8th Pay Commission: 8வது ஊதியக் குழுவின் உருவாக்கம் குறித்து அரசாங்கம் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இதன் பிறகு, அரசு ஊழியர்களின் சம்பளத்தில் எவ்வளவு மாற்றம் ஏற்படும் என்பது குறித்து விவாதங்கள் தொடங்கியுள்ளன. இந்த ஊதிய ஏற்றத்தில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஒரு முக்கிய காரணியாக இருக்கும். தேசிய கவுன்சில்-கூட்டு ஆலோசனை அமைப்பு (JCM-NC) ஃபிட்மெண்ட் ஃபாக்டரை குறைந்தபட்சம் 2.57 அல்லது அதற்கு மேல் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
National Council-Joint Consultative Machinery
7வது ஊதியக்குழுவின் கீழ், 2.57 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டர் செயல்படுத்தப்பட்டது. JCM-NC செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா, 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறைந்தது 2.57 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்கள்
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்பது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் ஒரு கணக்கீட்டு முறையாகும். 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டால், அரசு ஊழியர்களின் சம்பளம் சுமார் 157% அதிகரிக்கும். அதாவது, தற்போதைய குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18,000, ரூ.46,260 ஆக அதிகரிக்கும்.
Pensioners: ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்?
அதேபோல், ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.9,000 -இலிருந்து ரூ.23,130 ஆக அதிகரிக்கும்.
7th Pay Commission: 7வது ஊதியக்குழுவில் 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டர் செயல்படுத்தப்பட்டது
முன்னதாக, 7வது சம்பளக் குழுவின் கீழ், 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டர் (Fitment Factor) செயல்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில், குறைந்தபட்ச சம்பளம் மாதத்திற்கு ரூ.7,000 லிருந்து ரூ.18,000 ஆக அதிகரித்தது. எட்டாவது ஊதியக் குழுவின் கீழ் 2.86 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரை செயல்படுத்த வேண்டும் என்று சில ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால் முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் கார்க், இது 'வானத்திலிருந்து நட்சத்திரங்களைக் கேட்பது' போன்றது என்று கூறியிருந்தார். அதாவது இது சாத்தியமில்லாத கோரிக்கை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். 1.92 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டர் நடைமுறைக்கு ஏற்றாதாக இருக்கலாம் என்று அவர் கூறினார். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆனால், குறைந்தபட்ச சம்பளம் 92% அதிகரித்து, ரூ.18,000 லிருந்து ரூ.34,560 ஆக உயரும்.
Salary HiKe: ஃபிட்மென்ட் ஃபாக்டர் மூலம் அதிக ஊதிய உயர்வுக்கான கோரிக்கை
8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் என்று ஷிவ் கோபால் மிஸ்ரா கூறியுள்ளார். ஏனெனில் பழைய தரநிலைகள் இனி பொருந்தாது என அவர் தெரிவித்துள்ளார். 1957 ஆம் ஆண்டின் 15வது இந்திய தொழிலாளர் மாநாட்டின் (ILC) கொள்கைகளையும், டாக்டர் அய்கிராய்டின் குறைந்தபட்ச வாழ்க்கை ஊதிய சூத்திரத்தையும் 7வது சம்பளக் குழு ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார். ஆனால் இப்போது இந்த தரநிலைகள் முற்றிலும் மாறிவிட்டன. டாக்டர் அய்கிராய்டின் சூத்திரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மட்டுமே சேர்க்கப்பட்டன. ஆனால் இன்றைய டிஜிட்டல் மற்றும் இணையம், மொபைல், காப்பீடு, முதலீடு போன்ற செலவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மூன்று பேர் என்ற தேவையை ஐந்து பேராக உயர்த்த கோரிக்கை
7வது சம்பளக் குழுவின் கீழ், மூன்று பேர் கொண்ட குடும்பத்தின் நுகர்வோர் தேவைகள் நிர்ணயிக்கப்பட்டன. ஆனால் 8வது ஊதியக் குழுவில், பெற்றோர்கள் மற்றும் சார்புடைய உறுப்பினர்களை அதில் சேர்க்கும் வகையில், அதை ஐந்து பேராக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதன் காரணமாக சாதாரண மக்களின் தேவைகளும் அதிகரித்துள்ளன. கல்வி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கான செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. 'பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம், 2022' இன் கீழ் குடும்பத்தின் பொறுப்புகள் அதிகரித்துள்ளன.
8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் எப்போது அமல்படுத்தப்படும்?
7வது சம்பளக் குழுவின் காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகிறது. ஆகையால், புதிய ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகின்றது. இருப்பினும், 8வது ஊதியக்குழு அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாலும், குழுவே இன்னும் அமைக்கப்படாததாலும், இதன் அமலாக்கத்திலும் தாமதம் ஏற்படக்கூடும் என்றும், அதை செயல்படுத்த அதிக நேரம் ஆகலாம் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். ஜனவரி 16, 2025 அன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 8வது ஊதியக் குழுவிற்கு ஒப்புதல் அளித்தது. தற்போதைய நிலவரப்படி, அதன் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பிற நிபந்தனைகள் குறித்து எந்த அறிவிப்பும் இன்னும் வெளியிடப்படவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
8வது ஊதியக்குழு: 157% ஊதிய உயர்வு, பம்பர், NC-JCM மூலம் கசிந்த தகவல்... ஊழியர்களுக்கு ஜாக்பாட்!!









