)
Bank Strike On January 27th 2026 : ஐந்து நாள் வேலை நாட்களை வலியுறுத்தும் விதமாக, வங்கியாளர்கள் சங்கங்கள் வரும் ஜனவரி 27ஆம் தேதியன்று நாடுதழுவிய வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு விடுத்துள்ளன. இந்திய அரசாங்கம், தங்களது கோரிக்கைகளில் ஒன்றாக குறிப்பிட்டிருக்கும் விஷயத்திறு நடவடிக்கை எடுக்காததற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC) இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது.
2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், IBA - இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் தொழிற்க்சங்கங்களுக்கு இடையேயான ஊடிய திருத்த ஒப்பந்தத்தின் போது, இது ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டதாக தொழிற்சங்கம் தெரிவித்திருக்கிறது.
AIBOC விமர்சனம்:
AIBOC - All India Bank Officers' Confederation தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்காததற்கு, கண்டனம் தெரிவித்திருக்கிறது. LIC, GIC மற்றும் RBI போன்ற பிற நிறுவனங்கள் ஏற்கனவே 5 நாட்கள் வேலை வாரத்தை பின்பற்றி வருகின்றன என்பது சுட்டிக்காட்டப்பட்டு, மத்திய மற்றும் மாநில ஆரசு அலுவலகங்களும் சனிக்கிழமையில் வேலை செய்வதில்லை என்பதை குறிப்பிட்டுள்ளது. மேலும், வங்கிகள் ஏன் இப்படி செய்யக்கூடாது என்பதற்கு ஏன் எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்பது தொழிற்சங்கத்தின் வாதமாக உள்ளது.
வங்கி சேவைகள் பாதிப்பு?
ஜனவரி 27ஆம் தேதி, வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில், வங்கி சேவைகள் பாதிக்கக்கூடும் என்று கூறப்படூகிறது. இதில், கிளை செயல்பாடுகள், காசோலை பயன்பாடு, பண பரிவர்த்தனைகள் மற்றும் வாடிக்கையாலர்கள் சேவைகள் ஆகிய அனைத்தும் அடங்கும். ஆன்லை சேவைகள்,ATM சேவைகள் உள்ளிட்டவை சில இடையூறுகளுடன் தொடரலாம் என கூறப்படுகிறது.
வங்கி ஊழியர்களின் இந்த 5 நாள் வேலை நாட்கள் திட்டம் குறித்த ஒப்புதலில், அரசு 2 வருடங்களுக்கு முன்னரே கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது இன்னும் செயல்பாடுக்கு கொண்டுவராததற்கான காரணம் என்ன என்பது வங்கி ஊழியர்களின் கேள்வியாக இருக்கிறது. இதை முன்னிறுத்திதான், வேலை நிறுத்தமானது, ஜனவரி 27ஆம் தேதி நடக்கிறது.
கோரிக்கைகள் என்னென்ன?
வங்கி ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கையானது என்னவென்றால், திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்பதுதான். அனைத்து சனிக்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும், வங்கிகள் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மட்டுமே மூடப்படுவதாகவும், பிற இரண்டு சனிக்கிழமைகளும் வேலை நாளாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் வசதிகளில், எந்த சமரசமும் செய்துகொள்ள விரும்பவில்லை என்பதை அந்த சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த 5 நாட்கள் வேலை செய்வது அமல்படுத்தப்பட்டால், தினமும் கூடுதலாக 40 நிமிடங்கள் வேலை செய்ய தயார் என்பது அச்சங்கத்தின் கூற்றாக இருக்கிறது. இது மொத்த வேலை நேரத்தை குறைக்காது என்றும், வங்கி அமைப்பை இது மேலும் மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் ஆதரவு:
வங்கி ஊழியர்களின் 5 நாட்கள் வேலைக்கான பிரச்சாரங்கள், சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்படுகின்றன. X உள்ளிட்ட சில வலைதளங்க்ளில், இதற்கான டிஜிட்டல் போராட்டமும் வலுக்கிறது. இதற்கு, பயன்பாட்டாளர்கள் பலர் ஆதரவும் கொடுத்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ