8th Pay Commission: கம்யூடேஷன் ஆஃப் பென்ஷன் தொடர்பான குறை ஓய்வூதிய கால அளவை குறைக்க நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விஷயம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
)
8th Pay Commission: அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெறும் போது, தேவைப்பட்டால் தனது ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை மொத்தமாக முன்கூட்டியே பெறலாம். அவருக்கு அனுமதிக்கப்பட்ட ஓய்வூதியத்தை தொகையில் 1/3 சதவிகிதத்திற்கு மிகையாகாமல் ஒப்படைப்பு செய்து, அதற்கான மொத்த தொகையை பெறுவது, ஒய்வூதியத்தை தொகுத்து பெறுதல் அல்லது கம்யூடேஷன் ஆஃப் பென்ஷன் எனப்படும். இதற்கு பிறகு மீதமுள்ள ஓய்வூதியம் குறை ஓய்வூதியம் எனப்படும். இந்த ஓய்வூதிய பிடித்தம் 15 ஆண்டுகள் வரை இருக்கும். பின்னர் முழு ஓய்வூதியம் கிடைக்கும்.
குறை ஓய்வூதிய கால அளவை குறைக்க கோரிக்கை
கம்யூடேஷன் ஆஃப் பென்ஷன் தொடர்பான குறை ஓய்வூதிய கால அளவை குறைக்க நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விஷயம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. தற்போது. இந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு முழு ஓய்வூதியம் மீட்டெடுக்கப்படும் நிலையில், இந்த காலத்தை 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
சம்பள கமிஷனின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
8வது சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த முறை அரசாங்கம் இந்தப் விஷயத்தை கையில் எடுக்கக்கூடும் என்று அரசு ஊழியர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அரசாங்கம் தற்போது சம்பள கமிஷனின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முடிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஊழியர் அமைப்புகள் இது தொடர்பாக தங்கள் குரலை எழுப்பியுள்ளன.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே அதிருப்தி
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு போன்ற பெரிய ஊழியர் சங்கங்கள், அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் கூறுகின்றன. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே அதிருப்தியை அதிகரித்து வருகிறது. தொழிற்சங்கம் சமீபத்தில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை அறிவித்தது. இதன் கீழ், வாயில் கூட்டங்கள் மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
8வது சம்பள கமிஷன்: ஊழியர்களின் 6 முக்கிய கோரிக்கைகள்
1. 8வது சம்பள கமிஷனை உடனடியாக நிறுவுதல் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை உள்ளடக்குதல்.
2. புதிய ஓய்வூதிய திட்டத்தை (NPS) ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) செயல்படுத்துதல்.
3. கோவிட்-19 காலத்தில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி (DA) உடனடியாக வெளியிடுவது .
4. கம்யூடட் பென்ஷன் தொடர்பாக ஓய்வூதியத்தின் மறுசீரமைப்பு காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக் குறைத்தல்.
5. கருணை நியமனங்களுக்கான வரம்பை விரைவில் நீக்குதல் மற்றும் காலியாக உள்ள பதவிகளை நிரப்புதல்.
6. அமைப்புகளின் ஜனநாயக செயல்பாட்டை உறுதி செய்தல்.
ஓய்வூதிய விதிகளில் ஊழியர்கள் என்ன மாற்றங்களை விரும்புகிறார்கள்?
தற்போதைய விதிகள்:
ஓய்வூதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியர் ஏதோ ஒரு காரணத்திற்காக முன்னமேயே மொத்தமாக பெறும் போது, ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை அரசாங்கம் 15 ஆண்டுகளுக்குக் கழித்துக் கொண்டு குறைவாக கொடுக்கிறது. அதாவது, பெறப்பட்ட மொத்தத் தொகை 15 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஈடுசெய்யப்படுகிறது.
ஊழியர்களின் கோரிக்கை:
ஓய்வு பெற்ற பணியாளர்கள் விரைவில் முழு ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக, இந்தக் காலகட்டத்தை 12 ஆண்டுகளாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஊழியர்களின் வாதங்கள்: இந்த மாற்றம் ஏன் அவசியம்?
1. அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் செலவுகளைக் கருத்தில் கொண்டு, 15 ஆண்டுகள் குறைப்பு நியாயமற்றது என ஊழியர்கள் கருதுகின்றனர்.
2. ஊழியர்கள் ஏற்கனவே தங்கள் சேவைக் காலத்தில் வரிகளையும் விலக்குகளையும் செலுத்தி வருகின்றனர்.
3. இந்த மாற்றம் ஏற்பட்டால், மில்லியன் கணக்கான ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு
ஓய்வூதிய மாற்றம் மற்றும் மறுசீரமைப்பு காலம் குறித்த முடிவு குறித்து இதுவரை அரசாங்கத்தால் முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ஊழியர் அமைப்புகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன, மேலும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அவர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தத் தயாராகி வருகின்றனர்.
8வது சம்பளக் குழு
8வது சம்பளக் குழுவை அமைக்கும் செயல்முறை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. ஊழியர்களின் இந்த முக்கியமான கோரிக்கையை அரசாங்கம் ஏற்கத் தயாராகுமா என்பது வரும் நாட்களில் நமக்கு தெளிவாகத் தெரியலாம். 8வது ஊதியக் குழு தொடர்பான அறிவிப்பு ஜனவரி 17, 2025 அன்று வெளியிடப்பட்ட நிலையில், குழுவை அமைப்பதற்கான நடைமுறைகள் 2025 ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ