8வது ஊதியக்குழு: குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்.... அதிரடி ஊதிய, ஓய்வூதிய உயர்வின் முழு கணக்கீடு

8th Pay Commission: ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியத்தை ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எவ்வாறு மாற்றுகிறது என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம். ஒரு ஓய்வூதியதாரர் அடிப்படை ஓய்வூதியமாக ரூ.30,000 பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். 1.92, 2.08, 2.28, 2.57 மற்றும் 2.86 ஆக ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்பட்டால், தித்தப்பட்ட ஓய்வூதியம் என்னவாக இருக்கும் என காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 14, 2025, 07:17 PM IST
  • 8வது ஊதியக் குழு எப்பொது அமலுக்கு வரும்?
  • காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள்
  • ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன?
8வது ஊதியக்குழு: குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்.... அதிரடி ஊதிய, ஓய்வூதிய உயர்வின் முழு கணக்கீடு

8th Pay Commission Latest Update: மத்திய அரசு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்த தருணம் முதல் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதிய குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக காத்திருக்கிறார்கள்.

Add Zee News as a Preferred Source

Central Government Employees: காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள்

எனினும் அரசாங்கம் இன்னும் குழுவிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனத்தையே செய்து முடிக்கவில்லை. குழு அமைக்கப்பட்ட உடன் அது தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும். இதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட பல தரப்பினரிடம் குழு ஆலோசனைகளை நடத்தும். 

குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அரசாங்கம் அதை பரிசீலனை செய்யும். அதன் பிறகு 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அரசாங்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வ அமலாக்கப்படும்.

7th Pay Commission: 7வது ஊதியக்குழு

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக் குழு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில் எட்டாவது ஊதிய குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வரவேண்டும். எனினும் இதற்கான ஆயத்த கட்ட பணிகள் இன்னும் முழு முனைப்புடன் தொடங்காத காரணத்தால் 8வது ஊதிய குழுவின் அமலாக்கத்தில் தாமதம் ஏற்படலாம் என கருதப்படுகின்றது. 

Arrears: அரியர் தொகை

2027 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இது அமலுக்கு வரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். 8வது ஊதியக்குழு எப்பொழுது அமலுக்கு வந்தாலும் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வுக்கான நன்மைகளின் அரியர் தொகை ஜனவரி ஆறு முதல் கிடைக்கும்.

Fitment Factor: ஃபிட்மெண்ட் ஃபேக்டர்

ஊழியர்களின் முக்கிய பிரதிநிதித்துவ அமைப்பு அனைத்து லெவல்களில் உள்ள ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஊழியர்களின் புதிய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை தீர்மானிப்பதில் பிட்மண்ட் ஃபேக்டருக்கு முக்கிய பங்கு இருக்கும். 8வது ஊதியக் குழு 1.92 முதல் 2.86 க்கு இடையில் ஒரு ஃபிட்மென்ட் ஃபாக்டரை நிர்ணயிக்கும் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன?

ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது புதிய ஊதியக் குழு செயல்படுத்தப்படும் போதெல்லாம் மத்திய அரசு ஊழியர்களின் திருத்தப்பட்ட அடிப்படை சம்பளத்தைக் கணக்கிட பயன்படுத்தப்படும் ஒரு சூத்திரமாகும். பழைய கட்டமைப்பிலிருந்து புதிய கட்டமைப்பிற்கு மாறும்போது சம்பள உயர்வை தரப்படுத்த இது உதவுகிறது.

Salary Hike: ஊதிய உயர்வு கணக்கீடு

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 என வைத்துக்கொள்வோம். பல்வேறு ஃபிட்மெண்ட் ஃபாக்டர்களில் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும் என இங்கே காணலாம்.

1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.34,560
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.37,440
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.41,040
2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.46,260
2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.51,480

Pension Hike: ஓய்வூதிய உயர்வு

ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியத்தை ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எவ்வாறு மாற்றுகிறது என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம். ஒரு ஓய்வூதியதாரர் அடிப்படை ஓய்வூதியமாக ரூ.30,000 பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். 1.92, 2.08, 2.28, 2.57 மற்றும் 2.86 ஆக ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்பட்டால், தித்தப்பட்ட ஓய்வூதியம் என்னவாக இருக்கும் என காணலாம்.

1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.57,600
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.62,400
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.68,400
2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.77,100
2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.85,800

(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.)

மேலும் படிக்க | PM Kisan 20வது தவணை இந்த மாதம் இந்த தேதியில் வருகிறது: சிக்கல் இல்லாமல் பெற உதவும் குறிப்புகள் இதோ

மேலும் படிக்க | Gratuity கணக்கீடு: 12.7 ஆண்டு சர்வீஸ், ரூ.49,000 - ரூ.89,000 ஊதியம்.... பணிக்கொடை எவ்வளவு கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News