Bank Holidays in April: வங்கித் தொடர்பான பணிகளுக்காக அடிக்கடி வங்கி கிளைக்கு செல்லும் நபராக நீங்கள் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஆம், இன்னும் 10 நாட்களில் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதனிடையே ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படும், எந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறையாக இருக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் போலவே இம்முறையும் ஏப்ரல் மாதம் தொடங்கும் முன் வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) வெளியிட்டுள்ளது. மார்ச் மாதத்தைப் போலவே, ஏப்ரல் மாதத்திலும் அதிக விடுமுறைகள் உள்ளன. அந்த வகையில் உங்களுக்கு வங்கிக்கு செல்ல வேண்டிய முக்கிய பணிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக ஆர்பிஐ (RBI) வெளியிட்டுள்ள ஏப்ரல் மாத வங்கி விடுமுறை பட்டியலை ஒருமுறை சரிப்பார்க்கவும்.
எத்தனை நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்?
ஏப்ரல் 1, 2025: சர்ஹுல், ஒடிசா தினம், இதுல் பித்ர் (ஜார்கண்ட், ஒடிசா, நாடு முழுவதும்)
ஏப்ரல் 5, 2025: பாபு ஜக்ஜீவன் ராம் ஜெயந்தி (ஆந்திரா, தெலுங்கானா)
ஏப்ரல் 6, 2025: ராம நவமி (நாடு முழுவதும்)
ஏப்ரல் 10, 2025: மகாவீர் ஜெயந்தி (நாடு முழுவதும்)
ஏப்ரல் 13, 2025: வைசாகி, மகா விஷுபா சங்கராந்தி (பஞ்சாப், ஹரியானா, ஒடிசா)
ஏப்ரல் 14, 2025: தமிழ் புத்தாண்டு, விஷு, போஹாக் பிஹு (தமிழ்நாடு, கேரளா, அசாம்)
ஏப்ரல் 18, 2025: புனித வெள்ளி (நாடு முழுவதும்)
ஏப்ரல் 21, 2025: கரியா பூஜை (திரிபுரா)
ஏப்ரல் 30, 2025: பசவ ஜெயந்தி (கர்நாடகா)
ஏப்ரலில் அமலுக்கு வரும் புதிய விதி:
இதனிடையே வருகிறது ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கி திறந்திருக்கும். மற்ற நாட்களில் வங்கி மூடப்படும். முன்னதாக இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறையை தவிர்த்து வாரத்தில் 6 வங்கிகள் செயல்பட்டு வந்த நிலையில் இனி வரும் மாதம் முதல் மொத்தமாகவே ஐந்து நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல், நாடு முழுவதும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் குறிப்பிடப்பட்டுள்ள விடுமுறை நாட்களைத் தவிர, சில மாநிலங்களில் கூடுதல் விடுமுறைகளும் அளிக்கப்படுகின்றன. உங்கள் மாநில வங்கி விடுமுறை குறித்த துல்லியமான தகவலுக்கு நீங்கள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தையும் பார்வையிடலாம்.
வங்கிகள் மூடப்பட்டிருக்கும் காலத்தில் வங்கி பணிகளை எப்படி முடிப்பது?
வங்கி தொடர்பான பெரும்பாலான பணிகளை ஆன்லைனிலேயே செய்ய முடியும். இதை ரிசர்வ் வங்கியும் ஊக்குவிக்கிறது. இந்த பணிகளை முடிக்க நீங்கள் வங்கிக் கிளைக்கு செல்ல தேவையில்லை. இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் (Net Banking), மொபைல் பேங்கிங் (Mobile Banking) அல்லது வாட்ஸ்அப் வங்கி சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









