)
8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அளிக்கும் விதமாக, மத்திய அரசு சமீபத்தில் 8வது சம்பள ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்ததோடு, பரிந்துரை விதிமுறைகளுக்கும் அங்கீகாரம் அளித்தது. அதைத் தொடர்ந்து இது குறித்த பேச்சு தற்போது மண்டும் அதிகரித்துள்ளது.
8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எந்த அளவில் இருக்கும் என்பதுதான் மத்திய அரசு ஊழியர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது. ஏனெனில் இது ஒட்டுமொத்த சம்பள உயர்வை தீர்மானிக்கிறது. இந்த முறை உண்மையிலேயே மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 2 மடங்கு அதிகரிக்குமா? இதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என இந்த பதிவில் புரிந்துகொள்ளலாம்.
மத்திய அரசு 8வது சம்பள கமிஷனுக்கான குறிப்பு விதிமுறைகளை (ToR) அங்கீகரித்துள்ளது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கமிஷன் இப்போது தனது அறிக்கையைத் தயாரித்து சுமார் 18 மாதங்களில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும். பின்னர் அமைச்சரவை அதை அங்கீகரிக்கும்.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் பெருக்கி ஆகும். 7வது சம்பள கமிஷனில், இந்த காரணி 2.57 ஆக இருந்தது. 8வது சம்பள கமிஷனில் அதன் அளவு குறித்த தகவல் தற்போது தெரியவில்லை. இது 1.92 முதல் 3.0 -க்குள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் தீர்மானிக்கப்படுகின்றது. உதாரணமாக, ஒரு ஊழியரின் தற்போதைய அடிப்படை சம்பளம் ₹35,000 ஆக இருந்து, புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.11 ஆக இருந்தால், புதிய அடிப்படை ஊதியம் ரூ.35,000 × 2.11 = ரூ.73,850 ஆக இருக்கும். இந்த அடிப்படை ஊதியத்துடன் HRA போன்ற கொடுப்பனவுகளும் சேர்க்கப்படுகின்றன. HRA உடனடியாக அதிகரிக்கும் என்றும், TA போன்ற நிலையான கொடுப்பனவுகள் பின்னர் திருத்தப்படுகின்றன என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
அகவிலைப்படி நேரடியாக ஃபிட்மென்ட் ஃபாக்டரை தீர்மானிப்பதில்லை. ஆனால் அதன் விகிதம் ஒரு முக்கியமான அளவுரு. தற்போதைய DA 58% ஆகவுள்ளது. 8வது ஊதியக்குழு செயல்படுத்தப்படும் நேரத்தில் அது 70% ஐ எட்டினால், வளர்ச்சி காரணி மற்றும் குடும்ப அலகுகளைச் சேர்த்து கணக்கிடப்பட்டு ஃபிட்மென்ட் ஃபாக்டர் இன்னும் அதிகரிக்கக்கூடும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் சூத்திரம் பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது.
ஃபிட்மென்ட் ஃபாக்டரின் தாக்கம் அடிப்படை ஊதியம் மற்றும் HRA -இல் இருக்கும். ஆனால் புதிய சம்பள ஆணையம் செயல்படுத்தப்பட்டவுடன், அகவிலைப்படி பூஜ்ஜியத்திற்கு ரீசெட் செய்யப்படுகிறது. ஆகையால், மொத்தமாக கையில் கிடைக்கும் சம்பள உயர்வு (இன்-ஹேண்ட் சேலரி) பொதுவாக 20–25% ஆக இருக்கும்.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.0 ஆக இருந்தால், ரூ.50,000 அடிப்படை சம்பளம் ரூ.1,00,000 ஆக மாறும். இருப்பினும், இதற்கு முழு CTC யும் இரட்டிப்பாகும் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.
7வது ஊதியக் குழுவில், அனைத்து நிலைகளிலும் சீரான 2.57 ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த முறை, ஊதிய வேறுபாட்டைக் குறைக்க கீழ்நிலை ஊழியர்களுக்கு சற்று அதிகமான ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது, மத்திய அரசு ஊழியர்களில் 18 ஊதிய நிலைகள் உள்ளன. சில நிலைகள் இணைக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
ஓய்வூதியதாரர்களின் அடிப்படை ஓய்வூதியமும் அதே ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் அதிகரிக்கிறது. உதாரணமாக, ஒருவர் ரூ.30,000 ஓய்வூதியம் பெற்று, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.0 ஆக நிர்ணயிக்கப்பட்டால், புதிய ஓய்வூதியம் ரூ.60,000 ஆக இருக்கும்.
8வது ஊதியக்குழு ஊதிய உயர்வு சுருக்கமாக...
- சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
- எனினும், ஊதிய உயர்வு, அகவிலைப்படி, வளர்ச்சி காரணி மற்றும் குடும்ப அளவு போன்ற பல காரணிகளை உள்ளடக்கியது.
- சம்பளம் இரட்டிப்பாக வாய்ப்புகள் உள்ளன.
- ஆனால் எதிர்பார்ப்புகளும் யதார்த்தமும் ஒத்துப்போகுமா என்பதை உறுதியாக சொல்ல இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ