8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: டென்ஷனில் ஓய்வூதியதாரர்கள், 'மிஸ்' ஆன முக்கிய அறிவிப்பு

8th Pay Commission Latest News: மத்திய அரசின் சில நடவடிக்கைகள் ஓய்வூதியதாரர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளன. இதற்கான காரணம் என்ன? முழுமையான தகவலை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 18, 2025, 04:25 PM IST
  • 7வது Vs 8வது ஊதியக்குழு.
  • ஓய்வூதியதாரர்களின் கவலை என்ன?
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு என்னென்ன மாற்றங்கள் நிகழக்கூடும்?
8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: டென்ஷனில் ஓய்வூதியதாரர்கள், 'மிஸ்' ஆன முக்கிய அறிவிப்பு

8th Pay Commission vs 7th pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. 8வது ஊதியக்குழு என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் சம்பள உயர்வு மட்டும்தான். ஆனால், இதை தவிர இன்னும் பல முக்கிய அம்சங்களும் இதில் உள்ளன. அவற்றில் ஓய்வூதிய உயர்வு, அலவன்சுகள், சம்பள கட்டமைப்பில் மாற்றம் ஆகியவையும் அடங்கும். 

Add Zee News as a Preferred Source

Central Government Pensioners: கவலையில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்

மத்திய அரசின் சில நடவடிக்கைகள் ஓய்வூதியதாரர்களுக்கு கவலையான செய்திகளை அளித்து வருகின்றன. முந்தைய 7வது மத்திய ஊதியக் குழுவிற்கு பிறகு, 8வது ஊதியக்குழு மதிப்பாய்வில் ஓய்வூதியதாரர்கள் வலுவான பங்களிப்பைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. இருப்பினும், இப்போது சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஆணையத்தின் நோக்கத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது பல கேள்விகளை எழுப்புகிறது. முழுமையான தகவலை இங்கே புரிந்துகொள்ளலாம்

7th vs 8th Pay Commission: 7வது Vs 8வது ஊதியக்குழு, ஓய்வூதியதாரர்களின் நிலை என்ன?

7வது ஊதியக்குழுவின் அறிவிப்பில் "ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியங்கள் மற்றும் பிற ஓய்வூதிய சலுகைகளின் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், 8வது ஆணையத்தின் பரிந்துரை விதிமுறைகளில் (ToR) இந்தப் பிரிவு இல்லை. 69 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அறிவிப்பு கட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்று ஊழியர் சங்கக் குழு கூறுகிறது.

Terms of Reference: பரிந்துரை விதிமுறைகள்

8வது ஆணையத்தின் அறிவிப்பில் சம்பளம், கொடுப்பனவுகள், பணிக்கொடை மற்றும் NPS போன்ற சலுகைகள் பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஓய்வூதிய திருத்தம் பழைய ஓய்வூதியதாரர்கள் மீது கவனம் செலுத்துமா என்பது தெளிவாக இல்லை. மற்றொரு விஷயம் என்னவென்றால், 7வது ஆணையத்தில் நியமிக்கப்பட்ட, ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்களும் சேர்க்கப்பட்டனர். இந்த வகை 8வது ஆணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது தெளிவாக இல்லை.

Pensioners: ஓய்வூதியதாரர்களின் கவலை என்ன?

ஓய்வூதியதாரர்களின் மதிப்பாய்வு அறிவிப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால், ​​சம்பள உயர்வின் பலன்களை அவர்கள் பெற முடியாமல் போகமால் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. உதாரணமாக, ஓய்வூதிய அமைப்பு செயலில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே மாற்றப்பட்டு, ஓய்வு பெற்றவர்கள் சேர்க்கப்படாவிட்டால், அது அவர்களுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதியாக இருக்கும்.

Central Government: நிதி அம்சங்கள் மற்றும் அரசாங்க சவால்கள்

7வது ஊதியக் குழு செயல்படுத்தப்பட்ட பிறகு, முதல் ஆண்டில் தோராயமாக ₹1 லட்சம் கோடி செலவிடப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறை, 8வது சம்பள ஆணையம் நிதி ஸ்திரத்தன்மை தொடர்பான சவால்களை எதிர்கொள்கிறது. தற்போதைய சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய சீர்திருத்தம் அரசாங்கத்தின் செலவின கட்டமைப்பை எவ்வளவு பாதிக்கும்? இது அதிகமாகத்தான் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆகையால், இந்த காரனிகள் மோடி அரசாங்கத்தை ஃபிட்மெண்ட் ஃபாக்டர், அலவன்சுகள் மற்றும் ஓய்வூதிய சீர்திருத்தம் போன்ற நடவடிக்கைகளை கவனமாக பரிசீலிக்க கட்டாயப்படுத்தும்.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு என்னென்ன மாற்றங்கள் நிகழக்கூடும்?

8வது ஊதியக் குழு அமலாக்கத்திற்கு பிறகு ஏற்படக்கூய்டிய சாத்தியமான மாற்றங்கள் பின்வருமாறு:

Basic Salary Hike: புதிய அடிப்படை ஊதியம் + அதிகரித்த ஃபிட்மெண்ட் ஃபாக்டர்

Dearness Allowance: டிஏ மறுசீரமைப்பு

HRA: ஹெச்ஆர்ஏ மற்றும் டிஏ போன்ற கொடுப்பனவுகளை மறுசீரமைத்தல்

Pension Hike: ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வு

Pensioners: ஓய்வூதியதாரர்களை உள்ளடக்கிய புதிய விதிகள்

இருப்பினும், ஓய்வூதியதாரர்கள் அறிவிப்பில் வெளிப்படையாக சேர்க்கப்படவில்லை என்றால், இந்த மாற்றங்களும் அவற்றால் கிடைக்கும் நன்மைகளும் செயலில் உள்ள, அதாவது தற்போது பணியில் உள ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு...

- 8வது ஊதியக்குழுவின் அறிவிப்பு மற்றும் ToR ஐ விரிவாகப் படியுங்கள்.

- ஒரு ஊழியர் சங்கம்/ஓய்வூதியதாரர் அமைப்பில் சேர்ந்து உங்கள் கோரிக்கைகளை பதிவு செய்யுங்கள்.

- உங்கள் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகளின் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்.

- ஊடகங்கள் மற்றும் சமூக தளங்களை அவ்வப்போது பார்த்து சமீபத்திய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.

8வது ஊதியக்குழு அப்டேட் சுருக்கமாக...

- இந்தியாவின் பொது ஊதியம் மற்றும் ஓய்வூதிய கட்டமைப்பை ஒரு புதிய நிலைக்கு உயர்த்த 8வது ஊதியக் குழு ஒரு தளமாக இருக்கக்குடும். 

- இருப்பினும், இதில் ஓய்வூதியதாரர்களுக்கான நன்மைகள் பற்றிய தெளிவு இன்னும் கிடைக்கவில்லை.

- ஆகையால், ஆணையம் தற்போது பனியில் உள்ள ஊழியர்களுக்கு மட்டும் மாற்றங்களை கொண்டு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

- முந்தைய 7வது ஊதியக் குழுவின் அனுபவம், "ஓய்வூதியதாரர்களைச் சேர்ப்பது" என்பது நீதியின் விஷயம் மட்டுமல்ல, நம்பிக்கையின் விஷயமும் என்பதைக் காட்டுகிறது. 

- இது குறித்த மத்திய அரசின் அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள்.

(பொறுப்பு துறப்பு:  இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.)

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு ToR: 8 முக்கிய மாற்றங்களை கோரும் அரசு ஊழியர்கள், பிரதமருக்கு பறந்த கடிதம்

மேலும் படிக்க் | 8வது ஊதியக்குழு: அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 5 ஜாக்பாட் அறிவிப்புகள், லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News