8வது ஊதியக்குழு டைம்லைன், சம்பள உயர்வு, ஓய்வூதியதாரர்கள்: நாடாளுமன்றத்தில் முக்கிய அப்டேட்ஸ்

8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல். நாடாளுமன்றத்தில் அமைச்சர் சொன்னது என்ன? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 12, 2025, 08:34 AM IST
  • சம்பள உயர்வுக்கான எதிர்பார்ப்புகள் என்ன?
  • மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மீதான தாக்கம் என்ன?
  • அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா?
8வது ஊதியக்குழு டைம்லைன், சம்பள உயர்வு, ஓய்வூதியதாரர்கள்: நாடாளுமன்றத்தில் முக்கிய அப்டேட்ஸ்

8th Pay Commission Update: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்துவதற்காக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக 8வது ஊதியக் குழுவை அமைத்துள்ளது. 7வது ஊதியக் குழுவின் 10 ஆண்டுகாலம் டிசம்பருடன் முடிவடையும் நிலையில், 8வது ஊதியக் குழுவை அமல்படுத்தும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

Add Zee News as a Preferred Source

Terms of Reference: பரிந்துரை விதிமுறைகள்

மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, மக்களவையில் பேசுகையில், இந்தக் குழுவின் பணிக்கான பரிந்துரை விதிமுறைகள் (ToR) அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 8வது ஊதியக் குழு, அமைக்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை உருவாக்கி, சம்பள திருத்தங்களுக்கான வழிமுறைகளையும் நடைமுறைகளையும் முன்மொழியும்.

DA Merger: அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா?

தற்போதுள்ள அகவிலைப்படி (DA) அல்லது அகவிலை நிவாரணத்தை (DR) அடிப்படை ஊதியம் அல்லது ஓய்வூதியத்துடன் இணைப்பதற்கு தற்போது எந்த முன்மொழிவும் இல்லை என்று சௌத்ரி கூறியுள்ளார். தற்போது, ​​அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் இரண்டும் 58 சதவீதமாக உள்ளது. தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI-IW) அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இது திருத்தப்படுகிறது. இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு இப்போது அகவிலைப்படிய அடிப்படை ஊதியத்துடன் இணைக்குமா என்ற கேள்விக்கு, அப்படி ஒரு எண்ணம் இல்லை என பதில் அளிக்கப்பட்டது.

Fitment Factor: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்னும் முக்கிய காரணி

முந்தைய ஊதியக் குழுக்களைப் போலவே, 8வது ஊதியக் குழுவும் ஒரு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதிச் சேவை நிறுவனமான ஆம்பிட் கேபிடல், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.83 முதல் 2.46 வரை இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது. 

Salary Hike: சம்பள உயர்வுக்கான எதிர்பார்ப்புகள்

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.83 முதல் 2.46 -க்குள் நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000-லிருந்து ரூ.32,940 முதல் ரூ.44,280 வரை உயரக்கூடும். உண்மையான சம்பள உயர்வு 14 சதவீதம் முதல் அதிகபட்சம் 54 சதவீதம் வரை இருக்கலாம், இருப்பினும் நிதி நெருக்கடிகள் காரணமாக இந்த அதிகபட்ச உயர்வு சாத்தியமில்லை என்றும் சிலர் கருதுகிறார்கள்.

Central Government Employees, Pensioners: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மீதான தாக்கம்

இந்த பரிந்துரைகளின் தாக்கம் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மீது இருக்கும். 8வது ஊதியக் குழு அடிப்படை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் படிகளைத் திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது லட்சக்கணக்கானோருக்கு நேரடியாகப் பயனளிக்கும். அதே நேரத்தில் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்கான சரிசெய்தல்கள் முறையாகக் கருத்தில் கொள்ளப்படுவதையும் இது உறுதி செய்யும்.

8th CPC Timeline: காலக்கெடு குறித்த குழப்பம்

8வது ஊதியக் குழு ஜனவரி 2025-ல் அறிவிக்கப்பட்டது. நவம்பரில் நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. பரிந்துரை விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டன. குழு உறுப்பினர்களின் நியமனங்கள் மற்றும் பணிக்கான விதிமுறைகளைத் தெளிவுபடுத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக, ஜனவரி 1, 2026 அன்று இதை அமல்படுத்துவது நிச்சயமற்றதாக உள்ளது. ஓய்வூதியதாரர்கள் முழுமையாக சேர்க்கப்படாமல் போகலாம் என்று ஊழியர் சங்கங்கள் கவலை தெரிவித்த நிலையில், ஓய்வூதியதாரர்களும் முழுமையாக அனைத்து நன்மைகளிலும் சேர்க்கப்படுவார்கள் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 18 மாதங்களுக்குள் குழு தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்த பிறகு இறுதி சம்பள திருத்தங்கள் முடிவு செய்யப்படும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி? குறிப்பு காட்டிய அமைச்சர்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு அரியர் தொகை ஜனவரி 2026 முதல் கிடைக்குமா? நாடாளுமன்றத்தில் முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News