஊதியக்குழுவின் அறிவிப்பில் ஏற்கனவே தேமதம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் மத்திய அரசு விரைவாக ஊதியக்குழுவை அமைத்து துரித கதியில் அதன் பரிந்துரைகளை அமலுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  8வது ஊதியக்குழு ஜனவரி 1, 2026 ஆம் தேதி அமலுக்கு வர வேண்டும். எனினும் இதில் சிறிய தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகின்றது. 

8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும் என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், இதற்கான செயலாக்கத்தில் நேரம் எடுக்கும் என்ற செய்தி அதிருப்தியை அளித்துள்ளது.

Central Government Employees: காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) அடுத்த கட்ட அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். எட்டாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த இன்னும் அதிக நேரம் ஆகலாம். 8வது சம்பளக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, அரசாங்கம் அதன் செயல்முறைக்கு எந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கையையும் இன்னும் எடுக்கவில்லை. இந்த மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலும் சம்பள கமிஷனை உருவாக்க எவ்வளவு பணம் செலவிடப்படும் என்பதை மத்திய அரசு அறிவிக்கவில்லை. 

இத்தகைய சூழ்நிலையில், இந்த நிதியாண்டில் சம்பளக் குழுவின் பரிந்துரைகளை அரசு செயல்படுத்த வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. கடந்த கால போக்குகளின் படி, 8வதுஊதியக்குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வர வேண்டும். ஆனால், மத்திய அரசு சம்பள கமிஷனுக்கான வருடாந்திர பட்ஜெட்டை தயாரிக்கவில்லை. இதன் காரணமாக இதன் செயலாக்கத்தில் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகின்றது.

7வது ஊதியக்குழுவை அமைக்க 18 மாதங்கள் ஆனது

7வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் டிசம்பரில் நிறைவடையும். 7வது சம்பள கமிஷனை உருவாக்கி அதன் பரிந்துரைகளை அமல்படுத்த 18 மாதங்கள் ஆயின. 7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 7வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமல்படுத்தப்பட்டன. இத்தகைய சூழ்நிலையில், ஒரு வருடத்திற்குள் 8வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளை எவ்வாறு அமலுக்கு கொண்டு வரும் என்ற கேள்வி எழுகிறது. 8வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்படும் என கூறப்படுகின்றது.

8வது ஊதியக் குழு ஜனவரி 2026 இல் செயல்படுத்தப்படும் என்று நம்பப்படுகின்றது. அந்த நேரத்தில் அகவிலைப்படி (Dearness Allowance) சுமார் 60 சதவீதமாக இருக்கும் என கூறப்படுகின்றது. தற்போதைய குறைந்தபட்ச சம்பளம் (7வது ஊதியக் குழுவின் கீழ்) = ரூ.18,000. டிஏ சேர்த்த பிறகு சம்பளம் = ரூ.28,800 ஆகும்.

Salary Hike: ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?

8வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.08 வரை இருக்கும் என சில நிபுணர்களும், 2.86 ஆக இருக்கும் என சில நிபுணர்களும் கணித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பள உயர்வு கணக்கீட்டை இங்கே காணலாம்.

Fitment Factor

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக இருந்தால், 

- புதிய குறைந்தபட்ச சம்பளம் = ரூ.34,560 (சுமார் 20% அதிகரிப்பு) ஆக இருக்கும். 

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.08 ஆக இருந்தால், 

- குறைந்தபட்ச சம்பளம் = ரூ.37,440 (சுமார் 30% அதிகரிப்பு) ஆக உயரும். 

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆனால், 

- குறைந்தபட்ச சம்பளம் = ரூ.51,480 (சுமார் 80% அதிகரிப்பு) ஆக அதிகரிக்கும்.

டிஏவை விலக்கிவிட்டு பார்த்தால், சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?

- 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டரில் 92% 
- 2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டரில் 108% 
- 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டரில் 186%

(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.)

மேலும் படிக்க | PM Kisan: விரைவில் வருகிறது 19வது தவணை, ஆனால் இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது!

மேலும் படிக்க | புதிய வருமான வரி மசோதா 2025... காத்திருக்கும் முக்கிய அறிவிப்புகள் குறித்த முழு விபரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News