)
8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கான நீண்ட நாள் காத்திருப்பு முடிந்துவிட்டது. 8வது ஊதியக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பு விதிமுறைகள் அங்கீகரிக்கப்பட்டுவிட்டன. இனி முழு வேகத்துடன் அடுத்த கட்ட பணிகள் நடக்கும்.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள், அடுத்த கட்டமாக ஃபிட்மெண்ட் ஃபாக்டரை நிர்ணயிப்பார்கள். புதிய சம்பளத்திற்கான ஃபிட்மெண்ட் ஃபாக்டர் முன்மொழியப்படும். 8வது ஊதியக்குழு பற்றிய ஊகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்னவாக இருக்கும்? அகவிலைப்படி இணைக்கப்படுமா? பிற கொடுப்பனவுகளைச் சேர்த்த பிறகு சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? மிக முக்கியமாக, பதவி உயர்வுகள் மற்றும் சம்பள தர நிலைகள் குறித்து ஏதேனும் முக்கிய முடிவுகள் இருக்குமா? இப்படி பல கேள்விகள் ஊழியர்களுக்கு உள்ளன.
இந்த முறை சம்பளம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காணும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எதுவாக இருந்தாலும், ஊழியர்களின் சம்பளம் குறிப்பிடத்தக்க உயர்வைக் காண வாய்ப்புள்ளது. இதை பற்றி இன்னும் விரிவாக இந்த பதிவில் புரிந்துகொள்ளலாம்.
8வது ஊதியக்குழு குறித்து இதுவரை கணிக்கப்பட மதிப்பீடுகளில், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பற்றி அதிகம் பேசப்பட்டுள்ளது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 -க்குள் இருக்கலாம் என கூறப்படுகின்றது. எனினும், ஊழியர் சங்கங்கள் 3.68 ஃபிட்மென்ட் ஃபாக்டரைக் கோரி வருகின்றன. எனினும், தற்போதைய பொருளாதார நிலை மற்றும் அரசின் மீதுள்ள நிதிச்சுமை ஆஅகியவற்றை கருத்தில்கொண்டு பார்த்தால், இது 1.92 ஆக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இதுவும் தற்போதைய சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், அடிப்படை ஊதியம் தற்போதுள்ள ரூ.18,000 -இலிருந்து ரூ.34,560 ஆக அதிகரிக்கும். எனினும், இது இறுதியான அடிப்படை சம்பளமாக இருக்காது. இதிலும் மாற்றம் வரும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான தற்போதைய அகவிலைப்படி ஜூலை 2025 முதல் 58 சதவீதமாக உள்ளது. இது ஜனவரி 2026 இல் மீண்டும் திருத்தப்படும். தற்போதைய AICPI குறியீட்டு போக்கின் அடிப்படையில், இது 61 சதவீதத்தை எட்டக்கூடும். இந்தப் போக்கு தொடர்ந்தால், ஜனவரி 2026 முதல் அமலுக்கு வரும் அகவிலைப்படி 61 சதவீதமாக இருக்கும். அதாவது மீண்டும் 3 சதவீத அதிகரிப்பு இருக்கும்.
இருப்பினும், 8வது ஊதியக் குழுவை அறிவிக்கும் போது, அது ஜனவரி 1, 2026 முதல் அமல்படுத்தப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. அப்போது அகவிலைப்படி 61 சதவீதமாக இருக்கும். மேலும் புதிய ஊதியக் குழு செயல்படுத்தப்படுவதால், அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். அதாவது ரூ.18,000 அடிப்படை சம்பளம் ரூ.28,980 ஆக திருத்தப்படும்.
- புதிய ஊதியக் குழுவில் அகவிலைப்படி பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும், மேலும் தற்போதுள்ள அகவிலைப்படி அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கப்படும்.
- பின்னர் இது ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கப்படும். இதன் விளைவாக ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
- 8வது ஊதியக் குழு செயல்படுத்தப்படும் போது, தற்போதைய அடிப்படை சம்பளம், அகவிலைப்படி மற்றும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஆகியவற்றை இணைத்து புதிய அடிப்படை சம்பளம் தீர்மானிக்கப்படும்.
- இதன் பொருள்
புதிய அடிப்படை ஊதியம் = (18,000 + 10,980) x ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (1.92)
= 28,980 x ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (1.92)
= ரூ.55,641.
அதாவது லெவல் 1, கிரேடு பே 1800 இல் உள்ள ஊழியர்களுக்கான புதிய அடிப்படை சம்பளம் ரூ.55,641 ஆக அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
இருப்பினும், அகவிலைப்படியை இணைப்பதற்கான முடிவு, அமைச்சரவை ஒப்புதலுக்கு உட்பட்டு, ஊதியக் குழுவிடம் உள்ளது. அரசாங்கம், சம்பளத்தை இணைப்பதற்குப் பதிலாக, ஊழியர்களுக்கு 61% அகவிலைப்படியை வழங்கினால், அடிப்படை சம்பளம் அப்படியே இருக்கும். அந்த சந்தர்ப்பத்தில் புதிய அடிப்படை சம்பளம் ₹34,560 ஆக இருக்கும்.
புதிய ஊதியக் குழு அறிமுகப்படுத்தப்படும் போதெல்லாம், ஆலவன்சுகளும் திருத்தப்படும். அகவிலைப்படி பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டால், HRA விகிதங்களும் திருத்தப்படும். பயணக் கொடுப்பனவும் (TA) திருத்தப்படலாம். இருப்பினும், இது ஊதியக் குழுவின் பரிந்துரைகளைப் பொறுத்தது.
ஒரு ஊழியர் தற்போது நிலை 1 பதவியில் இருந்தாலும், நகர வகை X இல் பணியமர்த்தப்படுகிறார் என்று நாம் கருதினால், அவர்களின் HRA தற்போதைய விகிதத்தில் 27% ஆக இருக்கும் (இது திருத்தத்திற்குப் பிறகு மாறுபடலாம்). பயணப்படி அதிக TPTA நகரத்தைப் பொறுத்து இருக்கும். இருப்பினும், இது மாறாமல் இருந்தாலும், 27% இல் மொத்த HRA ₹9,331 ஆகவும், TA ₹1,350 ஆகவும் இருக்கும்.
8வது சம்பளக் குழுவின் கீழ் மொத்த சம்பளம், அதாவது நிகர சம்பளம், அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை செர்த்து மதிப்பிடப்படுகிறது. இருப்பினும், இப்போது அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்ப்பது அத்தனை பொருத்தமானதாக இருக்காது. இதற்கு ஊதியக் குழுவின் பரிந்துரைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகையால், இந்த பதிவில் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தும், இணைக்காமலும் மதிப்பீடுகளை அளித்துள்ளோம்.
அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டால்,
லெவல் 1, கிரேடு பே 1800 இல் (தற்போது ரூ.18,000 அடிப்படை சம்பளம்) உள்ள ஊழியர்களுக்கான புதிய அடிப்படை சம்பளம் ரூ.55,641 ஆக அதிகரிக்கும்
அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படாவிட்டால்,
லெவல் 1, கிரேடு பே 1800 இல் (தற்போது ரூ.18,000 அடிப்படை சம்பளம்) உள்ள ஊழியர்களுக்கான புதிய அடிப்படை சம்பளம் ரூ.34,560 ஆக அதிகரிக்கும்.
8வது ஊதியக்குழு சம்பள உயர்வு சுருக்கமாக.....
- 8வது ஊதியக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான அறிவிப்பு நேற்று வந்தது.
- குறிப்பு விதிமுறைகள் அங்கீகரிக்கப்பட்டுவிட்டன.
- வரும் நாட்களில் குழு தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும்.
- அனைத்து முக்கிய அம்சங்களிலும் மாற்றம் இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ