)
8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. 8வது ஊதியக் குழு அக்டோபர் 2025 இறுதியில் அல்லது நவம்பர் தொடக்கத்தில் அமைக்கப்படலாம் என எமது வட்டாரங்களில் இருந்து பெறப்பட்ட பிரத்தியேக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழு அமைக்கப்பட்டவுடன், சம்பள உயர்வு, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அகவிலைப்படி இணைப்பு குறித்த பணிகள் விரைவாகத் தொடங்கும்.
கடந்த சில மாதங்களாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் பற்றிய குழப்பத்தில் இருந்தனர். 8வது சம்பள ஆணையம் எப்போது அமைக்கப்படும்? அதன் உண்மையான தாக்கம் எப்போது தெரியும்? இப்படி பல கேள்விகள் இருந்தன. இவை அனைத்தும் இப்போது கிட்டத்தட்ட தெளிவாகிவிட்டன. அக்டோபர் பிற்பகுதியில் அல்லது நவம்பர் தொடக்கத்தில் குழு அமைக்கப்படலாம் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8வது ஊதியக்குழு அமைக்கப்படுவதற்கு ஒரு தெளிவான டைம்லைன் கிடைத்தால் அதன் மூலம் பல விஷயங்கள் தெளிவாகும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர், அகவிலைப்படி இணைப்பு, புதிய சம்பள மேட்ரிக்ஸ் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றின் முழு கணிதமும் அடுத்த கட்டத்திற்கு செல்லும் முன், அதற்கு அடித்தளம் அமைக்கும் நடவடிக்கையாக இந்த டைம்லைன் பார்க்கபடுகின்றது.
ஊதியக்குழு அமைக்கப்பட்ட உடனேயே ஊதியம் அதிகரிக்கும் என நினைக்க வேண்டாம். ஆனால், இதை சம்பள உயர்வை நொக்கிய முதல் படியாக கருதலாம். குழு அமைக்கப்பட்டவுடன் அமைச்சகங்களுடனான சந்திப்புகள், தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைகள் ஆகியவை நடக்கும். அதன் பிறகு குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதாவது, 8வது ஊதியக்குழுவிற்கான காத்திருப்பு இன்னும் முடிவடையவில்லை. ஆனால், இப்போது அனைத்தும் சற்று தெளிவாகியுள்ளன.
மோடி அரசு மத்திய ஊழியர்களுக்கு மிகப்பெரிய தீபாவளி பரிசை வழங்கத் தயாராகி வருவதாக வட்டாரங்களிலிருந்து எங்களுக்கு பிரத்யேக தகவல்கள் கிடைத்துள்ளன. 8வது சம்பள ஆணையத்திற்கான குழு அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் 2025 தொடக்கத்தில் அமைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு குழுவின் உருவாக்கம் மடுமல்ல. இது செயல்முறையின் அதிகாரப்பூர்வ தொடக்கமாகும். இந்த தொடக்கம் நாட்டின் 1 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆயிரக்கணக்கான மற்றும் லட்சக்கணக்கான வருமான அதிகரிப்பைக் கொண்டுவரும்.
- இந்த செயல்முறை தற்போது வேகம் பெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறன.
- அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் தொடக்கத்தில் குழு அமைக்கப்படும் என்ற செய்தி கிடைத்துள்ளது.
- ஊழியர்களின் புதிய சம்பளம், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மற்றும் அலவன்சுகளில் என்ன மாற்றம் இருக்கும் என்பதை இந்தக் குழு முடிவு செய்யும்.
- முந்தைய ஊதியக்குழுக்களைப் போலவே, இந்த முறையும் குழுவின் கட்டளை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது ஒரு மூத்த அதிகாரிக்கு வழங்கப்படலாம்.
- அவர்களுடன், பொருளாதார வல்லுநர்கள், நிதி வல்லுநர்கள் மற்றும் அரசு சேவை விதிகளை அறிந்தவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
- சம்பளம் மற்றும் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை ஆய்வு செய்து இந்தக் குழு அரசாங்கத்திடம் அறிக்கையை சமர்ப்பிக்கும்.
இதற்குப் பின்னால் ஒரு தெளிவான அரசியல் காரணம் உள்ளது. பீகார் தேர்தல்கள் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளன. அதற்கு முன் மத்திய அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட விரும்புகிறது. ஜே.சி.எம் (கூட்டு ஆலோசனை அமைப்பு) செயலாளர் (பணியாளர்கள் பக்கம்) ஷிவ் கோபால் மிஸ்ராவும் சமீபத்திய பேட்டியில், டெல்லி தேர்தலின் போது பிரதமர் மோடி 8வது சம்பள ஆணையத்திற்கு ஒப்புதல் அளித்ததை சுட்டிக்காட்டினார்
இந்த முறையும் அதே போன்ற ஒரு பாணி தொடரலாம். பீகார் தேர்தல்கள் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்று நம்பப்படுகிறது. அதற்கு முன்பு சம்பள கமிஷன் அமைக்கப்படலாம். 2027 ஆம் ஆண்டு உ.பி. தேர்தலின் போது கமிஷனின் பரிந்துரைகள் வெளிவரும். மேலும் 2028-29 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு 8வது ஊதியக்குழுவை செயல்படுத்தி, அரசாங்கம் அதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது.
Fitment Factor: ஃபிட்மென்ட் ஃபாக்டரில் என்ன மாற்றம் வரும்?
ஊதியக்குழுக்களில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் முக்கிய காரணியாக பார்க்கப்படுகின்றது. 7வது ஊதியக்குழுவில் அது அது 2.57 ஆக இருந்தது. 8வது ஊதியக்குழுவில் இது 1.92 முதல் 3.68 -க்குள் இருக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது.
DA Merger: அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா?
2026 ஆம் ஆண்டுக்குள் டிஏ 60% க்கு மேல் இருக்கலாம். அறிக்கை தயாரிக்கும் நேரத்தில் என்ன டிஏ இருந்தாலும் அது அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். இதற்குப் பிறகு, புதிய அகவிலைபடிக்கான கணக்கீடு மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும்.
Pay Matrix: ஊதிய அமைப்பு எப்படி இருக்கும்?
ஊதிய அமைப்பின் பல லெவல்களை இணைக்கும் திட்டம் இருக்கலாம். இது ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து புகார் அளித்து வரும் முறைகேடுகளை சரிசெய்யும்.
ஊதிய, ஓய்வூதிய உயர்வு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை சார்ந்து இருக்கும். எனினும், தோராயமாக, மொத்த சம்பளத்தில் 25% முதல் 40% அல்லது அதற்கு மேற்பட்ட அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ