)
Gold ETF vs Digital Gold: இந்தியாவில் தங்கத்தில் அதிக பணத்தை முதலீடு செய்வது என்பது, சிறந்த முதலீட்டு ஆப்ஷனாக மட்டுமின்றி ஒரு சுபகாரியமாகவும் நினைக்கின்றனர். இதனால்தான், தீபாவளி, அட்சய திருதியை உள்ளிட்ட பண்டிகை தினங்களில் பொதுமக்கள் அதிகமானோர் தங்கத்தை வாங்க முந்துகிறார்கள் எனலாம்.
இன்றைய நவீன காலகட்டத்தில் தங்கத்தின் மீதான முதலீடுகளும் பல பரிமாணங்களை பெற்றுள்ளன. அதாவது இப்போதெல்லாம், தங்கத்தை கடைகளில் சென்று வாங்குவதை விட டிஜிட்டல் கோல்ட் மற்றும் கோல்ட் ETF போன்றவையும் சந்தையில் கிடைக்கின்றன. எப்படி தங்கத்தை நகையாகவோ, தங்க நாணயமாக, தங்கக் கட்டியாகவோ வாங்குவதை போல் டிஜிட்டல் கோல்ட் மற்றும் கோல்ட் ETF ஆகியவையும் சிறந்த முதலீட்டு ஆப்ஷனாக விளங்குகின்றன. அந்ச வகையில், டிஜிட்டல் கோல்ட் மற்றும் கோல்ட் ETF என்றால் என்ன, இரண்டுக்கும் வித்தியாசம் என்ன, எதில் அதிக நன்மை உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
டிஜிட்டல் கோல்ட் என்பது நீங்கள் தங்கத்தை மொபைல் செயலி மூலமாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ நேரடியாக வாங்குவது டிஜிட்டல் கோல்ட் எனலாம். ஆனால், தங்கம் உங்கள் கைகளுக்கு வராது. அதற்கு பதில் நீங்கள் செலுத்தும் தொகைக்கு ஈடான தங்கம் நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தால் தனியாக உங்கள் பெயரில் சேகரிக்கப்படும். அதன்பின் உங்களுக்கு தேவைப்படும்போது, அந்த தங்கத்தை விற்று பணமாகவும் பெற்றுக்கொள்ளலாம் இல்லையெனில் தங்க நாணயமாகவோ, தங்கக் கட்டியாகவோ கூட நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். அதாவது நீங்கள் ரூ.10 ஆயிரத்திற்கு தங்கம் வாங்குகிறீர்கள் என்றால், அதற்கு ஈடானா 24 காரட் தங்கம், அந்த நிறுவனத்தால் உங்களது பெயரில் தனியாக சேமிக்கப்படும்.
- இதை நீங்கள் ஆன்லைன் வழியாக எங்கிருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்.
- டிஜிட்டல் கோல்ட் என்பது 24 காரட் சுத்தமான மற்றும் உத்தரவாதமான தங்கமாகும்.
- இதற்கு உங்களுக்கு தனியே Demat கணக்கு தேவையில்லை.
- நீங்கள் மிக மிக குறைந்த அளவில் கூட முதலீடு செய்யலாம். உங்களிடம் 1 ரூபாய் இருந்தாலும், அதற்கு உங்களால் தங்கம் வாங்க முடியும். 0.1 கிராம் தங்கத்தை கூட உங்களால் வாங்க முடியும்.
- உங்களிடம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் டிஜிட்டல் தங்கம் இருப்பு இருக்கிறது என்றால், தேவைப்பட்டால், ஆர்டர் செய்து தங்க நாணயத்தையோ அல்லது தங்கக் கட்டியையோ பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இதற்கு சற்று கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது வரும்.
- நீங்கள் வாங்கும் டிஜிட்டல் தங்கத்தை சேமித்து வைக்க சில நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கலாம்.
- மேலும், நீங்கள் சேமித்து வைத்திருக்கும் டிஜிட்டல் தங்கத்திற்கான காப்பீடு என்பது மிக குறைவானதாக இருக்கலாம், அல்லது இல்லாமல் கூட போகலாம்.
- டிஜிட்டல் கோல்டை உடனே பணமாக்குவது என்பது சற்று சிரமமான காரியம். டிஜிட்டல் கோல்டை எந்த தளத்தில் வாங்குகிறீர்களோ, அதில்தான் விற்கவும் முடியும்.
- நீங்கள் டிஜிட்டல் தங்கத்தை வாங்கும் நிறுவனம் திவாலாகும்பட்சத்தில், உங்களின் முதலீடும் பாதிக்கப்படலாம்.
- தற்போது வரை டிஜிட்டல் கோல்டுக்கு, செபி போன்ற எவ்வித கட்டுப்பாட்டு ஆணையம் இல்லை. எனவே ஆபத்து சற்று அதிகம். சில நிறுவனங்களில், டிஜிட்டல் கோல்ட் விற்பனை ஒழுங்குமுறை தெளிவில்லாமல் இருந்ததை அடுத்து, அவர்கள் டிஜிட்டல் கோல்டை விற்பனை செய்ய ஆர்பிஐ தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோல்ட் ETF என்பது பங்குச்சந்தை சார்ந்த ஒரு வகையான மியூச்சுவல் ஃபண்ட் எனலாம். இதன் மதிப்பின் தங்கத்தின் விலையும் இணைக்கப்பட்டிருக்கும். அதாவது, தங்கத்தின் விலை உயர்ந்தால் Gold ETF விலையும் உயரும். இதை வாங்குவதற்கு உங்களுக்கு Demat கணக்கு தேவை. பங்குச்சந்தையில் பங்குகளை வாங்குவது போல் இதை வாங்க வேண்டும்.
கோல்ட் ETF, unit என்ற அளவுகோளில் வாங்குவீர்கள். அதாவது, கிராம் கணக்கில் இல்லாமல் unit என்ற கணக்கில் வரும். 1 unit கோல்ட் ETF என்பது 1 கிராம் தங்கத்திற்கு சமானம் எனலாம். அதாவது தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரம் என இருந்தால், 1 unit கோல்ட் ETF ரூ.10 ஆயிரமாகவே இருக்கும். இதில் நீங்கள் வாங்கும் தங்கம் 99.5% சுத்தமானதாகும்.
- தங்க நகைகளில் நீங்கள் முதலீடு செய்வதை காட்டிலும், இதில் விலை குறைவு எனலாம். காரணம், இதில் செய்கூலி, சேதாரம் இருக்காது. சிறிய அளவு Expense Ratio மட்டுமே இருக்கும்.
- இதுவும் 24 காரட் சுத்தமான தங்கமாகும். இது திருடு போய்விடுமோ என்றோ, லாக்கர் செலவுகளோ இல்லாமல் கவலையின்றி காணலாம்.
- நீங்கள் கோல்ட் ETF-ஐ பங்குச்சந்தையில் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். இதை ஈஸியாக நீங்கள் பணமாகவும் மாற்றலாம். அதாவது இதை நீங்கள் சந்தை விலையில் வாங்கவும், விற்கவும் செய்யலாம்.
- இதிலும் நீங்கள் குறைந்த அளவிலான தங்கத்தை வாங்கலாம். 1 கிராமுக்கும் குறைவான தங்கத்தை நீங்கள் வாங்கலாம்.
- இதற்கு உங்களுக்கு Demat கணக்கு தேவைப்படும்.
- நீங்கள் கோல்ட் ETF வாங்கும்போதும், விற்கும்போது தரகு கட்டணம் செலுத்த வேண்டும்.
- நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனம் வருடாந்திர வகையில் Expense Ratio-ஐ வசூலிப்பார்கள்.
- உங்களுக்கு கையில் தங்கம் கிடைக்காது.
உங்களுக்கு பங்குச் சந்தையில் அனுபவம் இருக்கிறது என்றால், ஈஸியாக முதலீட்டை பணமாக்க வேண்டுமென்றால், பாதுகாப்பான முதலீடு வேண்டுமென்றால் கோல்டன் ETF உங்களுக்கு சிறந்த நீண்ட கால முதலீட்டு ஆப்ஷன் ஆகும்.
அதேநேரத்தில் நீங்கள் சிறிய முதலீட்டாளர், உங்களிடம் Demat கணக்கு இல்லை என்றால் டிஜிட்டல் கோல்டை வாங்கலாம். ஆனால் இதில் பாதுகாப்பு சற்று குறைவு, நிறுவனங்கள் சார்ந்த ரிஸ்கும் இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ