மூத்த குடிமக்களுக்கு பம்பர் லாபம் அளிக்கும் அரசின் 3 முத்தான திட்டங்கள்

Senior Citizens Schemes: மூத்த குடிமக்கள் எளிய வழியில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வருமானத்தை பெற உதவும் மூன்று முக்கிய அரசுத் திட்டங்கள் பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 11, 2025, 02:59 PM IST
  • மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள்.
  • ஓய்வூதியம் மற்றும் நிதி உதவி கிடைக்கும்.
  • ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வருமானத்தை பெற உதவும்.
மூத்த குடிமக்களுக்கு பம்பர் லாபம் அளிக்கும் அரசின் 3 முத்தான திட்டங்கள்

Government Schemes for Senior Citizens: அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. முதுமையில் இந்த தேவை இன்னும் அதிகரிக்கின்றது. மூத்த குடிமக்களின் நிதிப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்திய அரசு பல முக்கியமான திட்டங்களைத் தொடங்கி நடத்தி வருகின்றது. இந்தத் திட்டங்களின் முக்கிய நோக்கம், முதியவர்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்குவதும், ஓய்வுக்குப் பிந்தைய அவர்களின் வாழ்க்கையை வசதியாக மாற்றுவதும் ஆகும். 

Add Zee News as a Preferred Source

Senior Citizens: மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள்

மத்திய அரசால் நடத்தப்படும் இந்தத் திட்டங்கள் ஓய்வூதியம் மற்றும் நிதி உதவியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மூத்த குடிமக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றும் பல சலுகைகளையும் வழங்குகின்றன. மூத்த குடிமக்கள் எந்த முதலீடும் இல்லாமல் அல்லது குறைந்த முதலீட்டில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வருமானத்தை பெற உதவும் மூன்று முக்கிய அரசுத் திட்டங்கள் பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம். இந்தத் திட்டங்கள் நிதி உதவியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மூத்த குடிமக்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழவும் உதவுகின்றன.

Senior Citizens Savings Scheme: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பிரபலமான சேமிப்புத் திட்டமாகும், இது மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களையும் வரிச் சலுகைகளையும் வழங்குகிறது. ஓய்வுக்குப் பிறகு தங்கள் சேமிப்பைப் பாதுகாப்பான மற்றும் லாபகரமான முறையில் முதலீடு செய்ய விரும்புவோருக்காக இந்தத் திட்டம் சிறப்பான ஒரு திட்டமாக இருக்கும்.

SCSS: முக்கிய விவரங்கள்

- வயது தகுதி: 60 வயது அல்லது அதற்கு மேல்
- குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை: ரூ.1,000
- அதிகபட்ச முதலீட்டுத் தொகை: ரூ.30 லட்சம்
- வட்டி விகிதம் (2025): ஆண்டுக்கு 8.2%
- திட்ட காலம்: 5 ஆண்டுகள் (3 ஆண்டுகள் நீட்டுக்கலாம்)
- வரிச் சலுகைகள்: பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு
- ப்ரீ-மெச்யூர் வித்ராயல்: திட்டம் முடியும் முன் பணம் எடுக்கும் வசதி உள்ளது (சில நிபந்தனைகளுடன்)

SCSS இன் முக்கிய நன்மைகள்

- அதிக வட்டி விகிதங்கள்: வங்கி சேமிப்புக் கணக்குகள் மற்றும் பிற முதலீட்டு விருப்பங்களுடன் ஒப்பிடும்போது SCSS இல் முதலீடு செய்வது கணிசமாக அதிக வருமானத்தை வழங்குகிறது.
- வழக்கமான வருமானம்: மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கான வட்டி  மூத்த குடிமக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.
- அரசின் உத்தரவாதம்: இந்தத் திட்டம் இந்திய அரசாங்கத்தால் முழுமையாக ஆதரிக்கப்படுகிறது. ஆகையால், இதில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானது.
- வரிச் சலுகைகள்: SCSS-இல் செய்யப்படும் முதலீடுகள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-யின் கீழ் வரி விலக்குக்குத் தகுதியுடையவை.

SCSS -இல் எப்படி முதலீடு செய்வது

அனைத்து அரசு வங்கிகள் அல்லது தபால் நிலையங்கள் மூலமாக இதில் முதலீடு செய்யலாம். முதலில் SCSS கணக்கைத் திறப்பதற்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். அதன் பிறகு உங்கள் வயதுச் சான்று மற்றும் அடையாள அட்டையைச் சமர்ப்பிக்கவும். அதன் பின் முதலீட்டுத் தொகைக்கான காசோலை அல்லது டிமாண்ட் டிராஃப்டை சமர்ப்பிக்கவும்.

Pradhan Mantri Vaya Vandana Yojana: பிரதம மந்திரி வய வந்தனா திட்டம் (PMVVY)

பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்பது மூத்த குடிமக்களுக்கு வழக்கமான மற்றும் உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இந்தத் திட்டம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் (LIC) இயக்கப்படுகிறது. இது முதியவர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

PMVVY: முக்கிய விவரங்கள்

- வயது தகுதி: 60 வயது அல்லது அதற்கு மேல்
- குறைந்தபட்ச ஓய்வூதியம்: மாதத்திற்கு ரூ.1,000
- அதிகபட்ச ஓய்வூதியம்: மாதத்திற்கு ரூ.10,000
- உத்தரவாதமான வருமானம்: ஆண்டுக்கு 8%.
- திட்ட காலம்: 10 ஆண்டுகள்
- ஓய்வூதிய செலுத்தல்: மாதாந்திரம்/காலாண்டு/அரையாண்டு/ஆண்டுதோறும்
- கடன் வசதி: கடன் வசதி கிடைக்கும் (3 ஆண்டுகளுக்குப் பிறகு)

PMVVY -இன் முக்கிய அம்சங்கள்

- உத்தரவாதமான வருமானம்: இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது ஆண்டுக்கு 8% உத்தரவாதமான வருமானத்தை அளிக்கிறது.
- வழக்கமான ஓய்வூதியம்: உங்கள் வசதிக்கேற்ப மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர ஓய்வூதியத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.
- வரிச் சலுகைகள்: PMVVY-யில் செய்யப்படும் முதலீடுகள் வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்குக்குத் தகுதியுடையவை.
- கடன் வசதி: திட்டம் தொடங்கியதிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் முதலீட்டில் 75% வரை கடன் பெறலாம்.

PMVVY -இல் எப்படி முதலீடு செய்வது?

இந்த திட்டத்தில் முதலீடு செய்ய, முதலில் அருகிலுள்ள எல்.ஐ.சி அலுவலகம் அல்லது வங்கிக்குச் செல்லவும். பின் PMVVY விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வயதுச் சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும். முதலீட்டுத் தொகையை செலுத்துங்கள். 

Indira Gandhi National Old Age Pension Scheme: இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS)

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS), வறுமைக் கோட்டுக்குக் கீழே (BPL) வாழும் மூத்த குடிமக்களுக்கான ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இந்தத் திட்டம் வழக்கமான வருமான ஆதாரம் இல்லாத முதியவர்களுக்கு நிதி உதவி வழங்குகிறது.

IGNOAPS: விவரங்கள்

- வயது தகுதி: 60 வயது அல்லது அதற்கு மேல்
- இலக்கு பயனாளிகள்: வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களின் மூத்த குடிமக்கள்
- மாதாந்திர ஓய்வூதியம்: (60-79 வயது) ரூ.600
- மாதாந்திர ஓய்வூதியம்: (80+ வயது) ரூ.1000
- ஓய்வூதிய வழங்கல்: வங்கிக் கணக்கு அல்லது தபால் அலுவலகம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படும்
- விண்ணப்ப செயல்முறை: கிராம பஞ்சாயத்து/நகராட்சியில் விண்ணப்பம்

IGNOAPS: முக்கிய நன்மைகள்

- வழக்கமான வருமானம்: திட்டத்தின் கீழ், பயனாளிகள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள்.
- முதியோர் பாதுகாப்பு: இந்தத் திட்டம் ஏழை மூத்த குடிமக்களுக்கு அவர்களின் முதுமையில் நிதி உதவி வழங்குகிறது.
- எளிமையான விண்ணப்ப செயல்முறை: இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது.- 
- கூடுதல் நன்மைகள்: மத்திய அரசின் இந்தத் திட்டத்துடன் கூடுதலாக பல மாநில அரசுகளும் தாங்களாகவே ஓய்வூதியத் தொகையை அதிகரிக்கின்றன.

IGNOAPS -க்கு எப்படி விண்ணப்பிப்பது?

இதற்கு முதலில் அருகிலுள்ள கிராம பஞ்சாயத்து அல்லது நகராட்சி அலுவலகத்திற்கு செல்லவும். IGNOAPS விண்ணப்பப் படிவத்தைப் பெற்று நிரப்பவும். அதன் பிறகு, ஆதார் அட்டை, பிபிஎல் அட்டை மற்றும் வயதுச் சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு ஒப்புகை ரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.

மேலும் படிக்க | குஷியில் அரசு ஊழியர்கள், ஏப்ரல் 1 முதல் UPS: 50% ஓய்வூதியத்துடன் இதுவும் கிடைக்கும்

மேலும் படிக்க | உங்கள் NPS கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது... ஆன்லைனில் அறியும் எளிய வழிமுறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News