வங்கி FD Vs போஸ்ட் ஆபீஸ் திட்டம்... வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் முதலீடு எது?

Bank FD vs POTD: அஞ்சல் அலுவலக நேர வைப்புத்தொகை மற்றும் வங்கிகளில் செய்யப்படும் நிலையான வைப்புத்தொகை இறண்டில் எதில் அதிக வருமானம் கிடைக்கும் என்பதை ஒப்பீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 5, 2025, 07:10 PM IST
  • தபால் அலுவலக முதலீடுகளுக்கான வட்டி விகிதங்கள் வங்கிகளை விட அதிகமாக உள்ளன.
  • ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்பு.
  • வங்கிகளில் செய்யப்படும் நிலையான வைப்புத்தொகைகளில் கிடைக்கும் நன்மைகள்.
வங்கி FD  Vs  போஸ்ட் ஆபீஸ் திட்டம்... வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் முதலீடு எது?

அஞ்சல் அலுவலக நேர வைப்புத்தொகை மற்றும் வங்கிகளில் செய்யப்படும் நிலையான வைப்புத்தொகை இரண்டில் எதில் அதிக வருமானம் கிடைக்கும் என்பதை ஒப்பீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்புக்குப் பிறகு வங்கிகள் தங்கள் நிலையான வைப்புத்தொகை (Bank FD) வட்டி விகிதங்களைக் குறைத்திருந்தாலும், அஞ்சல் அலுவலக நேர வைப்புத்தொகைகள் (POTD) இன்னும் அதிக வட்டி விகிதங்களுடன் முதலீட்டாளர்களை ஈர்க்கின்றன. அரசாங்க உத்தரவாதம், சிறந்த வருமானம் மற்றும் கிராமப்புற இந்தியாவைச் சென்றடைதல் காரணமாக, போஸ்ட் ஆபீஸ் முதலீட்டு திட்டங்கள் பாரம்பரிய வங்கி நிலையான வைப்புத்தொகைகளை விட சிறப்பாக செயல்படுகின்றன.

2025  ஜூலை முதல் செப்டம்பர் காலகட்டத்திற்கான, அஞ்சல் அலுவலக நேர வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்கள் 1 வருடத்திற்கு 6.90%, 2 ஆண்டுகளுக்கு 7.00%, 3 ஆண்டுகளுக்கு 7.10% மற்றும் 5 ஆண்டுகளுக்கு 7.50% என மாறாமல் அப்படியே தொடர்கின்றன. மறுபுறம், நாட்டின் முக்கிய பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளான SBI, HDFC, ICICI, Kotak Mahindra ஆகியவை அதே காலத்திற்கு 6.05% முதல் 6.60% வரை வட்டி செலுத்துகின்றன. குறிப்பாக 5 ஆண்டுகள் கால அவகாசம் கொண்ட முதலீடுகளுக்கு, அஞ்சல் அலுவலக விருப்பம் மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளது.

அரசின் உத்திரவாதம் vs வங்கி காப்பீடு

அஞ்சல் அலுவலக நேர வைப்புத்தொகைகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்தின் பாதுகாப்பை இந்திய அரசு உத்தரவாதம் செய்கிறது. இது மிகவும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக அமைகிறது. இதற்கு நேர்மாறாக, வங்கி நிலையான வைப்புத்தொகைகளில் ரூ.5 லட்சம் வரையிலான வைப்புத்தொகைக்கும் மட்டுமே காப்பீடு (DICGC) கிடைக்கிறது. இந்த வேறுபாடு பெரிய முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கலாம்.

வங்கி நிலையான வைப்புத்தொகைகளில் கிடைக்கும் நன்மைகள்

இருப்பினும், வங்கிகளின் நிலையான வைப்புத்தொகை திட்டங்கள் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன - 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம், மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் வட்டி செலுத்தும் விருப்பம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி போன்ற 60 வயதுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் இந்த வசதிகள் தபால் அலுவலக வைப்புத்தொகைகளில் கிடைக்காது, இதன் காரணமாக சில முதலீட்டாளர்கள் வங்கி முதலீட்டை விரும்பலாம்.

வரி விலக்கு மற்றும் கிராமப்புற அணுகல்

வரி சேமிப்பு வங்கி FD முதலீடுகளைப் போலவே, வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் தபால் அலுவலக 5 ஆண்டு FD முதலீட்டிற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், வட்டி வருமானம் இரண்டு வகை முதலீடுகளுக்கும் வரி விதிக்கப்படுகிறது. மேலும், தபால் அலுவலகத்தின் அணுகல் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்கள், தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்கள் என அனைத்து இடங்களிலும் இருப்பதால் அதில் முதலீடு செய்வது பலருக்கு எளிதாக உள்ளது.

வங்கி மற்றும் தபால் அலுவலகம் :  சிறந்த முதலீடு எது?

பாதுகாப்பை விரும்புவோருக்கு: தபால் அலுவலக FD சிறந்தது, ஏனெனில் அரசாங்க உத்தரவாதம் உள்ளது.

அதிக வட்டியை விரும்புவோருக்கு: தற்போது, ​​தபால் அலுவலக விகிதங்கள் வங்கிகளை விட அதிகமாக உள்ளன.

நெகிழ்வுத்தன்மை மற்றும் மூத்த குடிமக்கள் சலுகைகளை விரும்புவோருக்கு: வங்கி FD ஒரு சிறந்த வழி.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: குஷியில் லெவல் 1, லெவல் 2 ஊழியர்கள்.... அதிரடி ஊதிய உயர்வு, கணக்கீடு இதோ

மேலும் படிக்க | SIP: மாதம் ரூ.500 மூதலீடு... ரூ.46 லட்சமாக பெருகும்... சாத்தியமாக்கும் மியூச்சுவல் ஃபண்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News