)
8th Pay Commission Latest News: நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 8வது ஊதியக்குழு தொடர்பான ஒரு பெரிய புதுப்பிப்பு வெளியாகியுள்ளது. புதிய சம்பள கமிஷன் அமல்படுத்தப்படுவதற்காக ஊழியர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். சமீபத்தில் ஒரு புதிய அறிக்கை வெளியாகியுள்ளது, அதில் 8வது ஊதியக் குழு எப்போது அமல்படுத்தப்படும், அடிப்படை சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது பற்றிய குறிப்புகள் உள்ளன,
Central Government Employees: காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பு மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய அமைப்பை மாற்ற, மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு புதிய சம்பள கமிஷனை அமல்படுத்துகிறது. இதற்கு முந்தைய ஊதியக்குழுவான 7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது, அதன் பரிந்துரைகள் 2016 முதல் செயல்படுத்தப்பட்டன.
7வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டது. தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள், 7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் நிறைவுக்கு வருகின்றன. இந்த சூழ்நிலையில், 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக காத்திருக்கிறார்கள்.
அடிப்படை ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்?
- மத்திய அரசு ஊழியர்கள் அடிப்படை ஊதிய உயர்வு குறித்த அப்டேட்களுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
- சமீபத்தில் இது தொடர்பாக ஒரு புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.
- 8வது ஊதியக்குழு தொடர்பாக சில பரிந்துரைகள் கிடைத்துள்ளதாக மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
- இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
சம்பள அமைப்பு புதுப்பிக்கப்படும்
8வது ஊதியக்குழு குறித்த அறிவிப்பை மத்திய அரசு ஜனவரி 2025 இல் வெளியிட்டது. அறிவிப்புக்குப் பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகவும் மந்தமாகவே நடந்துகொண்டிருக்கின்றன. 8வது ஊஹியக்குழுவின் பரிந்துரைகள் 2026 ஆம் ஆண்டு மத்தியில் அல்லது 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முறையாக அமைக்கப்பட்ட பிறகு, 8வது ஊதுயக்குழு லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு திருத்தப்பட்ட சம்பள அமைப்பு மற்றும் ஓய்வூதியத்தை அளிக்கும். இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் பல்வேறு மாநில அரசுகள் உட்பட பல துறைகள் மற்றும் அமைச்சகங்களுடன் மையம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய சம்பளக் குழு எப்போது செயல்படுத்தப்படும்?
பணவீக்கம் மற்றும் அதிகரிக்கும் விலைவாசிக்கு ஏற்ப ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை நிர்ணயிக்க 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு புதிய சம்பளக் குழு அமைக்கப்படுகிறது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்ற ஒரு முக்கிய காரணியின் அடிப்படையில் சம்பளத்தில் திருத்தம் செய்யப்படும் என நம்பப்படுகின்றது.
அடிப்படை ஊதியத்தை திருத்த ஃபிட்மென்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்படுகிறது. 7வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 -க்குள் நிர்ணயிக்கப்படும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். பழைய அடிப்படை ஊதியத்துடன் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படுகின்றது. உதாரணமாக, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டால் ரூ.30,000 அடிப்படை சம்பளம் பெறும் ஒரு ஊழியரின் புதிய அடிப்படை சம்பளம் ரூ.77,100 ஆக அதிகரிக்கும். 8வது சம்பளக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகமாக இருந்தால், சம்பள உயர்வு அதிகமாகும்.
பல்வேறு கிரேட் பே அளவுகளில், 1.92 மற்றும் 2.57 ஃபிட்மெண்ட் ஃபாக்டர்களில் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும் என இங்கே காணலாம்.
| கிரேட் பே | 1.92 ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் புதிய ஊதிய உயர்வு | 2.57 ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் புதிய ஊதிய உயர்வு |
| கிரேட் பே 1900 | நிகர சம்பளம் ₹65,512 | நிகர சம்பளம் ₹86,556 |
| கிரேட் பே 2400 | நிகர சம்பளம் ₹86,743 | நிகர சம்பளம் ₹1,14,975 |
| கிரேட் பே 4600 | நிகர சம்பளம் ₹1,31,213 | நிகர சம்பளம் ₹1,74,636 |
| கிரேட் பே 7600 | நிகர சம்பளம் ₹1,82,092 | நிகர சம்பளம் ₹2,41,519 |
| கிரேட் பே 8900 | நிகர சம்பளம் ₹2,17,988 | நிகர சம்பளம் ₹2,89,569 |
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ