)
Aadhaar Transactions Hit New Record: மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்தனைகளில் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, வங்கிச் சேவைகளுக்கு ஆதார் சேவைகளை பயன்படுத்துவதை பிரதானப்படுத்தியுள்ளது. நிதி பரிவர்த்தனைகளுக்கு ஆதார் அங்கீகார சரிப்பார்ப்பு முறை நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நிதி மோசடிகளை பெரும்பாலும் குறைத்துவிட முடியும். இந்த சூழலில் ஆதார் அங்கீகாரம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான டேட்டாவை மத்திய அரசு இப்போது ரிலீஸ் செய்திருக்கிறது. அதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆதார் அங்கீகாரம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணப்பரிவர்த்தனைகள் 7.8 விழுக்காடு வளர்ச்சியை சந்தித்துள்ளது.
மத்திய அரசு கொடுத்திருக்கும் தகவலின்படி, இப்போது முடிந்திருக்கும் ஜூன் 2025ல் ஆதார் எண் அங்கீகார சரிபார்ப்பு முறையில் மட்டும் 229.33 கோடி பணப்பரிவர்தனைகள் நடத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது இந்த ஆண்டின் முந்தைய மாதத்தையும், முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தையும் விட அதிகம். இந்த வளர்ச்சி ஆதாரின் விரிவான பயன்பாட்டையும், நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம், தொடக்கத்திலிருந்து இதுபோன்ற பரிவர்த்தனைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 15,452 கோடியைத் தாண்டியுள்ளது. ஜூன் 2025ன் அங்கீகார பரிவர்த்தனைகள், ஜூன் 2024 இல் பதிவு செய்யப்பட்ட இத்தகைய பரிவர்த்தனைகளை விட கிட்டத்தட்ட 7.8% அதிகம். அதிகரித்து வரும் இத்தகைய பரிவர்த்தனைகள், ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் எவ்வாறு பயனுள்ளதாக இருகிறது, குறிப்பாக பல்வேறு சேவைகளை பெறுவதற்கும் இந்த முறை எவ்வாறு உதவியாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
யுஐடிஏஐ-ஆல் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஆதார் முக அங்கீகார (Aadhaar Facial Authentication) முறையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஜூன் 2025ல், 15.87 கோடி முக அங்கீகார பரிவர்த்தனைகள் (Face Authentication Transactions) செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 4.61 கோடியாக இருந்தது. இதுவரை, கிட்டத்தட்ட 175 கோடி முக அங்கீகார பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முக அங்கீகார முறை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கிறது. இது பயனர்கள் தங்கள் அடையாளத்தை ஒரு முக ஸ்கேன் மூலம் சரிபார்க்க உதவுகிறது. இதன் மூலம் ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்வதுடன், பரிவர்த்தனை தொடர்பான பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ