Bank Holidays in April: வங்கித் தொடர்பான பணிகளுக்காக அடிக்கடி வங்கி கிளைக்கு செல்லும் நபராக நீங்கள் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது. ஏனெனில் மார்ச் மாதம் இன்றுடன் நிறைவுபெற உள்ள நிலையில், ஏப்ரல் மாத வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. பொதுவாக இந்தியாவில் வங்கி விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். இதற்கான முக்கிய காரணம் ஒவ்வொரு மாநிலத்திற்குத் தனிப்பட்ட விழாக்கள், கலாச்சாரம் மற்றும் அங்கு கொண்டாடப்படும் பண்டிகைகள். இதனால் தான் பிராந்திய அடிப்படையில் இந்த விடுமுறை மாறுகிறது. இதனிடையே ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படும், எந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறையாக இருக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை இங்கே காணலாம்.
ஒவ்வொரு மாதமும் போலவே இம்முறையும் ஏப்ரல் மாதம் தொடங்கும் முன் வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) வெளியிட்டுள்ளது. மார்ச் மாதத்தைப் போலவே, ஏப்ரல் மாதத்திலும் அதிக விடுமுறைகள் உள்ளன. அந்த வகையில் ஏப்ரல் மாதம் மொத்தம் 15 நாட்கள் விடுமுறையாக இருக்கும். எனவே உங்களுக்கு வங்கிக்கு செல்ல வேண்டிய முக்கிய பணிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக ஆர்பிஐ (RBI) வெளியிட்டுள்ள ஏப்ரல் மாத வங்கி விடுமுறை பட்டியலை ஒருமுறை சரிப்பார்க்கவும்.
பண்டிகைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்களுக்குக் கூடுதலாக, இந்த மாதத்தில் மொத்தம் இரண்டு சனிக்கிழமைகள் மற்றும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறையாக இருக்கும்.
எத்தனை நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்?
ஏப்ரல் 1, 2025: சர்ஹுல், ஒடிசா தினம், இதுல் பித்ர் (ஜார்கண்ட், ஒடிசா, நாடு முழுவதும்)
ஏப்ரல் 5, 2025: பாபு ஜக்ஜீவன் ராம் ஜெயந்தி (ஆந்திரா, தெலுங்கானா)
ஏப்ரல் 6, 2025: ஞாயிற்றுக்கிழமை - ராம நவமி (நாடு முழுவதும்)
ஏப்ரல் 10, 2025: மகாவீர் ஜெயந்தி (நாடு முழுவதும்)
ஏப்ரல் 12 - இரண்டாவது சனிக்கிழமை - இந்தியா முழுவதும்
ஏப்ரல் 13, 2025: வைசாகி, மகா விஷுபா சங்கராந்தி (பஞ்சாப், ஹரியானா, ஒடிசா)
ஏப்ரல் 14, 2025: தமிழ் புத்தாண்டு, விஷு, (தமிழ்நாடு, கேரளா )
ஏப்ரல் 15 - வங்காள புத்தாண்டு, போக் பிஹு
ஏப்ரல் 18, 2025: புனித வெள்ளி (நாடு முழுவதும்)
ஏப்ரல் 21, 2025: கரியா பூஜை (திரிபுரா)
ஏப்ரல் 26 - நான்காவது சனிக்கிழமை - இந்தியா முழுவதும்
ஏப்ரல் 27, 2025: ஞாயிற்றுக்கிழமை - இந்தியா முழுவதும்
ஏப்ரல் 29 - பரசுராம ஜெயந்தி - இமாச்சலப் பிரதேசம்
ஏப்ரல் 30, 2025: பசவ ஜெயந்தி (கர்நாடகா)
வங்கிகள் மூடப்பட்டிருக்கும் காலத்தில் வங்கி பணிகளை எப்படி முடிப்பது?
வங்கி தொடர்பான பெரும்பாலான பணிகளை ஆன்லைனிலேயே செய்ய முடியும். இதை ரிசர்வ் வங்கியும் ஊக்குவிக்கிறது. இந்த பணிகளை முடிக்க நீங்கள் வங்கிக் கிளைக்கு செல்ல தேவையில்லை. இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் (Net Banking), மொபைல் பேங்கிங் (Mobile Banking) அல்லது வாட்ஸ்அப் வங்கி சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









