)
சென்னை, மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற பெரிய இந்திய நகரங்கள் வேலை மற்றும் வளர்ச்சிக்கான ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன. ஆனால் செலவும் அதிகம். வாடகைகள் மிக அதிகமாக உள்ளன. அதோடு, போக்குவர்த்து நெரிசல் தினசரி நீண்ட பயணங்கள் சோர்வை ஏற்படுத்துகின்றன. மேலும் வாழ்க்கை முறை அழுத்தங்கள் செலவுகள் அதிகம் செய்ய உங்களை தூங்குகின்றன. நீங்கள் 20-25 வயதுடையவராக இருந்தாலும் சரி, ஃப்ரீலான்ஸராக இருந்தாலும் சரி அல்லது இளம் குழந்தைகளைக் கொண்ட இளம் பெற்றோராக இருந்தாலும் சரி, நீங்கள் வசிக்கும் நகரம் உங்கள் சேமிப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை நேரடியாக பாதிக்கிறது.
நல்ல சாலைகள், சுகாதார வசதிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் துடிப்பான சமூக வாழ்க்கையை குறைந்த அளவிலான செலவில் சிறந்த வாழ்க்கையைப் பெறுவது சாத்தியமா? பதில் ஆம், அது முற்றிலும் சாத்தியம். இந்தியாவில் குறைந்த செலவில் சிறந்த வாழ்க்கையை வாழக்கூடிய பல நகரங்கள் மற்றும் பகுதிகள் உள்ளன. இங்கு வாழ்வதன் மூலம், உங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை செலவுகளில் அல்லாமல், சேமிப்பு மற்றும் வளர்ச்சியில் முதலீடு செய்யலாம்.
"பட்ஜெட்டில் தரமான வாழ்க்கை"
இந்தியாவின் சில சிறந்த நகரங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன், "பட்ஜெட்டில் தரமான வாழ்க்கை" என்றால் என்ன அர்த்தம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதிக செலவு செய்யாமல் சிறந்த வாழ்க்கை அனுபவம், வசதியாக வாழும் வாய்ப்பை அளிக்கும் ஒரு நகரத்தில் வாழ்வதைக் குறிக்கிறது -. இந்த சிந்தனை வீட்டு வாடகை, மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற தேவைகளுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையை எளிதாக்கும் பொது சேவைகள் மற்றும் வசதிகள் சிறப்பாக உள்ளதையும் குறிக்கிறது. அத்தகைய நகரம் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும், குறைந்த மாசுபாட்டுடனும் இருப்பது மிகவும் அவசியம் - ஏனென்றால் இவைதான் உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் நன்றாக உணர உதவும் விஷயங்கள்.
"பட்ஜெட்டில் தரமான வாழ்க்கை" என்பது குறைவாகச் செலவிடவும், அதிகமாகச் சேமிக்கவும், எதிர்காலத்தை சிறப்பாகத் திட்டமிடவும் உங்களை ஊக்குவிக்கும் ஒரு நகரம், இதன் மூலம் நீங்கள் வசதியாக வாழவும், உங்கள் நீண்டகால நிதி இலக்குகளை எளிதாக அடையவும் முடியும்.
பட்ஜெட்டில் நல்ல வாழ்க்கையை வாழ இந்தியாவில் சிறந்த நகரங்கள்
1. மைசூர், கர்நாடகா
மைசூர் பெரும்பாலும் கர்நாடகாவின் கலாச்சார தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. பசுமையான வீதிகள், பழைய பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் கலாச்சாரம் அமைதியானதாகவும் சிந்தனையுடனும் கூடிய வாழ்க்கையை தருகின்றன. அமைதியான சூழலில் கலாச்சாரம் நிறைந்த வாழ்க்கையை வாழ விரும்புவோருக்கு இந்த நகரம் சரியானது. இங்கு வாழ்க்கைச் செலவு மிகவும் குறைவு. உள்ளூரில் கிடைக்கும் புதிய உணவு மற்றும் மலிவு விலையில் பொதுப் போக்குவரத்து வசதிகள் அதிக சுமையை ஏற்படுத்துவதில்லை. பெரும்பாலான குடும்பங்கள் மாதத்திற்கு ₹30,000 முதல் ₹50,000 வரை வசதியாக வாழ முடியும்.
மைசூரில் நல்ல குடிமை வசதிகள், நல்ல பள்ளிகள் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளது. இங்குள்ள முக்கிய பொதுப் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள், மற்றும் இரு சக்கர வாகனங்கள் உள்ளூர் பயணத்தின் மிகவும் பொதுவான முறையாகும். மைசூரில் வசிக்கும் மக்களுக்கு தரமான காற்று மற்றும் தண்ணீர் மற்றும் இதர வசதிகள் கிடைப்பதால் ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை முறைக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
2. புனே, மகாராஷ்டிரா
புனே ஒரு பல்கலைக்கழக நகரம் என்று அறியப்பட்டது. அது 'கிழக்கின் ஆக்ஸ்போர்டு' என்றும் அழைக்கப்படுகிறது. புனேவின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், எல்லா வயது மற்றும் பிரிவினருக்கு ஏற்ற ஏதோ ஒரு அம்சம் உள்ளது. ஒரு குடும்பம் இங்கு மாதத்திற்கு ரூ.35,000 முதல் ரூ.55,000 வரை ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடியும். சிறப்பான வானிலை மற்றும் காற்றின் தரமும் மும்பையை விட சிறந்ததாகக் கருதப்படுகிறது.
3. கோயம்புத்தூர், தமிழ்நாடு
பெரும்பாலும் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்று அழைக்கப்படும் இந்த நகரம், தொழில்துறை மற்றும் சாதாரண வாழ்க்கையின் சரியான கலவையாகும். தமிழ்நாட்டின் சுத்தமான மற்றும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூர் அதன் இனிமையான காலநிலை மற்றும் பசுமைக்கும் பெயர் பெற்றது. ஒரு சிறிய குடும்பம் மாதத்திற்கு ரூ.27,000 முதல் ரூ.37,000 வரை வருமானம் இருந்தாலே, இங்கு வசதியாக வாழலாம்.
நகரத்தில் நம்பகமான பொது சேவைகள், நல்ல பள்ளிகள் மற்றும் குறைவான போக்குவரத்து நெரிசல் என கோயம்புத்தூர் மாற்று சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களுக்கும் பெயர் பெற்றது. கோயம்புத்தூர் குறைந்த பட்ஜெட்டில் நகர்ப்புற வாழ்க்கைக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
4. புவனேஸ்வர், ஒடிசா
புவனேஸ்வர் ஒரு ஸ்மார்ட் நகரமாக மாறுவதை நோக்கி வேகமாக முன்னேறியுள்ளது, ஆனால் அது இன்னும் அதன் கலாச்சார மற்றும் மத அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு மற்றும் நல்ல சாலை இணைப்பு போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, குறைந்த செலவில் நல்ல தரமான வாழ்க்கையை வழங்குகிறது. ஒரு பொதுவான குடும்பம் மாதத்திற்கு ₹28,000 முதல் ₹40,000 வரை பட்ஜெட்டில் இங்கு வசதியாக வாழ முடியும்.
புவனேஸ்வர் ஒரு பாதுகாப்பான, சுத்தமான மற்றும் இனிமையான நகரம், உழைக்கும் மக்கள் மற்றும் குடும்பங்கள் இருவருக்கும் ஏற்றது. பொது போக்குவரத்து படிப்படியாக மேம்பட்டு வருகிறது, மேலும் அன்றாடப் பொருட்கள் நியாயமான விலையில் எளிதாகக் கிடைக்கின்றன.
5. இந்தூர், மத்தியப் பிரதேசம்
இந்தூர் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக "இந்தியாவின் தூய்மையான நகரம்" என்ற பெருமையை பெற்று வருகிறது. அதற்குப் பின்னால் ஒரு உறுதியான காரணம் உள்ளது. இது ஒரு துடிப்பான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் வணிக நகரமாகும், இங்கு நீங்கள் ஒரு வசதியான வாழ்க்கை முறையை அனுபவிக்க முடியும். ஒரு சாதாரண நடுத்தர குடும்பம் மாதத்திற்கு ₹ 30,000 முதல் ₹ 45,000 வரை பட்ஜெட்டில் இங்கு மிகவும் நன்றாக வாழ முடியும். மளிகை, பள்ளி, போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மலிவு விலையில் இங்கு கிடைக்கின்றன.
இந்த நகரம் நவீன நகர்ப்புற திட்டமிடலுடன் முன்னேறி வருகிறது, சாலைகள் பொதுவாக சுத்தமாக உள்ளன, மேலும் அதன் உள்கட்டமைப்பு ஒவ்வொரு நாளும் சிறப்பாகி வருகிறது. இந்தூர் உணவு மற்றும் பானங்களுக்கும் மிகவும் பிரபலமானது. இந்த நகரம் மற்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது, மேலும் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளும் வேலைவாய்ப்பின் அடிப்படையில் வேகமாக வளர்ந்து வருகின்றன.
6. அகமதாபாத், குஜராத்
அகமதாபாத் ஒரு வலுவான தொழில்துறை அடித்தளம் மற்றும் நிறுவப்பட்ட வணிக கலாச்சாரத்துடன் கூடிய வளர்ந்த மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட நகரமாகும். இது குஜராத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும், இருப்பினும் இந்தியாவின் பெரும்பாலான அடுக்கு-1 பெருநகரங்களை விட இங்கு வாழ்வது மிகவும் மலிவானது. ஒரு குடும்பம் மாதத்திற்கு ₹40,000 முதல் ₹50,000 வரையிலான பட்ஜெட்டில் இங்கு வசதியாக வாழலாம்.
இந்த நகரம் நல்ல உள்கட்டமைப்பை வழங்குகிறது - சாலைகள் நல்ல நிலையில் உள்ளன, போதுமான அளவு சுத்தமான குடிநீர் விநியோகம் உள்ளது மற்றும் பொது போக்குவரத்தும் நன்றாக உள்ளது. சுகாதாரம், பள்ளிகள் கிடைப்பது, பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நகரம் சிறப்பாக செயல்படுகிறது.
சிறந்த மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ உங்களுக்கு பெரிய வருமானம் தேவையில்லை. மைசூர், கோயம்புத்தூர், இந்தூர் மற்றும் புனே போன்ற நகரங்கள் மலிவு விலையில் மட்டுமல்ல, அவை சுத்தமான காற்று, குறைந்த மன அழுத்தம் மற்றும் வலுவான சமூக உணர்வுடன், இந்த நகரங்கள் ஒரு நல்ல வாழ்க்கைத் தரம் கொண்டதாக இருக்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ