குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்க வேண்டுமென்றால், அதற்கு லட்சங்களில் பணம் செலவழிக்க வேண்டி இருக்கும் என்பதை மறுக்க இயலாது. இந்த காலத்தில், பள்ளிக்கல்விக்கு கூட அதிகம் செலவாகிறது. அப்படி இருக்கும் போது உயர்கல்வி பற்றி கேட்கவே வேண்டாம். சிறந்த பேங்கிங் கொண்ட கல்லூரிகளில், உங்கள் குழந்தைகளை படிக்க வைத்தால், அவர்களது எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அதிலும் சிலருக்கு குழந்தைகளை வெளிநாடு அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்று கனவு இருக்கலாம். இவை அனைத்தையும் எளிதாக செய்ய, குழந்தைகள் பிறந்த உடனே, ஓரளவு நிதியை அதற்காக ஒதுக்கி வைத்ததோடு, அதனை பணத்தை பன்மடங்காகும் திட்டங்களில், முதலீடு செய்வது, உயர்கல்வி செலவை எளிதாக சமாளிக்க உதவும்.
லட்சங்களில், கோடிகளில் கார்பஸ் உருவாக்க உதவும் சில சிறந்த திட்டங்கள்
ஆயிரங்களை கோடிகளாக பெருக்க உதவும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்
சிறிய அளவிலான முதலீடுகள் மூலமும், பெரிய அளவில் கார்பசை உருவாக்கலாம். இதற்கு தேவை சரியான திட்டமிடல் மட்டுமே. ஆயிரங்களை கோடிகளாக பெருக்க, நீண்ட கால முதலீடு அவசியம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், 12% என்ற அளவில் மிகச்சிறந்த ரிட்டன்களை கொடுக்கின்றன. மேலும் இதில் கிடைக்கும் கூட்டு வட்டியின் ஆதாயம், பணத்தை எளிதில் பன்மடங்காக உதவுகிறது. குழந்தை பிறந்தவுடன், அவர்கள் கல்விக்காக என மாதம் ரூ. 2,000 முதலீடு செய்தால் கூட, அவர்கள் உயர்கல்வி படிக்கும் வயதை அடையும்போது, அந்தத் தொகை பல லட்சங்களாக பெருகி இருக்கும்.
பொது வருங்கால வைப்பு நிதி என்னும் PPF
மத்திய அரசு வழங்கும் பொது வருங்கால வைப்பு நிதி என்னும் PPF திட்டம், முழுமையான வரி விலக்கு பலனுடன், நல்ல வருமானத்தையும் அளிக்கும் மிகப் பாதுகாப்பான திட்டம். தற்போது 7.1% கூட்டு வட்டி வருமானத்தை வழங்கும் இந்த திட்டத்தில், செய்யப்படும் முதலீடு, அதில் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் முதிர்ச்சி தொகை என அனைத்திற்கும் முழுமையான வரி விளக்கம் உண்டு. இந்த திட்டத்தின் காலம் 15 ஆண்டுகள். இதில் அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்யலாம். இதன் மூலம், விரும்பிய படி, உங்கள் குழந்தைகளை மிகச் சிறந்த கல்வி நிலையத்தில் படிக்க வைக்கலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் என்னும் சுகன்யா சம்ருதி யோஜனா
செல்வமகள் சேமிப்பு திட்டம் என்னும் சுகன்யா சம்ருதி யோஜனா என்பது பெண் குழந்தைகளுக்கான திட்டம். இதில் பெண் குழந்தை பிறந்தது முதல் பத்து வயது வரை, அவர்களது பெற்றோர் அல்லது சட்டப்பூர் பாதுகாவலர், குழந்தையின் பெயரில் கணக்கை திறக்கலாம். 21 ஆண்டுகளில் இந்த கணக்கு முதிர்ச்சி அடையும். 8.2% வட்டி கிடைக்கும் இந்த திட்டத்தில் ஆண்டுதோறும், குறைந்தபட்சம் ரூ. 250 முதல் ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதன் மூலம், உங்கள் பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமண செலவுகளை எளிதாக சமாளிக்கலாம்.
யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் பிளான்கள் (ULIPs)
ULIP என்பது காப்பீடு மற்றும் முதலீடு இரண்டின் நன்மைகளையும் வழங்கும் திட்டம். பிரீமியத்தின் ஒரு பகுதி ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்குச் செல்கிறது, மீதமுள்ள தொகை பங்குச் சந்தை அல்லது பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதன் லாக்-இன் காலம் 5 ஆண்டுகள். முறையாக முதலீடு செய்தால், அது நல்ல வருமானத்தைத் தரும். ஆனால் அது ரிஸ்கையும் உள்ளடக்கியது, எனவே முதலீடு செய்வதற்கு முன் அதன் கட்டணங்கள் மற்றும் அபாயங்களைப் புரிந்துகொள்வது முக்கியம். 80C இன் கீழ் வரி விலக்கும் கிடைக்கிறது.
நிலையான வைப்புத்தொகைகள் (FD Investment Plans)
வங்கி நிலையான வைப்புத்தொகைகள் பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களாகும். அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையான வட்டி விகிதத்தில் வருமானத்தை வழங்குகின்றன. வருமானம் மற்ற திட்டங்களை விட குறைவாக இருக்கலாம் என்றாலும், அவற்றின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ரிஸ்க் விரும்பாத முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக அமைகிறது. சில வங்கிகள் குழந்தைகளுக்கான சிறப்பு நிலையான வைப்புத்தொகை திட்டங்களையும் வழங்குகின்றன, இது கல்விச் செலவுகளை சமாளிக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ