)
Senior Citizens Latest Update: மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு நடத்தும் பல்வெறு திட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மிக முக்கியமானது. கடந்த ஆண்டு அரசாங்கம் அதன் முதன்மை சுகாதார காப்பீட்டுத் திட்டமான - ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவை (AB PM-JAY) 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைச் சேர்க்க விரிவுபடுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீட்டுத் திட்டத்தைப் பெறுகிறது.
இப்போது, மூத்த குடிமக்களையும் சேர்த்து, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.10 லட்சம் காப்பீட்டைப் பெறலாம். ஆனால் இதில் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது - கூடுதல் ரூ.5 லட்சம் காப்பீடு குடும்பத்தின் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு குடும்பம் கணவன், மனைவி அல்லது குழந்தைகளின் சிகிச்சைக்காக அதன் ரூ.5 லட்சம் வரம்பைப் பயன்படுத்தினால், அவர்களின் வயதான பெற்றோருக்கான கூடுதல் ரூ.5 லட்சத்தையும் அவர்களே பயன்படுத்த முடியாது. இந்த கவரேஜ் திறம்பட பிரிக்கப்பட்டுள்ளது - குடும்ப உறுப்ப்னர்களுக்கு (கணவன், மனைவி மற்றும் குழந்தைகள்) ரூ.5 லட்சம் மற்றும் 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம்.
முக்கியமாக, ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டத்தின் கீழ் குடும்ப எண்ணிக்கைக்கு எந்த வரம்பும் இல்லை. இது பல தலைமுறையினரைக் கொண்ட குடும்பங்களுக்கு இந்த திட்டத்தை மிகவும் பயனுள்ளதாக்குகிறது. இதில் வயதான உறுப்பினர்களும் அடங்குவர்.
- இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற குடும்பத்தின் பொருளாதார நிலை ஒரு காரணியாக கருதப்படாது. ஆதார் அட்டை மூலம் சரிபார்க்கப்பட்டபடி, பயனாளி 70 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்பதே ஒரே தகுதி அளவுகோல்.
- தகுதியுள்ள மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டைகளை பெற ஆதார் அடிப்படையிலான e-KYC கட்டாயமாகும்.
- மூத்த குடிமக்கள் ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டத்தில் சேர, ஆதார் மட்டுமே ஆவணமாக தேவைப்படும்.
- ஆதாரில் பிறந்த ஆண்டு மட்டும் பதிவு செய்யப்பட்டிருந்தால், பதிவு செய்யப்பட்ட பிறந்த ஆண்டைத் தொடர்ந்து வரும் ஆண்டின் ஜனவரி 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வ பிறந்த தேதியாகக் கருதப்படும்.
- பெற்றோர் இருவரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், PM-JAY மூத்த குடிமக்கள் திட்டத்தின் கீழ் அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பதிவு செய்ய வேண்டியதில்லை. 70 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய முதல் குடும்ப உறுப்பினர் சேர்ந்தவுடன், ஆயுஷ்மான் பாரத் பதிவு போர்ட்டலில் உள்ள “உறுப்பினரைச் சேர்” அம்சத்தைப் பயன்படுத்தி 70 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பிற தகுதியுள்ள உறுப்பினர்களைச் சேர்க்கலாம்.
- 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து தகுதியுள்ள மூத்த குடிமக்களும் திட்டத்தின் கீழ் ஒரு தனித்துவமான ஆயுஷ்மான் அட்டையைப் பெறுவார்கள்.
- 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எங்கள் பெற்றோருக்கு ஆயுஷ்மான் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆயுஷ்மான் பாரத் போர்டல் http://www.beneficiary.nha.gov.in அல்லது ஆயுஷ்மான் செயலி (கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது) மூலம் இதை செய்யலாம்.
- பயனாளிகள் சேர்க்கையின் முதல் நாளிலிருந்து சிகிச்சை பெறத் தொடங்கலாம். எந்தவொரு நோய் அல்லது நடைமுறைக்கும் காத்திருப்பு காலம் இல்லை, மேலும் காப்பீடு உடனடியாகத் தொடங்குகிறது.
- இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி பெறுவதற்கு வருமான வரம்பு இல்லை. வருமான அளவைப் பொருட்படுத்தாமல் 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எந்த இந்தியக் குடிமகனும் இதில் சேரலாம்.
- ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகை குடும்ப அடிப்படையில் வழங்கப்படுகிறது. இரண்டு தாத்தா பாட்டிகள் இருந்தால், இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படுவார்கள். ஆனால் ரூ.5 லட்சம் வருடாந்திர வரம்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக அவர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
- கூடுதல் ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகை 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மீதமுள்ள குடும்ப உறுப்பினர்கள் தற்போதுள்ள ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகையைத் தொடர்ந்து பெறுவார்கள்.
- தனியார் சுகாதார காப்பீட்டை வைத்திருந்தாலும் கூட, ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற முடியும்.
- பெற்றோர் ஏற்கனவே ESIC திட்டத்தின் கீழ் காப்பீடு பெற்றிருந்தாலும், PM-JAY திட்டத்தின் கீழ் பயனாளிகளாக முடியும்.
- அரசாங்க விதிகளின்படி, பிற அரசாங்க சுகாதாரத் திட்டங்களைப் பெறுபவர்கள் (CGHS போன்றவை) தங்கள் தற்போதைய சலுகைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெறுவதற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டும். இரட்டை சலுகைகளை ஒரே நேரத்தில் கோர முடியாது.
- பயனாளிகள் ஆயுஷ்மான் பாரத் PM-JAY-ஐத் தேர்ந்தெடுத்து, அவர்களின் தற்போதைய அரசாங்க சுகாதாரக் காப்பீட்டை ஒப்படைத்தால், பின்னர் அவர்கள் முந்தைய திட்டத்திற்குத் திரும்ப முடியாது. இது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய, மாற்ற முடியாத தேர்வாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ