அட்சய திருதியை 2025: டிஜிட்டல் தங்கம் வாங்கும் ஐடியா இருக்கா? எக்கச்சக்க தள்ளுபடிகள் இருக்கு!

Digital Gold: அட்சய திருதியை முன்னிட்டு நகைக்கடைகளுக்கு சென்று வாங்குவதை போல், செயலிகள் மூலம் டிஜிட்டல் தங்கத்தையும் வாங்கலாம். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 30, 2025, 09:54 AM IST
  • இதில் நீங்கள் வாங்கும் தங்கம் 24 கேரட் தங்கமாகும்.
  • இவை உங்கள் பெயரில் தனியே வால்டில் வைக்கப்படும்.
  • இதனை நீங்கள் செயலிகள் மூலமே வாங்கிக்கொள்ளலாம்.
அட்சய திருதியை 2025: டிஜிட்டல் தங்கம் வாங்கும் ஐடியா இருக்கா? எக்கச்சக்க தள்ளுபடிகள் இருக்கு!

Digital Gold: ஏப். 30ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் உள்ள இந்து மக்கள் 'அட்சய திருதியை' பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அட்சய திருதியை நாளை மங்களகரமான நாளாக கருதும் இந்துமக்கள் இந்த தினத்தில் தங்கத்தை வாங்க திட்டமிடுவார்கள். 

Add Zee News as a Preferred Source

அட்சய திருதியை (Akshaya Tritiya 2025) அன்று நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்தீர்கள் என்றால் உங்களிடம் நீண்ட கால செல்வம் அதிகரிக்கும், செழிப்பான வாழ்க்கையை வாழ்வீர்கள் என நம்பப்படுகிறது. இதனால், இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் அபிமான நகைக்கடைகளில் அலைமோதுவார்கள். மேலும் பலரும் இதனால் சிரமத்திற்கு மத்தியில் தங்கத்தை வாங்க முற்படுவார்கள்.

Digital Gold: டிஜிட்டல் தங்கத்தையும் வாங்கலாம்

அந்த வகையில், டிஜிட்டல் தங்கத்தை நீங்கள் வீட்டில் இருந்தபடியே வாங்கலாம். டிஜிட்டல் தங்கத்தை வாங்குவதற்கு பல்வேறு செயலிகள் இருக்கும் வேளையில், தங்க நகைக்கடைகளில் அட்சய திருதியை வழங்கப்படும் பல்வேறு சலுகைகள், தள்ளுபடிகளை போன்று செயலிகளும் டிஜிட்டல் தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தள்ளுபடிகளை வழங்குகிறது.

டிஜிட்டல் தங்கத்தை வாங்குவதற்கு முன்னர் எந்தெந்த செயலிகள் என்னென்ன சலுகைகள், தள்ளுபடிகளை வழங்குகின்றன என்பதை தெரிந்துகொள்வதும் அவசியமாகும். ஏர்டெல் செயலி, போன் பே செயலி, பேடிஎம் செயலி, ஜியோ பைனான்ஸ் மற்றும் மை ஜியோ செயலி உள்ளிட்ட பல பிரபலமான செயலிகள் மூலம் நீங்கள் டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம்.

Digital Gold: ஏர்டெல் தேங்க்ஸ் செயலி

இந்த செயலின் மூலம் ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் மூலம் நீங்கள் டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம். இதில் நீங்கள் வாங்குவது 24 கேரட் தங்கமாகும். நீங்கள் வாங்கும் தங்கம் காப்பீடு செய்யப்பட்ட வால்ட்களில் பத்திரமாக இருக்கும். குறைந்த அளவிலான தொகைகள் தொடங்கி, புதியவர்கள் வரை பல்வேறு தரப்பினருக்கு இது சரியானதாக அமைகிறது.

Digital Gold: மை ஜியோ செயலி மற்றும் ஜியோ பைனான்ஸ்

இந்த இரண்டு செயலிகள் மூலம் ஜியோவின் 24 கேரட் டிஜிட்டல் தங்கத்தை வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் இருக்கின்றன. அதாவது, 1000 ரூபாய் முதல் 9,999 ரூபாய் வரையில் தங்கம் வாங்கும் நபர்களுக்கு 1% இலவச தங்கம் வழங்கப்படும். 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்குபவர்களுக்கு 2% இலவச தங்கம் வழங்கப்படும்.

அதாவது இலவச தங்கத்தின் மதிப்பு ரூ.21 ஆயிரம் வரை இருக்கும். மேலும், ஒரு வாடிக்கையாளரின் 10 பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். மேலும் இந்த சலுகை ஏப். 29ஆம் தேதி தொடங்கி மே 5ஆம் தேதி வரை மட்டுமே.

Digital Gold: பேடிஎம் செயலி

பேடிஎம் மியூச்சுவல் SIP திட்டம் போன்று, டிஜிட்டல் தங்கம் வாங்குவதிலும் SIP-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. 9 ரூபாயில் இருந்து நீங்கள் தினமும் இதில் முதலீடு செய்யலாம். மேலும், 500 ரூபாய்க்கு மேலாக தங்கத்தை வாங்குபவர்களுக்கு 5% ரிவார்ட் பாயிண்ட்ஸை வழங்குகிறார்கள்.

Digital Gold: போன்பே செயலி

போன்பே வாடிக்கையாளர்கள், 2000 ரூபாய்க்கு அதிகமாக ஒரே கட்டமாக தங்கம் வாங்கினால் உங்களுக்கு 2000 ரூபாய் வரையில் 1% கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. இதுவும் டிஜிட்டல் தங்கமே.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் டிஜிட்டல் தங்கம் குறித்த அறிமுகம்தான். இது முதலீடு செய்வதற்கான பரிந்துரை கிடையாது. இவற்றின் மூலம் உங்களுக்கு ஏதேனும் இழப்புகள் நேர்ந்தால் ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பாகாது)

மேலும் படிக்க |  செய்கூலி சேதாரம் இல்லாமலும் தங்கம் வாங்குவது எப்படி? லாபத்தை கொட்டும் Gold ETF முதலீடு

மேலும் படிக்க |  Akshaya Tritiya 2025: அட்சய திருதியையில் என்னென்ன பொருட்களை வாங்கலாம்

மேலும் படிக்க |  நிச்சயம் 38% குறையுமா...? உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை... உண்மை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News