8வது ஊதியக்குழு: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா, அப்படியே தொடருமா? முக்கிய தகவல்

8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவில் அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா? இதற்கான செயல்முறை என்ன? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 12, 2025, 02:34 PM IST
  • அகவிலைப்படி எப்போது 'பூஜ்ஜியம்' ஆகும்?
  • பரிந்துரைகளில் மாற்றம் வருமா?
  • 8வது ஊதியக் குழு மீதான பிற எதிர்பார்ப்புகள் என்ன?
8வது ஊதியக்குழு: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா, அப்படியே தொடருமா? முக்கிய தகவல்

8th Pay Commission Dearness Allowance: மத்திய அரசு ஊழியர்களுக்கான சில முக்கிய செய்திகளை பற்றி இந்த பதிவில் காணலாம். வரும் மாதங்களில் 8வது ஊதியக்குழு தொடர்பான சில முக்கிய செய்திகள் கிடைக்கவுள்ளன. 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன் பல முக்கிய ஊதிய கட்டமைப்புகளில் மாற்றங்கள் ஏற்படும். அவற்றில் முக்கியமானது அகவிலைப்படி. 

Add Zee News as a Preferred Source

Dearness Allowance: அகவிலைப்படியில் முக்கிய மாற்றங்கள்

8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டவுடன் அகவிலைப்படியில் என்ன மாற்றம் ஏற்படும்? இது பலருக்கு உள்ள கேள்வியாய உள்ளது. அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? மொத்தமாக இணைக்கப்படுமா, அல்லது ஒரு பகுதி மட்டும் இணைக்கப்படுமா? அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா? அதன் பிறகு கணக்கீடு எப்படி, எதன் அடிப்படையில் தொடங்கும்? இப்படி அகவிலைப்படி தொடர்பான பல கேள்விகள் உள்ளன.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி

ஜனவரி 1, 2026 முதல் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்படும். இதன் உண்மையான அமலாக்கத்தில் தாமதம் ஏற்பட்டாலும், ஜனவரி 2026 முதல் அதன் நன்மகளின் அரியர் தொகை கிடைக்கும். அகவிலைப்படியில் என்ன மாற்றம் இருக்கும்? பணவீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும் அகவிலைப்படி ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு முக்கிய அங்கமாகும்.

தற்போது அகவிலைப்படி எவ்வளவு கிடைக்கிறது?

இன்றைய நிலவரப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜூலை 1, 2025 முதல் 58% ஆக உள்ளது. இருப்பினும், தற்போதைய போக்குகளின் அடிப்படையில், ஜனவரி 2026க்குள் இது குறைந்தபட்சம் 2% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதாவது ஜனவரி 1, 2026க்குள், அகவிலைப்படி 60% ஆக உயரக்கூடும். அப்படி உயர்ந்தால், 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்படும்போது இந்த 60% அகவிலைப்படி பூஜ்ஜியமாகுமா?

விதி சொல்வது என்ன?

முந்தைய சம்பள கமிஷன்களின் வரலாற்றைப் பார்க்கும்போது, ​​புதிய சம்பள கமிஷன் செயல்படுத்தப்படும் போதெல்லாம், அகவிலைப்படி பூஜ்ஜியமாகக் குறைக்கப்படுவது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. அதாவது, அனைத்து அகவிலைப்படி கணக்கீடுகளும் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுகின்றன. அதன் பிறகு அகவிலைப்படி கணக்கீடுகள் புதிதாகத் தொடங்குகின்றன. ஜனவரி 1, 2026 முதல் 8வது ஊதியக்குழு செயல்படுத்தப்படும்போது, ​​ஊழியர்களின் 60% அகவிலைப்படி பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும் என்று ஊழியர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த முறை, இதில் ஒரு மாற்றம் ஏற்படலாம்.

பரிந்துரைகளில் மாற்றம் வருமா?

ஜனவரி 1, 2026 அன்று 8வது சம்பள கமிஷன் செயல்படுத்தப்பட முன்மொழியப்பட்டாலும், அந்த நாளில் அகவிலைப்படி பூஜ்ஜியமாக மாறும் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 8வது சம்பள கமிஷன் எவ்வாறு செயல்படும், அதன் பரிந்துரைகள் என்னவாக இருக்கும், மற்றும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்னவாக இருக்கும் என்பதை இறுதி செய்ய கணிசமான நேரம் எடுக்கும். 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் மே அல்லது ஜூன் 2027க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டிற்கு பிறகு அவை செயல்படுத்தப்படுவதற்கு இன்னும் அதிக நேரம் எடுக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பரிந்துரைகள் வெளியிடப்பட்டு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படும் வரை, அகவிலைப்படி கணக்கீடுகள் தற்போதுள்ள வகையில் தொடரும்.

2027 -க்குள் அகவிலைப்படி 70% -ஐ எட்டும் என நம்பிக்கை

8வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் 2027 நடுப்பகுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், தற்போதைய அகவிலைப்படி கணக்கீடு அதுவரை தொடரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அகவிலைப்படி 60% ஐ எட்டிய பிறகும், அது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து அதிகரிக்கும். தற்போதைய போக்கைக் கருத்தில் கொண்டு பார்த்தால், மே-ஜூன் 2027 -க்குள் அகவிலைப்படி 70% ஐ எட்டும்.

அகவிலைப்படி எப்போது 'பூஜ்ஜியம்' ஆகும்?

இங்கே ஒரு முக்கியமான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது முக்கியம். சம்பள ஆணையத்தின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் 'செயல்படுத்தப்படலாம்' என்றாலும், அவை 'அங்கீகரிக்கப்பட்டு' 'இறுதிப்படுத்தப்பட' நேரம் எடுக்கும். பரிந்துரைகள் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு புதிய ஊதிய மேட்ரிக்ஸுடன் செயல்படுத்தப்படும் வரை, பழைய DA கணக்கீடு தொடர்கிறது. ஆகையால், பரிந்துரைகள் மே-ஜூன் 2027 க்குள் பெறப்பட்டால், அந்த நேரத்தில் (அதாவது, 2027 இல்) அகவிலைப்படி 'பூஜ்ஜியமாக்கப்படும்', ஜனவரி 1, 2026 முதல் அல்ல. இருப்பினும், அகவிலைப்படி 60% என்ற நிலையில்தான் பூஜ்ஜியம் ஆக்கப்படும். மீதமுள்ள கூடுதல் தொகை இறுதி கணக்கீட்டில் பரிசீலிக்கப்படும்.

ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்?

மத்திய ஊழியர்கள் இந்த முழு செயல்முறையையும் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். 8வது சம்பள ஆணையம் ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்பட்டாலும், அகவிலைப்படி 'பூஜ்ஜியமாக' மாறுவதற்கான செயல்முறைக்கு சில மாதங்கள் அல்லது ஒரு வருடம் கூட ஆகலாம். அதுவரை, உங்கள் சம்பளத்தில் அகவிலைப்படி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

8வது ஊதியக் குழு மீதான பிற எதிர்பார்ப்புகள் என்ன?

அகவிலைப்படி தவிர, 8வது ஊதியக் குழுவில் இன்னும் பல எதிர்பார்ப்புகள் உள்ளன. புதிய ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள பலர் ஆர்வமாக உள்ளனர். வீட்டு வாடகைக் கொடுப்பனவு (HRA) மற்றும் பயணக் கொடுப்பனவு (TA) விதிகளிலும் மாற்றங்கள் இருக்கலாம். இந்தக் அனைத்து கேள்விகளுக்கான பதில்களையும் சேர்த்து ஆணையம் தனது இறுதிப் பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கும். இதை நாம் 2027 ஆம் ஆண்டுக்குள் அறிவோம்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு ஷாக்: 69 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு நன்மைகள் இல்லை, எதிர்க்கும் யூனியன்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: 80%-157% சம்பள உயர்வு!! லெவல் 1-3 மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News