Ayushman Vay Vandana Card: நீங்கள் 70 வயதுக்கு மேற்பட்டவரா? உங்கள் வருமானம் ஆயுஷ்மான் அட்டையை உருவாக்குவதற்கான அளவுகோல்களை விட அதிகமாக உள்ளதா? இதனால் கவலை கொண்டுள்ளீர்களா? கவலை வேண்டாம்! கடந்த வருடமே மத்திய அரசு இந்தப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைத்துவிட்டது. ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PMJAY) திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டைகள் உருவாக்கப்படுகின்றன.
ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை
இந்த அட்டை மூலம், 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நாட்டு மக்கள் அனைவரும் எந்த மருத்துவமனையிலும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம். அவர்களின் ஆண்டு வருமானம் எவ்வளவாக இருந்தாலும், அவர் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், சொந்தமாகத் தொழில் நடத்தி வந்தாலும், இவை எதுவும் இந்த திட்டதில் அளவுகோல்களாக பார்க்கப்படாது. 70 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையைப் பெறலாம்.
Ayushman Bharat Scheme: ஆயுஷ்மான் பாரத் திட்டம்
இது மட்டுமல்லாமல், குடும்பத்தில் ஏற்கனவே ஆயுஷ்மான் அட்டை இருந்து, குடும்பத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர் இருந்தால், அவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள கூடுதல் சிகிச்சை கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் (70+ வயதுடையவர்களுக்கு PMJAY) கீழ் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையை எவ்வாறு உருவாக்குவது என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.
ஆயுஷ்மான் வய வந்தனா கார்டு என்றால் என்ன?
70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு நல்ல மருத்துவ வசதிகளை வழங்கும் நோக்கத்துடன், ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் கீழ், ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை 2024 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. இந்த அட்டையை உருவாக்குவதன் நன்மை என்னவென்றால், ஆண்டு வருமானத்தைப் பொருட்படுத்தாமல், பயனாளி நாடு முழுவதும் உள்ள எந்த மருத்துவமனையிலும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சையைப் பெறலாம். நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட 6 கோடிக்கும் மேற்பட்ட முதியவர்கள் உள்ளனதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையின் நன்மைகள் என்ன?
- 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை.
- 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையைப் பெறலாம்.
- அட்டை பெறுவதற்கு ஆண்டு வருமானம் குறித்து எந்த நிபந்தனையும் இல்லை.
- ஆயுஷ்மான் அட்டையின் நன்மைகளுக்கு கூடுதலாக, மூத்த குடிமக்கள் வய வந்தனா அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை டாப் அப் பெறுவார்கள்.
ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை பெறுவதற்கான தகுதி என்ன?
- 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நாட்டின் அனைத்து மக்களும் இதை பெறலாம்.
- ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதியின்படி இந்த வயது தீர்மானிக்கப்படும்.
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் அட்டை பெற தேவையான ஆவணங்கள்
இந்தத் திட்டத்தில் சேர அதிக ஆவணங்கள் தேவையில்லை. உங்களிடம் ஆதார் அட்டை மட்டும் இருந்தால் போதும். அதில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறந்த தேதியைப் பொறுத்து உங்கள் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை உருவாக்கப்படுமா இல்லையா என்பது முடிவு செய்யப்படும். உங்கள் வயது 70 வயது அல்லது அதற்கு மேல் இருந்தால், உங்கள் அட்டை உருவாக்கப்படும். இது தவிர, ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் தேவைப்படும்.
ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையை எப்படி உருவாக்குவது?
ஆயுஷ்மான் வய வந்தனா அட்டைக்கான பதிவு மிகவும் எளிதானது. இதற்கு பயனாளிகள் போர்டல் மற்றும் மொபைல் செயலி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









