)
FASTag New Rules : தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது டோல் பிளாசாக்களில் ஏற்படும் நெருக்கடியை குறைக்க மத்திய அரசு FASTag கட்டண முறையை அமல்படுத்தியது. வாகன ஓட்டிகள் அனைவரும் FASTag கணக்கு தொடங்குவதும் கட்டாயமாக்கப்பட்டது. இதன் மூலம் வாகன நெருக்கடியை குறைத்து, நேர செலவீனமும் குறையும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்தது. மேலும், டோல் பிளாசாக்களில் மோசடி நடக்காது என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இப்போது இதில் புதிய அப்டேட் ஒன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. தேசிய நெடுஞ்சாலைகளில் விரைவில் வருடாந்திர பாஸ்டேக் கட்டண முறையை (Annual FASTag pass) நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிப்பவர்களுக்கு FASTag ஆண்டு பாஸ் ஒரு பெரிய வசதியாக அமையும் வகையில் இந்த சிஸ்டம் உருவாக்கப்படுள்ளது. இந்த புதிய திட்டம் ஆகஸ்ட் 15, 2025 முதல் அமலுக்கு வருகிறது. FASTag ஆண்டு பாஸ் விலை ஒரு ஆண்டுக்கு ரூ. 3,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஓர் ஆண்டில் 200 பயணங்கள் வரை மட்டுமே இது பொருந்தும். ஒருவேளை ஓர் ஆண்டுக்கு முன்னதாக 200 பயணங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொண்டிருந்தால் பாஸ்டேக்கை ரீச்சார்ஜ் செய்ய வேண்டும்.
மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ள இந்த புதிய திட்டம் கார், ஜீப், வான் போன்ற தனியார் (Non-Commercial) வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். கமர்ஷியல் வாகனங்களுக்கு பொருந்தாது. ஒருமுறை ரீச்சார்ஜ் செய்தால் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் (National Highways) பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை கொடுத்துள்ள விளக்கத்தில், ஒரே முறை கட்டணம் வசூலிக்கப்படுவதால், சாலைகளில் பயணிக்கும்போது மீண்டும் மீண்டும் டோல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. 60 கிமீ வரம்பில் உள்ள டோல் பிளாசாக்களில் மீண்டும் கட்டணம் வசூலிப்பது தவிர்க்கப்படும். பயண நேரம் மிச்சம், டோல் பிளாசாக்களில் நெரிசல் குறையும் என தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த கட்டணம் அதிகம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தனியார் வாகனங்களை பொறுத்தவரை (ஓன் போர்டு வாகனங்கள் உள்ளிட்டவைகள்) சுங்கச்சாவடியை பயன்படுத்தும் காலம் சொற்பமாக உள்ளதால் இந்த கட்டணம் மிகவும் கூடுதலான தொகையாகும். அதோடு, மேலே குறிப்பிட்ட தனியார் வாகனங்களுக்கு 3,000 ரூபாய் ஆண்டுக்கு கட்டணம் என்பதனை வணிக மற்றும் சிறிய சரக்கு வாகனங்களுக்கு பயன்படும் வகையில் நடைமுறைப்படுத்தினால் அவர்களுக்கான நிதி சுமை குறையும் என்பதனை கருத்தில் கொண்டு இதனை நடைமுறைப்படுத்தலாம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Annual FASTag pass ரீச்சார்ஜ் செய்வது எப்படி?
Rajmarg Yatra App, NHAI மற்றும் MoRTH (Ministry of Road Transport) அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் விரைவில் Activation Link வெளியிடப்படும். இங்கே, புதிய பாஸ் வாங்கவோ அல்லது பழையதை ரீநியூ (Renew) செய்யவோ முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ