8th Pay Commission DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. ஜனவரி மாத அகவிலைப்படி குறித்த ஒரு தகவல் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? இதனால் சம்பளம் எவ்வளவு உயரும்? இந்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
AICPI-IW: குறியீடு 0.4 புள்ளிகள் அதிகரித்துள்ளது
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர் பணியகம், அகில இந்திய தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டில் (AICPI-IW) மற்றொரு அதிகரிப்பை அறிவித்துள்ளது. அக்டோபர் 2025 இல், AICPI-IW 0.4 புள்ளிகள் அதிகரித்து 147.7 ஆக உயர்ந்துள்ளது. இது ஜூலை 2025 இல் 146.5 ஐ எட்டியது. அதன் பின்னர் செப்டம்பரில் இந்த தரவு 0.2 புள்ளிகள் அதிகரித்து 147.3 ஆகவும், ஆகஸ்ட் 2025 இல் 0.6 புள்ளிகள் அதிகரித்து 147.1 ஆகவும் உயர்ந்தன.
கடந்த சில மாதங்களில் AICPI-IW தரவுகளில் மிகப்பெரிய அதிகரிப்பு ஜூலை 2025 இல் காணப்பட்டது. அப்போது AICPI-IW 1.5 புள்ளிகள் அதிகரித்து 146.5 ஆக உயர்ந்தது. இந்த வகையில், AICPI-IW தரவு கடந்த நான்கு மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது.
"அக்டோபர், 2025க்கான அகில இந்திய CPI-IW 0.4 புள்ளிகள் அதிகரித்து 147.7 (நூற்று நாற்பத்தேழு புள்ளி ஏழு) ஆக உயர்ந்துள்ளது" என்று தொழிலாளர் பணியகம் நவம்பர் 28, 2025 தேதியிட்ட வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
DA Hike: ஜனவரி 2026 டிஏ உயர்வின் முக்கியத்துவம் என்ன?
8வது மத்திய ஊதிய ஆணையத்திற்கான பரிந்துரை விதிமுறைகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான சில வாரங்களுக்குப் பிறகு தொழிலாளர் பணியகத்தின் அக்டோபர் AICPI-IW தரவு வெளிவந்துள்ளது. ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு மிக முக்கியமானது. ஏனெனில், 8வது ஊதியக்குழுவின் முதல் டிஏ உயர்வாக இது இருக்கும்.
7வது ஊதியக்குழு டிசம்பர் 2025 -இல் நிறைவடையும். 10 ஆன்டு விதிப்படி 8வது ஊதியக்குழு 2026 ஜனவரி முதல் அமலுக்கு வர வேண்டும். எனினும், இதன் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் அமலாக்கம் சற்று தாமதமாகலாம் என கூறப்படுகின்றது. 8வது ஊதியக்குழு அதன் பரிந்துரைகளை சமர்ப்பிக்க 12-18 மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், 7வது ஊதிய ஆணையம் பரிந்துரைத்தபடி ஜனவரி 1, 2026 முதல், மத்திய அரசு ஊழியர்கள் வழக்கம் போல் தங்கள் அகவிலைப்படி உயர்வை எதிர்பார்க்கிறார்கள்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வு
7வது ஊதிய ஆணைய பரிந்துரைகளின் படி, தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் AICPI-IW தரவு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முறையே அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலைப்படி நிவாரணம் (Dearness Relief) அதிகரிப்பு விகிதத்தை தீர்மானிக்க உதவுகிறது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் மாதாந்திர ஊதியத்தில் பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்த்துப் போராட DR/DR உதவுகிறது.
Dearness Allowance: AICPI-IW தரவை சார்ந்து உயரும் அகவிலைப்படி
அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை அதிகரிக்கப்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இந்த அதிகரிப்பு அமலுக்கு வருகிறது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான AICPI-IW தரவுகளின் அடிப்படையில் ஜனவரி மாத டிஏ உயர்வும், ஜனவரி முதல் ஜூன் வரையிலான AICPI-IW தரவுகளின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் கணக்கிடப்படுகின்றன.
AICPI-IW தரவு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு (நவம்பர் மற்றும் டிசம்பர்) இது தொடர்ந்து அதிகரித்தால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜனவரி 2026 முதல் DA/DR உயர்வை எதிர்பார்க்கலாம். இருப்பினும், தற்போதைய போக்கு தொடர்ந்தால், உயர்வு அளவு சுமார் 2% மட்டுமே இருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது.
ஜனவரி 2026 இல் பொருந்தும் DA/DR விகிதத்தை சம்பள உயர்வுகளின் அளவை தீர்மானிக்க 8வது ஊதியக் குழுவும் பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஜனவரியில் அதிக டிஏ உயர்வு அதிக சம்பள உயர்வுக்கு வழிவகுக்கும்.
இருப்பினும், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் தற்போதைய கொடுப்பனவுகளை மறுபரிசீலனை செய்ய 8வது ஊதியக் குழுவை மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. எனவே, ஜனவரி 2026 இல் பொருந்தும் அகவிலைப்படி விகிதம் இறுதியில் 8வது ஊதியக்குழுவின் கீழ் சம்பள உயர்வை எவ்வாறு பாதிக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









