Old Age Pension Scheme: நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. முதுமையில், இளமையில் உள்ளது போல நம்மால் பணத்தை ஈட்ட முடிவதில்லை. இதை நினைவில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசுகளும் மூத்த குடிமக்களுக்காக பல வித ஓய்வூதியத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. உத்தர பிரதேச அரசின் அப்படி ஒரு திட்டம் நாடு முழுடும் பிரபலமான உள்ளது. இந்த திட்டத்தில் சமீபத்தில் ஒரு புதிய புதுப்பிப்பும் வந்துள்ளது.
Senior Citizens: மூத்த குடிமக்கள் ஓய்வூதியத் திட்டம்
உத்தரப் பிரதேசத்தில், மூத்த குடிமக்கள் ஓய்வூதியத் திட்டம் மூலம் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 67.5 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த எட்டு மாதங்களில் சுமார் 9,83,000 பயனாளிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகுதியற்றவர்களை நீக்குவதற்காக, பயனாளிகளைத் தானாகவே கண்டறியும் திட்டத்திற்கும் மாநில அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, போலி மற்றும் மோசடிப் பயனாளிகளையும் விண்ணப்பங்களையும் நீக்குவதற்காக, ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் மற்றும் நிகழ்நேரக் கண்காணிப்பு முறையை மாநில சமூக நலத்துறை செயல்படுத்தியுள்ளது என்று சமூக நலத்துறைக்கான இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) அசீம் அருண் கூறினார்.
UP State Government: மாநில அரசின் நடவடிக்கை
எந்த வித கூடுதல் சிரமங்களோ, ஆவணப் பணிகளோ இல்லாமல் ஓய்வூதியப் பலன்கள் தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு சமீபத்தில் புதிய முயற்சி ஒன்றை எடுத்தது. முதியோர் ஓய்வூதியத் திட்டம் குடும்ப அடையாள அடையுடன் இணைக்கப்பட்டது. இது செயல்முறைகளை இன்னும் எளிதாக்கியது. இதன் மூலம் 60 வயதான தகுதியுள்ள முதியவர்களுக்கு தானாக ஒய்வூதியம் கிடைக்கத் தொடங்கும்.
புதிய முயற்சிகள் மூலம் 2024 ஆம் ஆண்டில், இறந்த அல்லது தகுதியற்ற சுமார் 1,77,000 பேர் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என்றும், 2025 ஆம் ஆண்டில், உண்மையான விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்வதற்காக சுமார் 3,32,000 பெயர்கள் நீக்கப்பட்டன என்றும் இணை அமைச்சர் அசீம் அருண் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில், சுமார் அறுபது லட்சம் மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்றனர். இப்போது, இந்த எண்ணிக்கை 67 லட்சத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இது சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் அரசுக்கு உள்ள கவனம் மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.
National Old Age Pension Scheme: டிஜிட்டல் நடவடிக்கைகள்
நவம்பர் 2025 இல், முதியோர் ஓய்வூதிய அமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர டிஜிட்டல் நடவடிக்கைகளைப் பயன்படுத்த மாநில அரசு ஒப்புதல் அளித்தது. மாநிலத்தின் அனைத்துக் குடும்பங்களின் விவரங்களான முதன்மை வருமானம் ஈட்டுபவர், மனைவி, குழந்தைகள், பெற்றோர், உடன்பிறப்புகள் மற்றும் பிற சார்ந்திருப்பவர்கள் போன்ற விவரங்களைச் சேமித்து வைக்கும் குடும்ப அடையாள அட்டை தரவுத்தளத்தைப் பயன்படுத்தி, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பலன்களை அடையாளம் கண்டு வழங்கியது.
60 வயதை எட்டவிருக்கும் நபர்களை அடையாளம் காணவும் இந்தத் தரவுத்தளம் பயன்படுத்தப்படுகிறது. அடையாளம் காணப்பட்டதும், அரசாங்கம் அவர்களின் சம்மதத்தைப் பெறுகிறது. இதற்காக பயனாளிகளுக்கு எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் அனுப்புவதுடன், தொலைபேசி அழைப்புகளையும் மேற்கொள்கிறது. எந்தப் பதிலும் இல்லாத பட்சத்தில், பயனாளிகளை நேரில் தொடர்புகொண்டு அவர்களைத் திட்டத்தில் சேர்ப்பதற்காக உள்ளூர் அதிகாரிகளைத் துறை அனுப்புகிறது. ஒப்புதல் பெற்ற 15 நாட்களுக்குள் ஒப்புதல் செயல்முறை முடிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அது முடிந்ததும், ஓய்வூதியம் நேரடியாக பயனாளிகளின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.
Family ID: குடும்ப அடையாள அட்டை கட்டாயமாகும்
உத்தர பிரதேச அரசின் இந்த முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கு மூத்த குடிமக்கள் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. எனினும், அவர்களுக்கு குடும்ப அடையாள அட்டை கண்டிப்பாக தேவைப்படும். சமூக நலத்துறை குடும்ப அடையாள அட்டையிலிருந்து தரவுகளைச் சேகரிக்கிறது. ஆகையால், தங்களிடம் குடும்ப அடையாள அட்டை இல்லாத மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தின் பலன்களை இழக்க நேரிடலாம்.
Monthly Pension: ரூ.1,000 மாத ஓய்வூதியம்
உத்தர பிரதேச மாநில ஓய்வூதியத் திட்டத்தின் மூலம், தகுதியுள்ள பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் கிடைக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கம் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி வருகிறது. 2017 முதல், இந்தத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2017-ல் 3.74 மில்லியன் பயனாளிகளாக இருந்த எண்ணிக்கை தற்போது 6.75 மில்லியன் பயனாளிகளாக உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க | பிஎப் கணக்கு முக்கிய தகவல்! தப்பான மெம்பர் ஐடியை நீக்க அலைய வேண்டாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









