இனி Maruti கார் வாங்குறது ரெம்ப சிரமம்; அதிரடி விலை உயர்வு!

Maruti Price Hike: மாருதி கார்கள் விலை அடுத்த மாதம் முதல் உயர்கிறது.

Last Updated : Jun 22, 2021, 12:42 PM IST
இனி Maruti கார் வாங்குறது ரெம்ப சிரமம்; அதிரடி விலை உயர்வு!

Maruti Price Hike: கொரோனா ஊரடங்குக்குப் பிறகு ஆட்டோமொபைல் துறையில் நெருக்கடியான சூழல் நிலவுகிறது. வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்துள்ளதால் அதன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் நிலைக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது இந்தியாவின் மிகப் பெரிய கார் (Cars) தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதன் கார்களின் விலையை உயர்த்தி உள்ளது. இந்த புதிய விலை அடுத்த மாதம் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

ALSO READ | Maruti Suzuki Ertiga: மலிவான 7 இருக்கைகள் கொண்ட சூப்பர் CNG கார் வாங்க செம்ம வாய்ப்பு

மாருதி இந்த ஆண்டு மூன்றாவது முறையாக விலைகளை அதிகரிக்க உள்ளது
இந்த ஆண்டு மாருதியின் கார்களில் இது மூன்றாவது அதிகரிப்பு ஆகும். முன்னதாக ஜனவரி 2021 மற்றும் ஏப்ரல் 2021 ஆகிய தேதிகளிலும் மாருதி விலைகளை உயர்த்தியிருந்தது. ஜூலை மாதத்தில், மோடல்கள் பொறுத்து விலைகள் மாறுபடும். இருப்பினும், விலை எவ்வளவு அதிகரிக்கும் என்று மாருதி இதுவரை அறிவிக்கவில்லை. 

ஏப்ரல், ஜனவரி மாதங்களிலும் விலைகள் அதிகரிக்கப்பட்டன
முன்னதாக, மாருதி ஏப்ரல் மாதத்தில் அதன் பல கார்களின் விலையை அதிகரித்தது, செலவு அதிகரித்ததைக் காரணம் காட்டி. ஜனவரி மாதத்திலும், மாருதி சில கார் மாடல்களின் விலையை அதிகரித்தது. மாடல் மற்றும் வரம்பைப் பொறுத்து விலைகள் ரூ .34,000 வரை அதிகரிக்கப்பட்டன. அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகளின் தாக்கத்தை ஈடுசெய்ய கார்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக மாருதி சுசுகி கூறுகிறது. கடந்த சில ஆண்டுகளில் நிறுவனத்தின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது, இதன் காரணமாக அதன் அனைத்து மாடல்களின் விலையையும் அதிகரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிசான், டொயோட்டாவும் விலைகளை அதிகரித்தன
மாருதியை தவிர டொயோட்டா, நிசான் கார்களின் விலையை ஏப்ரல் மாதத்தில் அதிகரிப்பதாக அறிவித்தது. மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் அதன் முழு உற்பத்தித் தொடரின் விலையையும் அதிகரித்து வருவதாக நிசான் கூறுகிறது. நிசான் மற்றும் டாட்சனின் அனைத்து மாடல்களின் விலைகளும் ஏப்ரல் 1, 2021 முதல் அதிகரிக்கப்பட்டன. மாருதிக்குப் பிறகு, இப்போது மற்ற கார் நிறுவனங்களும் விலையை அதிகரிக்க முடியும்.

ALSO READ | விரைவில் விற்பனைக்கு வரும் Maruti Suzuki இன் 3 புதிய எஸ்யூவிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News