)
8th Pay Commission ToR: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய பணிகளில் பணிபுரிகிறார்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கபட்ட முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தேசிய கவுன்சில்-கூட்டு ஆலோசனை அமைப்பு அளித்த அப்டேட்
மத்திய அரசு ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய கவுன்சில்-கூட்டு ஆலோசனை இயந்திரம் (NC-JCM), 8வது ஊதியக்குழு இன்னும் முறையாக அமைக்கப்படாத நிலையில், சம்பள உயர்வு விவாதங்களுக்குத் தயாராகி வருவதாகக் கூறியுள்ளது. புதிய சம்பள அமைப்பை வடிவமைக்க அடிப்படையாக அமையும் ஆணையத்தின் விதிமுறைகள் (ToR) ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக NDTV பிராஃபிட் அறிக்கை தெரிவிக்கிறது.
- NC-JCM என்பது அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கத் தலைவர்களைக் கொண்ட ஒரு அதிகாரப்பூர்வ அமைப்பாகும்.
- அதன் நோக்கம் மத்திய அரசுக்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையே ஒரு தொடர்பு சேனலாகச் செயல்பட்டு ஊழியர்களின் கவலைகள் மற்றும் கோரிக்கைகளை அரசிடம் கொண்டுென்று அவற்றை திறம்பட நிவர்த்தி செய்வதாகும்.
குறைந்தபட்ச ஊதியக் கணக்கிடு: NC-JCM வழங்கிய பரிந்துரைகள்
- 8வது சம்பளக் குழு, மூன்று குடும்ப உறுப்பினர்களை மட்டுமே கொண்ட தற்போதைய மாதிரிக்கு பதிலாக, வயதான பெற்றோர்கள் உட்பட ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குடும்ப மாதிரியின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிட வேண்டும் என்று NC-JCM முன்மொழிந்தது.
தற்போதுள்ள அமைப்பு எப்படி உள்ளது?
- தற்போது 7வது ஊதியக் குழுவின் கீழ், குடும்பத்தில் சம்பாதிக்கும் கணவர் ஒரு யூனிட்டாகவும், மனைவி 0.8 யூனிட்டாகவும், இரண்டு குழந்தைகள் தலா 0.6 யூனிட்களாகவும் கணக்கிடப்படுகிறார்கள். இந்த வழிமுறை 15வது இந்திய தொழிலாளர் மாநாட்டின் (1957) விதிமுறைகளுக்கு இணங்க உள்ளது.
- NC-JCM இந்த மாடல் மறுசீரமைக்கப்படும் என எதிர்பார்க்கிறது.
- பெற்றோரைப் பராமரிப்பது ஒரு நெறிமுறைக் கடமையாக இருப்பதைத் தவிர, இந்திய சட்டத்தின்படி ஒரு சட்டப் பொறுப்பாகவும் உள்ளது என்பதி அதன் வாதமாக உள்ளது.
பே ஸ்கேல்களின் இணைப்பு: NC-JCM வழங்கிய பரிந்துரைகள்
- NC-JCM இன் ஊழியர்கள் தரப்பு, ஊதிய தேக்கத்தைத் தடுக்க, சாத்தியமற்ற ஊதிய அளவுகளை இணைக்கவும் பரிந்துரைத்துள்ளது.
- இது மாற்றியமைக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட தொழில் முன்னேற்றத் திட்டத்தை மறைமுகமாக பாதிக்கிறது.
- ஊதிய லெவல் 1 ஐ லெவல் 2 உடன், லெவல் 3 ஐ லெவல் 4 உடன், மற்றும் லெவல் 5 ஐ லெவல் 6 உடன் இணைக்க இது கோரியுள்ளது.
- இதன் மூலன் லெவல் 1, லெவல் 3 மற்றும் லெவல் 5 -இன் ஊழியர்களின் ஊதியம் முறையே லெவல் 2, லெவல் 4 மற்றும் லெவல் 6 ஊழியர்களுக்கு நிகராக திருத்து அமைக்கப்படும்.
- இந்த இணைப்பால் பதவி உயர்வுக்கான செயல்முறையும் எளிதாகும், வேகமாகும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த அப்டேட் என்ன?
வழக்கமாக, குழு அமைக்கப்பட்டவுடன் அது சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்தாலோசித்து, கோரிக்கைகளை ஆயு செய்து தனது பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும். ஆணையத்தின் பரிந்துரைகள் சுமார் 18 மாதங்களில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு அரசாங்கம் இறுதி ஒப்புதலை வழங்குவதற்கு மூன்று முதல் ஒன்பது மாதங்கள் ஆகக்கூடும். அந்த வகையில், 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டு மத்தியில் அல்லது 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில் முழுமையாக அமலுக்கு வரும் என நம்பப்படுகின்றது. 8வது சம்பளக் குழுவின் நிதிப் பாதிப்பு ரூ.2.4-3.2 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கோடக் நிறுவன பங்குகள் சமீபத்திய குறிப்பில் தெரிவித்துள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ