COVID-19: சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் 2வது நிதி தொகுப்பை மத்திய அரசு அறிவிக்க உள்ளது

இந்தியாவின் 2.9 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் கால் பகுதியினர் சிறு வணிகங்கள் மற்றும் 500 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களைப் பயன்படுத்துகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 8, 2020, 10:56 PM IST
COVID-19: சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் 2வது நிதி தொகுப்பை மத்திய அரசு அறிவிக்க உள்ளது title=

புதுடெல்லி: வரவிருக்கும் நாட்களில் இந்தியா அறிவிக்கவுள்ள இரண்டாவது நிதித்தொகுப்பு சுமார் 1 டிரில்லியன் ரூபாய் (13 பில்லியன் டாலர்) மதிப்புடையதாக இருக்கும் என்றும், கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான உதவியில் மத்திய அரசு கவனம் செலுத்த உள்ளதாகவும் இரண்டு மூத்த அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

"இரண்டாவது நிதித்தொகுப்பு பெரும்பாலும் எம்.எஸ்.எம்.இ.களில் (MSMEs) கவனம் செலுத்தப்படலாம்" என்று மூத்த அரசாங்க அதிகாரிகளில் ஒருவர் ராய்ட்டரஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, அவர்கள் சந்தித்த இழப்பின் அளவை மதிப்பிட்ட பின்னர், பெரிய நிறுவனங்களுக்கு ஒரு தனி நிதித்தொகுப்பு அறிவிக்கப்படலாம் என்று அந்த அதிகாரி கூறினார்.

கடந்த மாதம், இந்தியா 1.7 டிரில்லியன் ரூபாய் (22.6 பில்லியன் டாலர்) பொருளாதார ஊக்கத் திட்டத்தை அறிவித்தது. இது நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான ஏழைகளுக்கு நிவாரணம் வழங்க நேரடி பணப் பரிமாற்றம் மற்றும் உணவு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டது.

அதேநேரத்தில் மத்திய அரசாங்கம் விரைவில் அதிக நிவாரணம் நிதித்தொகுப்பை அறிவிக்கும் என்று ஊடகங்கள் ஊகித்து வருகின்றன.

மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான சிறு வணிகங்களுக்கு நிறுவனங்கள் 66 பில்லியன் டாலருக்கும் அதிகமாக கடன்பட்டுள்ளன என்று மத்திய அரசாங்கம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

அரசாங்கத்தின் மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் 2.9 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் கால் பகுதியினர் சிறு வணிகங்கள் மற்றும் 500 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களைப் பயன்படுத்துகின்றனர் எனக் கூறியுள்ளது. 

Trending News