8th Pay Commission DA Hike: 8வது ஊதியக்குழு தொடர்பான பல முக்கிய செய்திகள் சென்ற வாரம் கிடைத்தன. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டில் (AICPI-IW) மற்றொரு அதிகரிப்பை பற்றி தொழிலாளர் பணியகம் தெரிவித்துள்ளது. இது ஊழியர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
AICPI-IW: குறியீடு 0.2 புள்ளிகள் அதிகரித்துள்ளது
செப்டம்பர் 2025 இல், AICPI-IW 0.2 புள்ளிகள் அதிகரித்து 147.3 ஆக உள்ளது. ஜூலை 2025 இல் இது 146.5 ஆக இருந்து. ஆகஸ்ட் 2025 இல் இந்த தரவு 0.6 புள்ளிகள் அதிகரித்து147.1 ஆக உயர்ந்தது. ஜூலையில், AICPI-IW 1.5 புள்ளிகள் அதிகரித்து 146.5 என்ற அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், AICPI-IW தரவு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதை காண முடிகின்றது.
"செப்டம்பர் 2025க்கான அகில இந்திய CPI-IW 0.2 புள்ளிகள் அதிகரித்து 147.3 (நூற்று நாற்பத்தேழு புள்ளி மூன்று) ஆக உள்ளன. 2025 செப்டம்பர் மாதத்திற்கான ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 2.79% ஆக இருந்தது, இது 2024 செப்டம்பரில் 4.22% ஆக இருந்தது" என்று தொழிலாளர் பணியகம் அக்டோபர் 31, 2025 தேதியிட்ட வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 2025 மற்றும் செப்டம்பர் 2025க்கான அகில இந்திய குழு வாரியான CPI-IW:
உணவு மற்றும் பானங்கள்: 151.8 151.1
பான், சுபாரி, புகையிலை மற்றும் போதைப்பொருட்கள்: 168.2 169.1
ஆடை மற்றும் காலணிகள்: 152.7 155.1
ஹவுசிங்: 137.7 137.7
எரிபொருள், மின்சாரம்: 152.9 152.8
இதர தரவுகள்: 143.2 144.1
பொது குறியீடு: 147.1 147.3
DA Hike: டிஏ உயர்வின் முக்கியத்துவம் என்ன?
7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, AICPI-IW தரவு தற்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைப்படி நிவாரணம் (DR) ஆகியவற்றின் அதிகரிப்பு விகிதத்தை தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அகவிலைப்படியும், அகவிலை நிவாரணமும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் மாதாந்திர ஊதியத்தில் பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
Dearness Allowance: AICPI-IW தரவை சார்ந்து உயரும் அகவிலைப்படி
ஜூலை முதல் டிசம்பர் 2025 வரையிலான AICPI-IW தரவு, ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் அகவிலைப்படி உயர்வை தீர்மானிக்க அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும். AICPI-IW தரவு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்கனவே அதிகரித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு (அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்) இது தொடர்ந்து அதிகரித்தால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜனவரி 2026 முதல் சிறந்த DA/DR உயர்வை எதிர்பார்க்கலாம்.
DA Hike: ஜனவரி டிஏ உயர்வின் முக்கியத்துவம்
ஜனவரி 2026 இல் இருக்கும் DA/DR விகிதத்தை, புதிதாக அமைக்கப்படும் 8வது ஊதியக் குழுவும் சம்பள உயர்வுகளின் அளவைத் தீர்மானிக்கப் பயன்படுத்தலாம். ஜனவரியில் அதிக அகவிலைப்படி அதிக ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும். ஜனவரி 2026 -இல் அகவிலைப்படி உயர்வு ஆனவுடன், அகவிலைப்படி தொகை அப்போதிருக்கும் அடிப்படை ஊதியத்துடன் நேரடியாக இணைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகரித்த மகிழ்ச்சி
ஒரு வகையில், ஜனவரி மாத டிஏ உயர்வு அடுத்த குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும். இதற்கிடையில், தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ள செப்டம்பர் 2025க்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI-IW) தரவில் அதிகரிப்பு காணப்படுவது மத்திய அரசு ஊழியர்களின் மகிழ்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.
இருப்பினும், நிதி அமைச்சகம் 8வது ஊதியக் குழுவிடம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் தற்போதைய கொடுப்பனவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, ஜனவரி 2026 இல் மாறும் அகவிலைப்படி விகிதம் இறுதியில் 8வது ஊதியக்குழுவின் கீழ் சம்பள உயர்வை எவ்வாறு பாதிக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது.
Salary Hike: மிகப்பெரிய சம்பள உயர்வு நிச்சயம்
8வது ஊதியக்குழு தற்போதைய ஊதிய அமைப்புகளை மதிப்பாய்வு செய்து அதன் பரிந்துரையைச் சமர்ப்பிக்க 18 மாதங்கள் வரை ஆகலாம். 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தவுடன் அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கபட்டு அப்போதிருக்கும் அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும் என்று கூறப்படுகின்றது. எனினும், அதிகாரபூர்வ அறிவிப்புகள் வந்தவுடன்தான் இதிலும் தெளிவு கிடைக்கும். எனினும், ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வும், ஓய்வூதிய உயர்வும் காத்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அடி தூள்!! லெவல் 1 மத்திய அரசு ஊழியர்களுக்கு 14%-54% சம்பள உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









