)
8th Pay Commission Latest News: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, இன்று 8வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்தது. இது கிட்டத்தட்ட 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆணையத்தின் தலைவராக இருப்பார். பேராசிரியர் புலக் கோஷ் உறுப்பினராகவும், பங்கஜ் ஜெயின் அதன் உறுப்பினர்-செயலாளராகவும் இருப்பார்கள். இந்த ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை அறிவித்தது.
8வது ஊதியக்குழு 18 மாதங்களுக்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும். இதன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செவ்வாயன்று தெரிவித்தார்.
- 8வது மத்திய ஊதியக் குழு ஒரு தற்காலிக அமைப்பாக இருக்கும் என்று அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- ஆணையத்தில் ஒரு தலைவர்; ஒரு உறுப்பினர் (பகுதி நேரம்) மற்றும் ஒரு உறுப்பினர்-செயலாளர் இருப்பார்கள்.
- இந்த குழு அமைக்கப்பட்ட தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் அதன் பரிந்துரைகளை வழங்கும்.
- தேவைப்பட்டால், பரிந்துரைகள் இறுதி செய்யப்படும்போது, ஏதேனும் ஒரு விஷயத்தில் இடைக்கால அறிக்கைகளை அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படலாம்.
- நாட்டின் பொருளாதார நிலைமைகள் மற்றும் நிதி சீரமைப்புக்கான அவசியம்
- வளர்ச்சிச் செலவுகள் மற்றும் நலத்திட்ட நடவடிக்கைகளுக்கு போதுமான வளங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியம்
- பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டங்களின் நிதி இல்லாத செலவு
- பொதுவாக சில மாற்றங்களுடன் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளும் மாநில அரசுகளின் நிதிகளில் ஏற்படக்கூடிய தாக்கம்
- மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடைக்கும் நடைமுறையில் உள்ள ஊதிய அமைப்பு, சலுகைகள் மற்றும் பணி நிலைமைகள்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில் 8வது ஊதியக்குழு தொடர்பான முடிவுகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். பல்வேறு அமைச்சகங்கள், மாநில அரசுகள், கூட்டு ஆலோசனை அமைப்புகள் மற்றும் ஊழியர்கள் தரப்புடன் ஆலோசனை நடத்திய பிறகு, ToR இறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
8வது மத்திய சம்பள கமிஷனை அமைப்பது குறித்து பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகங்கள், பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை, மாநிலங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களிடமிருந்து உள்ளீடுகளைக் கோரியதாக அரசாங்கம் ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு திருத்தப்பட்ட சம்பள விகிதங்கள் எப்போது செயல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, "8வது சம்பளக் குழு தனது பரிந்துரைகளை அளித்து, அதை அரசு ஏற்றுக்கொண்டவுடன் அவை செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களிப் ஓய்வூதியத்தை திருத்துவதற்காக வழக்கமாக 10 வருடங்களுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது சம்பளக் குழு பிப்ரவரி 2014 இல் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் செயல்படுத்தப்பட்டன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ