8வது ஊதியக்குழு: UPS அடிப்படையில் அதிரடி ஓய்வூதிய உயர்வு, கணக்கீடு இதோ

8th Pay Commission: 8வது ஊதியக் குழுவின் கீழ், எதிர்பார்க்கப்படும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.5 முதல் 2.86 -க்குள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2025, 03:34 PM IST
  • 8வது ஊதியக் குழு எப்போது செயல்படுத்தப்படும்?
  • 8வது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்ன?
  • ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
8வது ஊதியக்குழு: UPS அடிப்படையில் அதிரடி ஓய்வூதிய உயர்வு, கணக்கீடு இதோ

8th Pay Commission: சமீபத்தில் மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியை அளித்தது. 8வது ஊதியக்குழுவை அமைப்பதற்கான அறிவிப்பை அரசு ஜனவரி மாதம் வெளியிட்டது. மார்ச் மாதம் இந்த குழு அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Add Zee News as a Preferred Source

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய திருத்தம்

8வது ஊதியக்குழு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை திருத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்திய அரசின் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது. இது  ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த முயற்சி, நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளை ஈடு செய்யவும் ஓய்வூதியதாரர்களுன் நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும் முயல்கிறது. 

ஊதியக்குழுவின் பரிந்துரைகளில் சம்பள கட்டமைப்புகள், ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் பொருளாதார நிலைகளை றப்பாக பிரதிபலிக்கும் பல்வேறு கொடுப்பனவுகளில் மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.

Unified Pension Scheme: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

ஏப்ரல் 1, 2025 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அமலுக்கு வரும். இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் மிகவும் நெறிப்படுத்தப்பட்ட மற்றும் நன்மை பயக்கும் ஓய்வூதிய முறையை எதிர்பார்க்கலாம். UPS, OPS எனப்படும் பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) மற்றும் NPS எனப்படும் தேசிய ஓய்வூதிய முறை (National Pension System) இரண்டின் நன்மைகளையும் ஒன்றிணைத்து, அதிகரித்த சலுகைகள் மற்றும் நிதி பாதுகாப்பை உறுதியளிக்கிறது. 8வது ஊதியக்குழுவின் கீழ், UPS -இன் நன்மைகள் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

8வது ஊதியக் குழு எப்போது செயல்படுத்தப்படும்?

8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது. அரசாங்கம் விரைவில் இந்த குழுவை உருவாக்கி அதற்கான பரிந்துரைகளை இறுதி செய்யும். திருத்தப்பட்ட ஓய்வூதிய கட்டமைப்புகள் இந்தியாவின் நிதிக் கொள்கைகளுடன் ஒத்துப்போவதோடு, ஓய்வூதியதாரர்களின் நிதித் தேவைகளையும் பூர்த்தி செய்வதை இது உறுதி செய்யும்.

Fitment Factor: 8வது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்ன?

திருத்தப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை நிர்ணயிப்பதில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. 8வது ஊதியக் குழுவின் கீழ், எதிர்பார்க்கப்படும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.5 முதல் 2.86 -க்குள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Pension Calculation: ஓய்வூதியக் கணக்கீடுகளில் வெவ்வேறு ஃபிட்மென்ட் ஃபாக்டரால் ஏற்படக்கூடும் தாக்கம் என்ன?

தற்போதைய அடிப்படை ஓய்வூதியம்: ரூ.9,000
ஃபிட்மென்ட் ஃபாக்டர்: 2.5
திருத்தப்பட்ட ஓய்வூதியம்: ரூ.22,500

தற்போதைய அடிப்படை ஓய்வூதியம்: ரூ.9,000
ஃபிட்மென்ட் ஃபாக்டர்: 2.86
திருத்தப்பட்ட ஓய்வூதியம்: ரூ.25,740

தற்போதைய அடிப்படை ஓய்வூதியம்: ரூ.30,000
ஃபிட்மென்ட் ஃபாக்டர்: 2.5
திருத்தப்பட்ட ஓய்வூதியம்: ரூ.75,000

தற்போதைய அடிப்படை ஓய்வூதியம்: ரூ.30,000
ஃபிட்மென்ட் ஃபாக்டர்: 2.86
திருத்தப்பட்ட ஓய்வூதியம்: ரூ.85,800

Pension Hike: ஓய்வூதிய உயர்வு

ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகமாக இருந்தால், ஓய்வூதியத்தில் அதிகரிப்பும் அதிகமாகும். அரசாங்கம் 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டரை ஏற்றுக்கொண்டால், ஓய்வு பெற்றவர்கள் தங்கள் மாத வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) என்றால் என்ன?

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) தற்போதுள்ள ஓய்வூதிய முறைகளின் பலன்களை ஒருங்கிணைத்து ஓய்வு பெற்றவர்களுக்கு விரிவான நிதிப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இது ஏப்ரல் 1, 2025 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

UPS இன் முக்கிய அம்சங்கள் என்ன?

- Minimum Pension: குறைந்தது 10 ஆண்டுகள் சேவை செய்த ஊழியர்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10,000 கிடைக்கும்.

- Family Pension: ஓய்வுதியதாரர் இறந்தால்,  குடும்ப ஓய்வூதியமாக குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தில் 60% பெறுவார்கள்.

- Flexibility: வெவ்வேறு ஓய்வூதிய சலுகைகளுக்கு இடையே தேர்ந்தெடுக்கும் வசதி கிடைக்கும்.

- Financial Security: ஓய்வுக்குப் பிறகு நிலையான மற்றும் நம்பகமான வருமானத்தை உறுதி செய்கிறது இது உறுதி செய்கிறது.

மேலும் படிக்க | பல்வேறு இபிஎஃப் கணக்குகளை மர்ஜ் செய்வது எப்படி? தனியார் துறை ஊழியர்களுக்கு முக்கிய தகவல்

மேலும் படிக்க | பரஸ்பர நிதியம் SIP vs STP... பங்குச் சந்தை சரிவின் போது கை கொடுக்கும் திட்டம் எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News