Digital Arrest Latest News: தொழில்நுட்ப வளர்ச்சி வளர வளர மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. சாலையோர கடைகள் முதல் வணிக வளாகங்கள் வரை அனைத்திலுமே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனையில் மோசடி சம்பவங்கள் நடந்து வருகிறது.
டிஜிட்டல் கைது
வயதானவர்கள், பெண்கள் என பலரும் இந்த டிஜிட்டல் மோசடியில் சிக்கி வருகின்றனர். இதனால், பலரும் தங்களது பணத்தை இழந்து வருவதோடு, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. சமீப காலமாகவே, டிஜிட்டல் கைது மோசடி சம்பவங்கள் நடந்து வருகிறது. அதிக அளவில் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது, நாங்கள் சிபிஐ அதிகாரிகள் பேசுகிறோம், உங்களை கைது செய்கிறோம் என்றெல்லாம் கூறி, அப்பாவி மக்களை மிரட்டில் பணத்தை பறித்து வருகின்றனர்.
இந்த டிஜிட்டல் கைது மூலமாக, அப்பாவி மக்களிடம் வீடியோ கால், ஆடியோ காலில் பேசி பணத்தை சுரண்டுகின்றனர். இந்த நிலையில், அப்படியொரு சம்பவம் தான், பெங்களூருவில் அரங்கேறி உள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் ரூ.32 கோடி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.32 கோடியை இழந்த பெங்களூரு பெண்
பெங்களூருவைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவர் டிஜட்டல் கைது மோசடியில் ரூ.32 கோடியை இழந்துள்ளார். சைபர் கிரைம் துறை, மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்பவர்கள் அவரை ஒரு மாத காலம் டிஜிட்டல் முறையில் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நவம்பர் 14ஆம் தேதி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதல் தகவல் அறிக்கையின்படி, செப்டம்பர் 15, 2024 அன்று பாதிக்கப்பட்டவருக்கு DHL-ல் இருந்து வருவதாகக் கூறிக்கொள்ளும் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. மும்பையின் அந்தேரியில் இருந்து தனது பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட ஒரு பார்சலில் நான்கு பாஸ்போர்ட்கள், மூன்று கிரெடிட் கார்டுகள் மற்றும் போதைப் பொருட்கள் இருப்பதாக அந்த பெண்ணுக்கு தகவல் வந்தது.
அப்போது அந்த பெண், தான் மும்பைக்கு பயணம் செய்யவில்லை என்று அவர் அவர்களிடம் கூறினார். இருப்பினும், அதிகாரி போன்று பேசிய அவர், உங்களது அடையாளம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த விவகாரம் சைபர் கிரைம் வழக்காக மாற்றப்படுவதாகவும் கூறினார். அவள் பதிலளிக்கும் முன்பே, அந்த அழைப்பு சிபிஐ அதிகாரிகள் என்று காட்டிக் கொண்ட நபர்களுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் அந்த பெண்ணை கைது செய்வதாக மிரட்டியதாகவும், அந்த பெண்ணுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், உள்ளூர் காவல்துறையை அணுக வேண்டாம் என்றும் எச்சரித்ததாகவும், அவளுடைய அடையாளத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றவாளிகள் அவளுடைய வீட்டைக் கண்காணித்து வருவதாகவும் கூறினர்.
6 மாதம் நடந்த மோசடி
இதனை நம்பிய அந்த பெண்ணும், மோசடி கும்பலுக்கு ஏற்றவாறு நம்பினார். இதனை அடுத்து, அந்த பெண்ணிடம் இரண்டு ஸ்கைப் ஐடிகளை உருவாக்குமாறு கூறினர். அதன் மூலம் மோஹித் ஹண்டா என்று தன்னை அடையாளம் கண்டுகொண்ட ஒரு நபர், அந்த பெண்ணிடம் வீட்டுக் காவலில் இருப்பதாகக் கூறி, அவரை கேமரா மூலம் அவளைத் தொடர்ந்து கண்காணித்தார். தொடர்ந்து, வீடியோக கால் மூலம் அந்த பெண்ணை பல மோசடிகள் கும்பல் அணுகி மிரட்டி இருக்கிறது.
செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 22, 2024 வரை, அவர் தனது அனைத்து வங்கி விவரங்களையும் ஒப்படைத்தார். பின்னர், அவரது சொத்துக்களில் 90 சதவீதத்தை அனுமதிக்காக டெபாசிட் செய்யுமாறு கோரினர். அவர் அழுத்தத்தின் பேரில் கூடுதலாக ரூ.2 கோடியை ஜாமீனாக டெபாசிட் செய்யுமாறும், அதைத் தொடர்ந்து வரிகள் என பெயரிடப்பட்ட கூடுதல் தொகைகள் டெபாசிட் செய்யுமாறும் கூறப்பட்டது.
மோசடி செய்பவர்கள் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை பணத்தைக் கேட்டுக்கொண்டே இருந்தனர். டெபாசிட் செய்யப்பட்ட தொகைகள் பிப்ரவரி மாதத்திற்குள் திருப்பித் தரப்படும் என்று பலமுறை உறுதியளித்தனர். பல மாதங்களுக்கு பிறகு, மார்ச் 26, 2025 அன்று அனைத்து தகவல்தொடர்புகளும் திடீரென நிறுத்தப்பட்டன. மொத்தத்தில், பாதிக்கப்பட்ட பெண் ரூ.31.83 கோடி மதிப்புள்ள 187 பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார்.
அதாவது, கடந்த 6 மாதத்தில் அவர் ரூ.31.83 கோடியை இழந்துள்ளார். பணம் திரும்ப வராததால், தான் சோசடியில் சிக்கியதாக அந்த பெண்ணுக்கு தெரிந்தது. இதனை அடுத்து, ஜூன் 8ஆம் தேதி அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.
மேலும் படிக்க: திருமண கோலத்திலே இப்படி ஆகிடுச்சே! கொலை செய்யப்பட்ட மணப்பெண் - மணமகன் செய்த ஷாக்
மேலும் படிக்க: நடுங்க வைத்த சம்பவம்.. துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலை! காதலன் செய்த கொடூரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









