Berojgari Bhatta Yojana Scheme For Youth: நாட்டில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்கள், மூத்த குடிமக்கள், இளைஞர்கள் என பலருக்காக பல திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. குறிப்பாக நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வரும் இளைஞர்களின் நலனில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதில் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவும் அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் உதவித் தொகை அளித்து வருகிறது. அதுதான், பெரோஜ்கரி பட்டா யோஜனா திட்டம். இந்த திட்டம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500 அரசு வழங்குகிறது.
Berojgari Bhatta Yojana திட்டம் என்றால் என்ன?
பெரோஜ்கரி பட்டா யோஜனா திட்டத்தின் முக்கிய குறிக்கோள், இளைஞர்களுக்கு நிதி ரீதியாக உதவி வழங்குவது. அவர்களைத் தன்னிறைவு பெறச் செய்வது மற்றும் அவர்களின் நிதி நிலைமையை மேம்படுத்துவது ஆகும். மாதம் ரூ,2,500 உதவித் தொகை மூலம் அவர்கள் அரசு வேலைக்கு தயார்ப்படுத்தவும், வேலை கிடைக்கும் வரை பாதுகாப்பாக இருக்க உதவுகிறது. படிப்பை முடித்துவிட்டு வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு இந்தப் உதவித் தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தொகை இளைஞர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
Berojgari Bhatta Yojana திட்டத்தின் தகுதிகள்
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது 35 வயதிற்குள் இருக்க வேண்டும். வேலையில்லாமல் இருக்க வேண்டும். மேலும், தேவையான அனைத்து சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும். நீங்கள் என்ன படித்து முடித்தவர்கள் என்பதற்கான சான்றுகளையும் வைத்திருக்க வேண்டும்
Berojgari Bhatta Yojana திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க, உங்கள் மாநில அல்லது மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும். வேலையின்மை உதவித்தொகை திட்ட படிவத்தைக் கண்டுபிடித்து, அதை சரியாக நிரப்பி தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், அருகில் உள்ள அரசு சேவை யைமத்திலும் இந்த திட்டம் தொடர்பாக கேட்டறிந்து, தேவையான நகலை சமர்பித்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்கப்பட்ட நிலையில், உங்களது வங்கி கணக்கிற்கு மாதம் ரூ.2,500 வரவு வைக்கப்படுகிறது.
Berojgari Bhatta Yojana திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், இருப்பிட சான்றிதழ், சாதிச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), வேலையின்மை சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றை வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும்போது, சரியான தகவலை வழங்க வேண்டும். தவறான தகவலை உள்ளீடும்போது, உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
வயது மற்றும் பிற நிபந்தனைகளுக்கான விதிகளைப் பின்பற்றவும். உள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து வேலையின்மை சான்றிதழைப் பெற்றுக் கொண்டு, இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எனவே, வேலை இல்லாத இளைஞர்கள் இந்த திட்டத்தில் உடனடியாக சேர்ந்து, மாதம் ரூ.2,500 உதவித் தொகையை பெற்றுக் கொள்ளுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: CGHS அட்டை இருக்கும் அரசு ஊழியர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனடைய முடியுமா?
மேலும் படிக்க: இனி ரூ.500 மிச்சம்.. தட்கல் டிக்கெட் முன்பதிவில் மாறிய ரூல்ஸ்.. ரயில்வே அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









