சாலை விபத்தில் சிக்கினால் ரூ.15 லட்சம் பெறலாம் - அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

Insurance : சாலை விபத்தில் சிக்கினால் ரூ. 15 லட்சம் வரை விபத்து காப்பீடு பெறலாம். இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கொடுத்துள்ள முக்கிய தகவலை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jun 22, 2025, 01:53 PM IST
  • இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி காப்பீடு
  • சென்னையில் காப்பீடு முகாம் நடக்கிறது
  • சாலை விபத்து ஏற்பட்டால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு
சாலை விபத்தில் சிக்கினால் ரூ.15 லட்சம் பெறலாம் - அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

India Post Payments Bank Accident Insurance : இந்திய அஞ்சலக துறையின் கீழ் இயங்கும் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விபத்து காப்பீடு 10 லட்சம் மற்றும் 15 லட்சம் ரூபாய் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. மிக குறைந்த ப்ரீமியம் தொகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து காப்பீடு தொடர்பாக ’பாதுகாப்பு 360’ என்ற பெயரில் சென்னையில் விபத்து காப்பீட்டு முகாம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் புதிய பொது காப்பீட்டு இயக்கம் ஜூன் 10 ஆம் தேதி தொடங்கியது. இம்மாதம் 30 ஆம் தேதி வரை இந்த காப்பீடு முகாம் நடக்க உள்ளது.

Add Zee News as a Preferred Source

இந்த காப்பீட்டு இயக்கத்தின் முக்கிய குறிக்கோள், எதிர்பாராத இழப்புகள், சேதங்களிலிருந்து மக்களுக்கு நிதி ரீதியாக பாதுகாப்பு வழங்கும். அதேநேரத்தில் இந்த காப்பீட்டு முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு பொது காப்பீடு குறித்த அவசியமும் எடுத்துரைக்கப்படுகிறது. ஆண்டொண்டிற்கு வெறும் ரூ.520 / ரூ.555 பீரீமியத்தில், 10 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு, ரூ. 755 பீரீமியத்தில், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு கிடைக்கும் வகையிலான இரண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சாமானிய மக்களுக்கு விபத்துக் காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்/ கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மூலம், மிகக்குறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய இந்த விபத்துக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி விபத்து காப்பீடு சிறப்பம்சங்கள் : 

- 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

- விண்ணப்பபடிவம், அடையாள/முகவரி சான்றின் நகல்கள் போன்ற எவ்வித காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டுவரும் ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக்சாதனத்தை பயன்படுத்தி, 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இதற்கான காப்பீட்டு பாலிசி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ரூ.10 லட்சம்/ ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு (விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு / நிரந்தர முழு ஊனம் / நிரந்தர பகுதி ஊனம்).

- ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யும் வசதி.

- தொலைபேசி மூலம் எண்ணற்ற மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளும் வசதி.

- விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை) பெறலாம்.

- விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு / நிரந்தர முழு உடல் ஊனம் / நிரந்தர பகுதி அங்கஹீனம் ஏற்பட்ட நபரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1,00,000/- வரை பெறலாம்.

- விபத்தினால் நேரிடும் உயிரிழப்பு / நிரந்தர முழு ஊனம் / நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) திருமண செலவுகளுக்கு ரூ.1,00,000/- வரை பெறலாம்.

- விபத்தினால் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகையாக நாளொன்றுக்கு அதிகபட்சம் ரூ.1000/- வீதம் 15 நாட்களுக்கு (2 நாட்கள் கழிக்கப்படும்) வழங்கப்படும்.

- விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், இறுதிச்சடங்குகளுக்காக ரூ.5000 வரை வழங்க வகைசெய்கிறது.

ஆண்டொன்றுக்கு ரூ.520-ல்/ரூ.555-ல்/ரூ.755-ல் மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும் இந்த விபத்துக் காப்பீட்டு பாலிசியை எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் ஊனம் போன்ற நெருக்கடிகளையும்/ நிதி நெருக்கடிகளையும்/ உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கலாம். குடும்பத்தின் எதிர்காலத்தையும் உறுதி செய்ய முடியும். பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள்/தபால்காரர்கள் மூலம் இந்த விபத்துக் காப்பீட்டு திட்டத்தில் உடனே இணைந்து பயன்பெறுமாறு தாம்பரம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திரு. அ. கமால் பாஷா கேட்டுக் கொண்டுள்ளார். கூடுதல் விவரங்களுக்கு தாம்பரம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தை 044-22266525 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

மேலும் படிக்க | PM Mudra Yojana: சொந்த தொழில் தொடங்க ரூ.20 லட்சம் கடன் தரும் அரசு, பெறுவது எப்படி?

மேலும் படிக்க | PM Kisan 20வது தவணை எப்போது வரும்? e-KYC செய்வது எப்படி? முக்கிய தகவல் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News