)
Senior Citizens Latest News: மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு பலவித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. அவற்றில் அடல் ஓய்வூதியத் திட்டமும் முக்கியமான ஒன்றாகும். பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் அடல் பென்ஷன் திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும்.
அடல் ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசால் நடத்தப்படும் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இது அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு முதுமையில் நிதிப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அரசாங்க ஓய்வூதியத் திட்டத்தின் மூலம், பயனாளிகள் மாதம் ரூ.5,000 வரை ஓய்வூதியமாகப் பெறலாம். அந்தத் தொகையைப் பெற, இள வயது முதலே சிறிய அளவிலான தொகையை முதலீடு செய்ய வேண்டும்.
- அரசாங்கம் இந்தத் திட்டத்தை 2015 இல் அறிமுகப்படுத்தியது.
- இது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது.
- வழக்கமான ஓய்வூதியப் பலன்கள் எதுவும் பெறாதவர்களுக்காக அடல் ஓய்வூதிய யோஜனா தொடங்கப்பட்டது.
- இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து 60 வயதை எட்டிய பிறகு ஒரு நிலையான மாதாந்திர ஓய்வூதியத் தொகையை பெறலாம்.
- முக்கியமாக, இது ஒரு உத்தரவாதமான ஓய்வூதியத் திட்டமாகும். அதாவது இந்தத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மத்திய அரசே உத்தரவாதம் அளிக்கிறது.
18 முதல் 40 வயதுக்குட்பட்ட தனிநபர்கள் அடல் ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டம் அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு அல்லது எந்த ஓய்வூதிய வசதியும் இல்லாதவர்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் இந்தத் திட்டத்தில் சேர முடியாது என்பதை நினைவில் கொள்ள வெண்டும். திட்டத்தில் சேர்ந்த நபர் இறந்துவிட்டால், ஓய்வூதியத் தொகை அவரது வாழ்க்கைத் துணைவருக்கு வழங்கப்படும். இருப்பினும், இருவரும் இறந்துவிட்டால், முழு வைப்புத்தொகையும் பரிந்துரைக்கப்பட்ட நாமினிக்குத் தரப்படும்.
- இந்தத் திட்டத்தில் முதலீட்டுத் தொகை உங்கள் வயதைப் பொறுத்தது.
- உதாரணமாக, ஒரு நபர் இந்தத் திட்டத்தில் 18 வயதில் சேர்ந்தால், அவரது மாதாந்திர முதலீடு ₹210 ஆக இருக்கும்.
- 25 வயதில், மாதத்திற்கு ₹376 பங்களிப்பு செலுத்த வேண்டும்.
- 30 வயதில் சேர்ந்தால், மாதத்திற்கு ₹577 வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.
- 40 வயதில், மாதத்திற்கு ₹1,454 பங்களிப்பு செலுத்த வேண்டும்.
- இந்தப் பங்களிப்புகளுக்கு ஈடாக, பயனாளி 60 வயதை எட்டும்போது மாதத்திற்கு ₹5,000 ஓய்வூதியம் பெறத் தொடங்குகிறார்.
இதை செய்ய முதலில் உங்கள் வங்கியின் நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங்கில் லாக் இன் செய்ய வேண்டும். அதன் பிறகு "Social Security Scheme” அல்லது “APY” பிரிவுக்குச் செல்லவும். தேவையான விவரங்களை நிரப்பி, ஓய்வூதியத் தொகையைத் தேர்ந்தெடுத்து படிவத்தைச் சமர்ப்பிக்கவும். செயல்முறை முடிந்தவுடன், நிலையான தொகை ஒவ்வொரு மாதமும் கணக்கிலிருந்து தானாகவே கழிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ